சனி, 8 ஆகஸ்ட், 2015

மறக்க முடியுமா சசிபெருமாளின் மரணத்தை...?





சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி: சொந்த ஊரில் நல்லடக்கம்

காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு இறுதி அஞ்சலி
காந்தியவாதி சசிபெருமாள் உடலுக்கு இறுதி அஞ்சலி
சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் அவரது வீட்டுக்கு முன்பாகவே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மணி மண்டபம் கட்டப்படவுள்ளது.
முன்னதாக, அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் சசிபெருமாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது வீட்டுக்கு முன்பாக சசிபெருமாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சசிபெருமாள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இறுதி அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சசிபெருமாள் உடல் அவர் வீட்டுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார். இன்றோடு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். ஆனாலும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம் என்று விவேக் கூறியுள்ளார்.

சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி: திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

  

சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின் | படம்: ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுத்தது.
சசிபெருமாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின் |

சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சேலம் அருகேயுள்ள இமேட்டுக்காட்டில் வைக்கப்பட்டுள்ள சசிபெருமாள் உடலுக்கு ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சசிபெருமாள் மனைவி மகிழத்தை சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை அளித்தார்.
சசிபெருமாள் மரணத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் மறைந்த சசிபெருமாள் குடும்பத்துக்கு திமுக எப்போதும் துணையாக இருக்கும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இன்று மாலை ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக சார்பில் திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் மனு அளிக்க உள்ளார். அதில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.
சசிபெருமாள் என்ன நோக்கத்திற்காக போராடினாரோ அந்த நோக்கம் நிறைவேற திமுக பாடுபடும். 2016ல் திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்" என்று ஸ்டாலின் கூறினார்.


நினைவு மண்டபம் கட்ட ரூ. 5 லட்சம் நிதி

                                      
                                             
சசிபெருமாள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு

ரூ.5 லட்சம் நிதியை வைகோ, தொல்திருமாவளவன், குமரிஅனந்தன்,

தமீம் அன்சாரி, ராமகிருஷ்ணன் ஆகியோர் விவேக்கிடம் வழங்கினர். 

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

சசிபெருமாள் மகள் கவியரசியின் படிப்புச் செலவு முழுவதையும் பா.ம.க.

ஏற்கும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.

 பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை மறைந்த சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காடு கிராமத்திற்கு வந்தார். பின்னர், அவர் சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து சசிபெருமாளின் உருவப்படத்திற்கு அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு அவரது மனைவி மகிளம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த போராடி உயிரிழந்த, சசிபெருமாளின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக சென்னையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எழுதிய கடிதிய கடிதத்தை, அவர் வாசித்து காட்டினார்.


சசிபெருமாள் மகன் உண்ணாவிரதம்

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி, மறைந்த காந்தியவாதி சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சனிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள மேட்டுக்காட்டில் காந்தியவாதி சசிபெருமாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பாக அவரது மூத்த மகன் விவேக் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மாலையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது சகோதரி கவியரசி பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.         

கீழே கிளிக் செய்க

                                                                              






-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்‘

19 கருத்துகள்:

  1. சசி பெருமாளின் தியாகம் வீண் போகாது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவானின் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது !

      நீக்கு
  2. இவரது மரணம் 'குடி'மக்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அய்யா,
    தங்கள் பகிர்வு அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. அவரின் மரணம் உன்னதமானது அதை அரசியலாக்காமல் நல்லது செய்வதே அனைவரின் கடமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புளள சகோதரி,

      அவரின் தியாகம் நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒன்று. இதை அரசியல் கலக்காமல் அன்னாரின் குடும்பத்தை அனாதையாக்கமல் இருக்க வேண்டியதும் அந்தக் குடும்பத்திற்கு நல்லது செய்ய முன் வருவதும் தாங்கள் சொல்வது போல இந்த நாட்டின் கடமை. நாட்டு மக்களின் நன்மைக்காகத்தானே உயிர்துறந்திருக்கிறார்.

      நன்றி.

      நீக்கு
  5. மேலே உள்ள புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது அனைதச்து ஓட்டுப்பொறுக்கிகளும் காரணத்துக்காகவே வந்து இருக்கின்றார்கள் 80 தெரிகிறது அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
    தமிழ் மணம் 6 மனமே 6

    மணி மண்டபத்தைவிட அவரின் மகள் திருமணத்திற்கேகு பயன் பட்டால் நல்லது.

    தங்களின் தொடர் வனத்தில் பாமரனான நானும் இருப்பது கண்டு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      எல்லாமே காரணத்துக்காகவே நடக்கிறது. ஓர் உயிர் ‘மது விலக்கிற்காக’ போய்விட்டது. ஓட்டைப் பொறுக்கிக் கொண்டு போனவர்கள்...‘போனவன் போனானே...! வந்தாலும் வருவானே...!’ என்று எண்ணமுடியாத நிலைதான் இருக்கிறது...!

      நிற்கதியாக நிற்கும் குடும்பத்தின் நிலையை எண்ணி, அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யவது யார்...?

      “மணி மண்டபத்தைவிட அவரின் மகள் திருமணத்திற்கேகு பயன் பட்டால் நல்லது.”
      -நல்ல கருத்துதான். ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து இறந்தாரே திரு.சங்கரலிங்கனார்... அவரை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

      மணி மண்டபம் வரும் சந்ததியின் நினைவில் நிற்க பயன்படும்...! மற்றபடி மனம் உள்ளவர்கள் உதவும் தொகைகள் தாங்கள் சொல்வது போல குடும்பத்திற்குப் பயன்படட்டும்.

      நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஐயா வணக்கம்.

    வாழும் வரை அவரோடு தோள்கொடுக்காதவர்கள் இன்று அவர் பாடைக்குத் தோள் கொடுக்கிறார்கள்.
    பல இலட்சம் பேரைத் தொண்டர்களாகக் கொண்டுள்ள கட்சிகள் இந்தத் தனிமனிதனோடு இணைந்திருந்தால் இம்மனிதருக்கு இந்நிலை நேர்ந்திராது.

    நான் ஒரு முறை எழுதியிருந்தேன்,

    “ நல்லோர் பலரை நசுக்கி அழித்தபின்
    எல்லாப் புகழ்தரும் ஏழைத் தமிழகம் ”

    என்று.

    பாரதியின் காலத்திலிருந்தே இந்நிலைதான்.

    இவ்வவல நிலை மாறவேண்டும்.


    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம்.

      வாழும் வரை போராடு
      வழி உண்டு என்றே பாடு
      இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
      மழை என்றும் நம் காட்டிலே


      மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
      சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
      ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே....!

      ‘அறிவிக்கப் படாத
      அந்த அணிவகுப்பு-
      அசைக்க முடியாத
      அந்தப் படையெடுப்பு-

      கோபம் கொண்ட
      அந்த இளைஞர்கள்
      குமுறி வருகிறார்கள்!

      எவரும்
      உறுப்பினர் சேர்க்காமலேயே
      அவர்களுடைய
      எண்ணிக்கை
      அதிகமாகி வருகிறது.

      தேசம்
      அவர்களுக்கொரு
      வழிகாட்டாவிட்டால்-

      தேசத்துக்கே
      அவர்கள் ஒரு
      வழிகாட்டுவார்கள்!

      எந்த தேசத்திலும்
      முன்னறிவிப்புக்
      கொடுத்து விட்டும்
      முகாந்திரங்கள்
      சொல்லிவிட்டும்
      வருவதில்லை-
      புரட்சி!’

      -மு.மேத்தா...“அவர்கள் வருகிறார்கள்“

      தங்களின் வருத்தத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உங்களின் இந்த பதிவையும், பதிவிற்கு வந்த கருத்துரைகளுக்கான மறுமொழிகளையும் படித்தவுடன் நினைவுக்கு வந்தவை “வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்? “ என்ற வரிகள்தாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

      களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை


      அச்சம் என்பது மடமையடா

      அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு

      தாயகம் காப்பது கடமையடா


      -மிக்க நன்றி.

      நீக்கு
  9. நண்பரே! வேதனை....இதுவரை எங்கோ இருந்த அரசியல் வாதிகள் அவர் மறைந்ததும் வந்து நிற்கின்றனரே! இதை என்னவென்று சொல்ல? இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது இந்த மதுவிலக்கு ஆதரிப்போம் என்று. அவர் இருந்தவரை, போராடியவரை ஆதரிக்காமல்....கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல்...இப்படித்தான் ஒவ்வொரு நிகழ்வும்....இந்த நிலை மாறினால் தான் நாம் முன்னேருவோம்....

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    உண்மைதான். ஓர் உயிர் போனதற்கு அப்புறம் ஒப்பாரி வைத்து அழுது புரண்டாழும் மாண்டார் மீண்டும் வரப்போவது இல்லை. சசிபெருமாளின் மரணத்திற்கு ஒரு சிலரைத்தவிர யாரும் முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. அதிலும் அரசியல் இருக்கிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...