கல்விக்காவிரி...!
கல்விக்காவிரி-
இங்கே வணிகமாகி...
வறண்டு விட்ட பிறகு...
அந்த ஜீவநதிக்கே...
தண்ணீர் தாகம்!.
அந்நியக் கடலிடமா...
அநியாயமாய்க் கடன் கேட்பது...?
முலைப்பால் அருந்தாத மழலை
முனைப்பாக வளர்வது எப்படி?
முளையிலேயே ...
தாய்மொழிக் கல்வியை கிள்ளியெறிந்து-
மூளையை மழுங்கடித்தால்...
மூளியாகிவிடாதா தலைமுறை...?
இனியாவது-
சுரணை வரட்டும்...!
ஆமாம்...
சுத்தம் எப்பொழுது வரும்?
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக