புதன், 18 அக்டோபர், 2017

எனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் ! (3)

தீபாவளி  அன்று...  மூன்று திரைப்படங்கள்!

ஒரு பார்வை



தீபாவளி  அன்று ...!

பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப்  படித்துக்  கொண்டிருந்த எழுபத்து ஒன்பதுகளில்...

தீபாவளி வருவதற்கு முன்னதாகவே எல்லோரும்  கருப்புத் துப்பாக்கி வாங்கினால் நான் வெள்ளைத்  துப்பாக்கியை வாங்கி வைத்து...

சுருள் கேப் ரோலாக வைத்துக் கொண்டு அதைச் சுட்டுச் சுட்டு  மகிழ்வதும்...
தீபாவளி அன்று கம்பி மத்தாப்பு, சாட்டை, சங்கு  சக்கரம்,  கலசம்,  பாம்பு மாத்திரை இதை வைத்துக் கொளுத்துவதும்... வெடிவெடிப்பவரை வேடிக்கை பார்ப்பதும் உண்டு.



எது எப்படியோ அப்பொழுதெல்லாம்  தீபாவளி நாளில்... அன்றைய தினம் சினிமா பார்ப்பது கண்டிப்பாக நடக்கும்.




அன்றைய தினத்தில்  மணப்பாறை  பாலகிருஷ்ணா திரையரங்கில் (தற்பொழுது குமரப்பா ஷாப்பிங் மால்)  காலை 10.00 மணிக் காட்சி   ‘வண்டிக்காரன் மகன்’   1978 ஆம் ஆண்டு அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த ஜெய்சங்கர், ஜெயசித்ரா நடித்த படம் பார்த்தேன். 




‘வண்டிக்காரன் மகன்’ மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே....


எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வாலி இயற்றிய பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியனும்  வாணி ஜெயராமும் பாடும் பாடல்

பாடலைக் கேட்க கிளிக் செய்க 





                                                                     
மதியம் மேட்னி ஷோ 2.00 மணிக்கு இந்திரா திரையரங்கில் (தற்பொழுது அதே திரையரங்காக) சிவாஜி நடித்த    ‘என்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் பார்த்தேன்.



தங்கங்களே நாளை தலைவர்களே..
படம் : என்னைப் போல் ஒருவன் (18.03.1978)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு : நடிகர் திலகம் - உஷாநந்தினி 


பாடலைக் கேட்க கிளிக் செய்க




                                                                             

ஒரே நாளில் இரண்டு படம் முதன் முதலில் பார்த்த மகிழ்ச்சியுடன் எனது பெரியம்மா வீட்டில் உணவருந்தினேன்.

எனது சகோதரி  சினிமாவிற்குச் செல்வதாகப் புறப்பட்டு என்னையும் அழைக்க, நானும்  மீண்டும் படம் பார்க்கப் புறப்பட்டேன் சாந்தி டூரிங் டாக்கிஸ்க்கு.    (தற்பொழுது அந்த டூரிங்க டாக்கிஸ் இல்லை) தீபாவளி அன்று ஐந்து காட்சிகள் திரையரங்குகளில் ஓட்டுவார்கள்)

அன்றைய இரவு சிவக்குமார் நடித்த ‘கவிக்குயில்’ படம் பார்த்தேன்.


1977 ஆம் ஆண்டு  தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த கவிக்குயில் திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீதேவி,  படாபட் ஜெயலட்சுமி   நடித்த படம் பார்த்தேன்.

                                                                               

கண்ணதாசனின் சீடர் பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடல் வரியில் இளையராஜாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் இது.

பாடலைக் கேட்க கிளிக் செய்க 





ஒரே நாளில் மூன்று படம் பார்த்த அந்தத் தீபாவளி
இன்று-
என் நினைவில்  நிழலாடுகின்றன...

அந்தச் சாதனை இதுநாள் வரை என்னால் முறியடிக்கப்படவே இல்லை.




-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...