புதிய உடன்படிக்கை
காட்சி – 2
இடம்: மாளிகை
பாத்திரங்கள்: ஜான்சன்,
ஜான்சனின் தந்தை ஆரோக்கியசாமி, ஜாக்லின் சித்ரா, ஜாக்லின் சித்ராவின் தந்தை ஞானசௌந்தர், நண்பன்
கனகராஜ்.
(மணமக்கள் இருவரும் சேபாவில்
அமர்ந்திருக்கிறார்கள். மணமனின் அப்பா
ஆரோக்கியசாமி அருகில் வருகிறார்.)
ஆரோக்கியசாமி:
ஜான்சன்... ஜான்சன்... மாமா ஊருக்கு பேறேன்னு சொல்றாரு...
(மணமகளின் தந்தை ஞானசௌந்தர் வீட்டிற்குள்ளே
இருந்து வருகிறார்)
ஜான்சன்:
ஏங்க மாமா... இருந்திட்டு போலாமே...
ஆரோக்கியசாமி: என்னடா...
ஒரு மரியாத இல்லாம... உக்காந்திட்டு... எழுந்திரிடா...
ஞானசௌந்தர்: இருக்கட்டும்... இருக்ட்டும்... காலையில
இருந்து கால்கடுக்க நின்னு நின்னு... பாவம்... மாப்பிள்ள நீங்க உக்காருங்க...
அங்கே தலைக்கு மேல வேலையிருக்கு... அம்மா... ஜாக்லின்... நா வரட்டுமாம்மா...
ஜாக்லின்: அப்பா...
(பாசத்துடன் அழுகிறாள்)
ஞானசௌந்தர்: அழாதேம்மா...
(கண்ணீரைத் துடைத்து விடுறார்). என்ன நா
தூரத்திலையா இருக்கேன்... பத்து மையிலுக்கும் பக்கம்தான்... அப்புறமெதுக்கும்மா...
அழறாய்... கண்ணை துடைச்சுக்க...
ஆரோக்கியசாமி:
ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு... சந்தோசமா வழி அணுப்பி வைங்க... (இருவரும் ஞானசௌந்தர்
காலில் விழுகிறார்கள்)
ஞானசௌந்தர்:
நல்லா... தீர்க்காயுசா... நல்லா இருக்கணும்... நீங்க நல்லா இருப்பீங்க...
எழுந்திருங்க... (ஆசிர்வதித்து அவர்களை எழுந்திருக்கச் செய்கிறார்.) ம்...ம்... இதெல்லாம் பாக்க ஜாக்லினோட அம்மா
உயிரோட இல்ல...
ஆரோக்கியசாமி: இவனோட அம்மாவுக்கும் கல்யாணத்த கண்ணுல பாக்கிற பாக்கியம் கொடுத்து
வக்கல... என்ன பண்றது நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்... பழையதெல்லாம் நெனச்சு
என்ன பண்றது...?
ஞானசௌந்தர்: சரிங்க...
எ...பொண்ணு ஜாக்லின் சின்னப் பொண்ணு... அவனுக்கு ஒன்னும் தெரியாது... வயசாயிடுச்சு...
வளர்ந்திட்டா... டீச்சர் வேலையும் பாக்கிறா... ஆனாலும் பச்சப்புள்ளங்க... பொண்ணக்
கண்ணு கலங்காம பாத்துக்கங்க... (சரியென மாப்பிள்ளை தலையசைக்கிறார்)
ஆரோக்கியசாமி:
நா இருக்கேன்ல்ல... இனி ஒங்க பொண்ணு இல்ல... எ பொண்ணு... போதுமா...?
ஞானசௌந்தர்: அது
போதும்... அது போதும்... நான் வர்றேன்... எல்லாத்துக்கும்... போயிட்டு வர்றேன்...
(கையெடுத்து கும்பிட்டபடி வெளியே
செல்கிறார். சிறிது நேரத்தில் நண்பன்
கனகராஜ் உள்ளே நுழைகிறான்)
ஜான்சன்: வாடா கனகராஜ்...
கனகராஜ்: வர்றேம்ப்பா...
ஜான்சன் கொஞ்சம் இப்படி வா...(ஜாக்லினைப் பார்த்து) சாரி... தப்பா
நெனச்சுக்காதிங்க... (தனியாக ஜான்சனை அழைத்து) என்னடா... பொழுதும்
சாய்ஞ்சிடுச்சு... பிரண்ட்ஸ் எல்லாம் எப்ப... பார்ட்டி... பாட்டீன்னு
பறக்கிறாங்க...
ஜான்சன்: ஒங்க
அவசரம் புரியுது... எல்லாரும் செவனா ஹோட்டலுக்கு போங்க... நா அங்கே வந்திடுறேன்...
ஓ...கே...
கனகராஜ்:
தேங்யுப்பா... தேங்யு... (ஜாக்லினை பார்த்து) சாரி பார் த டிஸ்டப்மெண்ட்ஸ்...
அப்போ போயிட்டு வர்றேங்க...
(வெளியில் கனகராஜ் செல்கிறான்)
ஜான்சன்: (ஜாக்லின்
அருகில் வந்து) கொஞ்சம் எனக்கு அவசரமா வெளியே வேலை இருக்கு... நா போயிட்டு வர்றேன்...
ஆரோக்கியசாமி:இன்னக்கி
என்னடா வேலை...?
ஜான்சன்: போனவுடனே
வந்திடுறேன்ப்பா...
ஆரோக்கியசாமி: எப்பவுமாதரி
கண்ட கண்ட பயலுகளோட சுத்திட்டு... கால நேரம் பாக்காம வர்றத விட்டிடுடா... டே...! இனி நீ ஒன்டிக்கட்ட இல்ல... ஆமா... அதை
ஞாபகத்தில வச்சுக்க... என்ன தெரியுதா...?
ஜான்சன்: சரிப்பா...
கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்...
ஜான்சனோடு நானும் ஹோட்டலுக்கு செல்கிறேன் (காரணத்தோடுதான்)
பதிலளிநீக்குத.ம.வ.போ
அன்புள்ள ஜி,
நீக்குமுதலில் வந்து ஓட்டுப் போட்டுவிட்டு காரணத்தோடு செல்லும் தங்களை நண்பர்கள் குழு இனிதே வரவேற்கிறது.
நன்றி.
அருமை ஐயா
பதிலளிநீக்குதொடர்கிறேன்
தம +1
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குதாங்கள் தொடர்வதற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள முனைவர் அய்யா,
நீக்குதாங்கள் தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றி.
கால்கட்டு போட்டாச்சு ,அடுத்து ?
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
பதிலளிநீக்குகால் போன போக்கிலே மனம் போகலாமா...?
கல்யாணப் பார்ட்டியா அடப்ப்பாவமே...தொடர்கின்றோம்
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குகல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் இந்த கௌரவப்ரசாதம் இதுமட்டுமா எனக்குப் போதும்...?
தொடர்வதற்கு மிக்க நன்றி.