நீங்க நினைக்காத நெஞ்சம்...! (12)
ரெங்கராஜ் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்தவர் குட்டிபோட்ட யானை போலக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருந்தார். பயத்தில் நடுங்கிக்கொண்டு என்ன நடந்ததோ நடக்கப்போகிறதோ என்று பயந்த சசிரேகா ஒன்றும் தெரியாமல் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய்... என்னை என்ன ஒன்னும் தெரியாத கேனப்பயன்னு நெனச்சுட்டியா...? குட்டி நீ பதினாறு அடின்னா... நா அதுக்கு மேலன்னு தெரிஞ்சுக்க...! ஆமா... இப்பச் சொல்றேன்... கேட்டுக்கோ... அந்தப் பய... அதான் ஒன்னோட காதலன்... பேரு என்னா... தமிழ் இனியனா... ? ம்...ம்... இனி அவன்...உயிரோட இருக்கிறதும்... செத்தும் போறதும் எ கையில இல்ல... ஒ கையிலதான் இருக்கு...! புரியலை... அவன் இப்ப என்னோட கஸ்டடி...” ரெங்கராஜ் சொல்வதைக் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு கேவிக்கேவி அழுதாள் சசிரேகா.
“நா கொஞ்சம் ஏமாந்திருந்தா எ தலையில மண்ணவாரிப் போட்டிருப்பியேடி... பாவி மகளே...! அவன்... குருவிக்குஞ்சு மாட்டின மாதிரி... என் கையில சிக்கிஇருக்கான்... இப்ப அவன் உயிரோட இருக்கானா...? இல்லையான்னு நீ சொல்லுப் பார்ப்போம்...! எங்கே சரியாச் சொல்றியான்னு பார்ப்போம...!”
“அவர ஒன்னும் பண்ணிடாதீங்க...” பதறிப்போய் அழுதுகொண்டே சசிரேகா கெஞ்சிக் கேட்டாள்.
“அப்ப நீ ஒன்னு பண்ணணும்...”
“என்ன...?”
“வேறென்ன... ஒன்னோட அத்தமகன் அதான் கல்யாணராமன நீ மறுப்பேதும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கனும்... அவ்வளவுதான்...”
“மாட்டேன்...”
“மாட்டேன்னு மறுத்தா... மறுகணமே... அவன் எமலோகத்துல இருப்பான்... அதுதான் நடக்கனுமுன்னு நெனச்சா... அப்புறம் ஒ விருப்பம்... நா என்னத்தச் சொல்லறது... அவ தலை எழுத்து அவ்வளவுதான்... இப்பவே பாதி உயிராத்தான் இருக்கான்...”
சசிரேகா தரையில் சரிந்தவள் முழங்காலைக் குத்திட்டவாறு உட்கார்ந்தவாறு முகம் புதைத்து அழுது கொண்டே இருந்தாள்.
“ஏன் வெட்டியா அழுவுறா...? இதுதான் ஒ முடிவுன்னா அவன் உயிரோட இருக்கமாட்டான்... இதுதான் என்னோட முடிவு... அவன் உயிரோட இருந்தாத்தானே நீ நெனச்சது நடக்கும்...! நிச்சயம் அந்தக் கனவு பலிக்காது... அது நடக்காது... நடக்கவும் விடமாட்டேன்...”
“எனக்கு அவரு உயிரோட இருக்கணும்...! என்னால அவர் சாகக் கூடாது.. ...”
“இப்பத்தான் நல்ல பொண்ணு மாதிரி .. புரிஞ்சு பேசுறாய்... அப்ப நா சொல்ற மாதரி ஒ அத்த பையன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க... அப்பத்தான் அவன் உயிரோட இருப்பான்...”
“எனக்கு அவர் உயிர்... ! அவரோட உயிர்தான் முக்கியம்...! அவரோட உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது...”
“அதுக்கு நா உத்திரவாதம் தர்றேன்... ஆனா ஒன்னு இந்தக் கல்யாணம் முடியிற வரைக்கும் அவன வெளியில விடவும்மாட்டேன்... எங்க இருக்கிறான்னும் சொல்லவும் மாட்டேன்...!”
“அவர எதுவும் செய்யக்கூடாது... அவர வெளியே விட்டிடனும்...”
“கல்யாணம் முடிஞ்சதுக்கும் அப்புறம்...”
“கண்டிப்பா...?” சசிரேகா கை நீட்டிக் கேட்டாள்.
“கண்டிப்பா...!” ரெங்கராஜ் சசிரேகாவின் கை மேல் அடித்துச் சொன்னார்.
“எங்கே அவர வச்சுருக்கீங்க...” சசிரேகா அழுத முகத்தைத் துடைத்துக் கொண்டே கேட்டாள்.
“அதப் பத்தி நீ கவலப்பட வேண்டாம்... என் வாக்க நான் காப்பாத்துவேன். உன் வாக்க நீ காப்பாத்தப் பாரு... எல்லாம் ஒ கையிலதான் இருக்கு... எதாவது எடக்கு மொடக்கு பண்ணினா... அடுத்த நொடியே அவனப் பரலோகத்துக்கு அனுப்பிச்சிடுவேன் .... அதுக்கு நா பொறுப்பில்லைன்னும் சொல்லலாம்... இல்ல நான்தான் பொறுப்புன்னு சொல்லலாம்...”
“ இதுக்காக அவரு உயிர் போறத ஒருகாலும் ஏத்துக்க முடியாது...! எனக்கு அவரு உயிர்தான் முக்கியம்...! சரி... ஒங்க இஷ்டப்படியே நடத்துங்க...! ” வெளியில் வார்த்தை வராமல் தடுமாற... தட்டுத்தடுமாறி சசிரேகா சொன்னாள்.
“சபாஷ்... இதத்தான் ஒன்னிட்ட இருந்து நா எதிர்ப்பார்த்தேன்...! படிக்கிற காலத்தில காதலிக்கிறதெல்லாம்... எல்லோரும் செய்றதுதான் சகஜம்தான்... நூத்துக்குத் தொண்ணூறுக்கு மேல அந்தக் காதல்லாம்... கல்யாணத்தில முடியிறது இல்லங்கிற உண்மை... உனக்குத் தெரியுமா...? நீ சின்னப்பிள்ள ஒனக்கு உலக அனுபவம் பத்தாது...! இதுதான் யதார்த்தம்... யதார்த்தம்தான் வாழ்க்கை...!”
“அவருக்கு எந்த ஆபத்தும் நடக்கக்கூடாது... அதுனாலதான் இதுக்குச் சம்மதிக்கிறேன்...”
“அதுக்கு நான் உத்தரவாதமுன்னு சத்தியம் செஞ்சு கொடுத்திட்டேன்ல்ல... அப்புறமென்ன... நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு குடுக்கணும்...” ரெங்கராஜ் கேட்க சசிரேகா என்ன என்பது போலப் பார்த்தாள்.
“கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்காவுக்குப் போறீங்க... அப்புறம்... ஒன்னோட இந்தக் காதல் விவகாரத்தக் கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணராமன்ட்ட எந்தச் சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது...!” என்று சொல்லிக் கொண்டே அவள் அம்மா போட்டாவை எடுத்து அவள் முன் நீட்டிக் கேட்டார்.
சசிரேகா தயங்கியபடி அழுது கொண்டே நின்றிருந்தாள்.
“அம்மா படத்தின் மேல் சத்தியம் செய்து கொடு” என்று அப்பா ரெங்கராஜ் கேட்டார். சசிரேகாவின் கண்கள் குளமாகி நீர் வழிய அவளை அறியாமல் அவளது கரம் நடுக்கத்துடன் அம்மாவின் புகைப்படம் மீது பதிந்தது.
வைகறைப் பொழுதில் பாலை வாங்கிக் கொண்டு அலமேலு வீட்டிற்குள் நுழைந்தாள்.
ரெங்கராஜ் அலமேலுவிடம் , “சீக்கிரம் டீ... போட்ட கொண்டு வா... கல்யாணத்திற்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கிறது... நெறைய வேலை கிடக்கிது... மசமசன்னு நிக்காம சீக்கிரம்... டீ வரட்டும்...” அதட்டினார்.
“சரிங்கய்யா... இதோ சுருக்க போட்டுக் கொண்டு வந்திடுறேன்” என்று அடுக்களைக்குள் புகுந்தாள் அலமேலு.
சசிரேகா தன் அறைக்கள் சென்று கட்டிலில் விழுந்தாள்.
கல்யாண வேலைகள் எல்லாம் தடபுடலாக நடந்தன. நகைகள் மற்றும் கல்யாணப்புடவை எல்லாம் கல்யாணராமனும் அவனின் அம்மாவும் பார்த்து எடுத்தால் போதும் என்று ரெங்கராஜ் சொல்ல எல்லாம் எடுத்து ஆகி விட்டன.
ஒரே பொண்ணு என்பதால் இருக்கிறது நா சம்பாதிச்சதெல்லாம் அவளுக்குத்தான் என்று பெருமைப்பட்டுக் கொண்டார் ரெங்கராஜ்.
ஒரே பொண்ணு என்பதால் இருக்கிறது நா சம்பாதிச்சதெல்லாம் அவளுக்குத்தான் என்று பெருமைப்பட்டுக் கொண்டார் ரெங்கராஜ்.
“சசிரேகாவிற்குப் பாஸ்போர்ட் இருக்கு.... கல்யாணம் முடிஞ்ச கையோட அவள அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப்போக ...‘விசா’ உடனடியாக் கிடைக்க ஏற்பாடு பண்ணு... கொஞ்ச நாள் லீவுலதானே வந்திருக்கிறாய்...” என்று மாப்பிள்ளையிடம் வரிசையாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் பட்டியலிட்டார்.
“எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன்... நீங்க ஒன்னும் கவலைப்படவேண்டாம் மாமா...” என்று ரெங்கராஜ்க்கு ஆறுதல் வார்த்தைகூறி கல்யாணராமன் தைரியப்படுத்தினார்.
ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபம் சசிரேகாவின் திருமணத்திற்காகத் தயாராகி இருந்தது. மண்ணிலிருந்து கனியத் தயாராய் இருந்த இரு வாழைக்கன்றுகள் வெட்டப்பட்டு பந்தலின் இருபுறமும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
வ(ள)ரும்...
படிக்க ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வ(ள)ரும்...
படிக்க ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
ரோஸியின் நிலை கவலையாகத்தான் இருக்கின்றது நல்லதே நடக்கும் என்று எதிர் பார்க்கிறேன் மணவையாரே விதியை நல்லபடியாக எழுதுங்கள்
பதிலளிநீக்குத.ம.வ.போ
அன்புள்ள ஜி,
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
படித்து வருகிறேன் அய்யா!
பதிலளிநீக்குத ம 3
அன்புள்ள அய்யா,
நீக்குதாங்கள் தொடர்ந்து படித்து வருவதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மகாலில் இதோ நானும் காலடி எடுத்து வைத்து விட்டேன் ,அடுத்து ,நடக்கப் போவது என்ன :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குமணவிழாவிற்கு மகாலில் காலடி பதித்ததற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ரோசி பாவம்...சசிரேகா..ம்ம்ம் பாவம்தான்...என்ன முடிவோ காத்திருக்கின்றோம்..
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் எண்ணத்திற்கும் காத்திருப்பிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
நல்லதே நடக்கட்டும்
பதிலளிநீக்குநன்றி ஐயா
தம +1
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அப்பாடா! கதையின் அத்தனை தொடர்களையும் மொத்தமாக படித்து விட்டேன்.அடுத்து என்னானது எனும் எதிர்பார்ப்பை தரும் விதமாய் முடிவில் கொக்கி போட்டே முடிக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குஇது கதையா,,? நிஜச்சம்பவமா? நடந்ததை அப்படியே எழுதுவது போல் படிக்கும் போது அத்தனை எதிர்பார்ப்பை தருகின்றது. தமிழுக்கு என்னாகும்? அவன் அம்மா என்னானார்? சசி ரேகாவின் கல்யாணம் நடந்ததா?
தொடருங்கள்.!
அன்புள்ள சகோதரி,
நீக்குதாங்கள் கதையின் அத்தனை தொடர்களையும் மொத்தமாகப் படித்து விட்டேன் என்று சொல்லியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. தங்களின் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எனது நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்கிறேன்...தொடருங்கள்...!
பல தொடர்களையும் சேர்த்தப் படித்தன். அருமை அருமை
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
அன்புள்ள சகோதரி,
நீக்குதாங்கள் பல தொடர்களையும் சேர்த்துப் படித்ததற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
வரும் புத்தாண்டு வளமாக அமைய என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
அன்புள்ள அய்யா,
நீக்குமிக்க நன்றி.