ஒரு தாயின் தாலாட்டு
(மணவை ஜேம்ஸ்)
பல்லவி
கன்னிமரி பாலகனே... மன்னவனே கண்ணுறங்காயோ...
ஆராரி....
ஆரிரரோ.... ஆரிரரோ.... ஆரிரோ...!
அனுபல்லவி
விண்மீன் வழிகாட்ட ஞானிகள் வணங்கினரோ
வானத்துத் தூதரெல்லாம் வந்து வாழ்த்தினரோ
மாட்டுத் தொழுவத்திலே பிறந்த மேய்ப்பரென
மந்தையை மேய்க்க
வந்தாயோ............................?
(கன்னிமரி
சரணம்
தாலட்டத் தொட்டிலில்லை ஆயனின் குடிலில்
கருவாகி உருவானாய் மனிதனின் வடிவில்
ஏழையாய் ஏன்பிறந்தாய் என்தேவமகனே
சொர்க்கமே ஏழைக்கென சொல்வதற்கோ?
(கன்னிமரி
(கன்னிமரி
உன்னைஎன்ன சொல்லிநான் தாலாட்ட
வீதியில்வாழும் ஏழைகள் நாங்கள்
ஏழையாகி எங்களைமீட்க வந்தாயோ?
உன்னை என்ன சொல்லிநான் தாலாட்ட?
(கன்னிமரி
========================================================================
பாலனுக்குக் கும்மி
மணவை ஜேம்ஸ்
தன்னானே நானானே...
தானானே நானானே....
தேடிஓடி வாருங்களேன்
தேவபாலன் பிறந்திருக்கான்
வழிகாட்ட வந்திருக்கும்
நட்சத்திரமெனப் பாடுங்களேன்
ஆடிப்பாடி மகிழுங்களே
ஆனந்தக் கும்மிகொட்டுங்களேன்.
(தன்னானே...
தன்னானே நானானே...
தானானே
நானானே...
மூடுபனியில் ஆடும்மலரே
மூடப்பழக்கம் போக்க வந்தாயே
பிஞ்சுவிரல் அசைந்தாலே
பிணியெல்லாம் அகன்றிடுமே
உந்தன்விழி திறந்தாலே
உலகெல்லாம்
விழித்திடுமே...!
( தன்னானே...
( தன்னானே...
தன்னானே நானானே
தானானே நானானே
நல்லவிதை விதைக்கவந்த
நம்பிக்கை நாயகனே!
மெழுகாக எரிந்திங்கு
இருளினைப் போக்கவந்த
உலகத்தின் ஒளிவிளக்கே!
உவமையின் தனிச்சிறப்பே!
(தன்னானே....
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
அருமை
பதிலளிநீக்குநன்றி அய்யா.
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதந்தை இயேசுவைத் தாலாட்டித் தூங்கவைத்தே
சிந்தை நிறைத்தீர் சிறந்து!
கும்மிக் கவிகேட்டுக் கொண்டோம் குதூகலம்!
எம்மையும் ஆடவைத்தீர் இங்கு!
ரசிக்கவைத்த பாடல்கள்! அருமை ஐயா!
வாழ்த்துக்கள்!
அன்புள்ள சகோதரி,
நீக்குவெண்மதியின் பாராட்டு வெண்பாவின் எழில்கண்டு
கண்மணியே புன்சிரிப்பைக் காட்டு.
நன்றி.
தாயின் தாலாட்டு கேட்டேன் அருமை மணவையாரே...
பதிலளிநீக்குஅன்புள்ள ஜி,
நீக்குதாயின் தாலாட்டைக் கேட்டு பாராட்டியதற்கு
நெஞ்சார்ந்த நன்றி அய்யா.
தாலாட்டும் கும்மியும் அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா.
நீக்குநாட்டுப்புற மெட்டில் அமைந்த இரு பாடல்களும் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள். (தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?)
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தமிழ் மணத்தில் இணைக்க முயற்சிக்கப்பட்டு இருக்கின்றது.
நன்றி.
குழந்தை யேசுவின்
பதிலளிநீக்குகுதுகூலக் கவி
மதுமலர் கவியாகும்
புவியில் என்றும்!
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமதுமலர் கவியென்று...
நம்பியவர்
புதுமலரென்று பூரித்ததுகண்டு
உள்ளம் மகிழ்ந்தேன்.
நன்றி.
ஆஹா!! நல்ல முயற்சி அண்ணா!! அருமை:)
பதிலளிநீக்குஅன்புச் சகோதரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அருமை சார்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகுழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
நன்றியுடன்,
புதுவை வேலு
குழல் ஊதும் கண்ணனின் புத்தாண்டு வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஅய்யா வணக்கம்!
பதிலளிநீக்குஎனக்குமுன் இத்தனை பின்னூட்டங்களா?
நான்தான் ரொம்பப் பிந்திவிட்டேன் இம்முறை!
தங்களின் இசைப்பாடல்கள் அருமை.
“““ஏழையாய் ஏன்பிறந்தாய் என்தேவமகனே
சொர்க்கமே ஏழைக்கென சொல்வதற்கோ?““““
என்றவரிகள் மிகவும் அருமையாக இருந்தது அய்யா!
பகிர்விற்கு நன்றி!
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
இரு பாடல்களும் அழ்கான நாட்டுப்புற மெட்டில் அமைந்து மெட்டுப் போடத் தோன்றுகின்றாது..நண்பரே!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு