புது தில்லி:இந்தியாவில்
தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய
தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் செல்போன் சேவை அறிமுகம்
செய்யப்பட்ட போது, 2003ம் ஆண்டில் 10
இலக்க எண்களைக் கொண்ட செல்போன் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
செல்போன் வாடிக்கையாளர்களின்
அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவும்
செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் செல்போன்சேவையின் அசுர
வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடு காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும்
மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும்
ஏற்பட்டது.
இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல்
ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத்
தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்தது.
இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை 'ஊட்ஸல் ஆல்ப்ஸ்' என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் 'ஊட்சி' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா? சிவப்பு மானின் இறைச்சி. அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள். ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.
"ஆ, ஈ, உ ஊ" ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.
டிஸ்கவரி சேனலின் தொல்லியல்துறை பொறுப்பாளரான ரோசல்லா லோரன்ஸி இதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். ஊட்சியின் குரல் தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பது போன்றே உள்ளதுதான் இதில் சிறப்பே!
பாடலாசிரியர் என்கிற நிழல் விழுவதற்கு முன்பே கவிஞராக கண்டறியப்பட்டவர் நா.முத்துக்குமார்.
41 வயதுதான் ஆகிறது நா.முத்துக் குமாருக்கு. அதற்குள் இயற்கை மடித்து வைத்துக்கொண்டுவிட்டது. ‘மெய் என்று மேனியை யார் சொன்னது?’ என்று கவிஞர் வாலி பாடியதுதான் ஞாபகத்தில் மின்னி மறைகிறது.
1989-ல் நா.முத்துக்குமாரின் ‘உறுத்தல்’ என்கிற முதல் கவிதை ஏர்வாடி ராதா கிருஷ்ணன் நடத்திவரும் ‘கவிதை உறவு’ இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து இவரது ‘தூர்’ என்கிற கவிதையை எழுத்தாளர் சுஜாதா ஒரு மேடையில் சிலாகித்துப் பேச, அந்தத் தேன் தேதியில் இருந்து நா.முத்துக்குமாரின் மீது பலரது கவனம் குவியத் தொடங்கியது.
கல்லூரியில் இவர் படித்ததென்னவோ இயற்பியல்தான். ஆனால் நிமிடந்தோறும் இலக்கியம் நுகர்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்’ என்று உரக்கச் சொல்லி பல மேடைகளில் உலா வந்தவர்.
பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோருடனும் சிநேகிதம் போற்றியவர். வயதுக்கு ஏற்றவாறு அண்ணன் என்றோ, தம்பி என்றோ முறை கொண்டாடியவர். நல்ல இன்பன்!
‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ ஆகிய இவரது ஆரம்பகால கவிதைத் தொகுப்புகள் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் பாராட்டுப் பெற்ற படைப்புகள். இதைத் தொடர்ந்து ‘கிராமம் நகரம் மாநகரம்’, ‘ஆனா ஆவன்னா’, ‘பாலகாண்டம்’, ‘அணிலாடும் முன்றில்’, ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’, ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ போன்ற அத்தனைத் தொகுப்புகளும் தமிழுக்கு புதிய வெளிச்சங்களை வழங்கின.
இலக்கியச் சிறகணிந்து திரைவானில் பறந்து திரிந்த தனிப் பறவையாகவே நா.முத்துக்குமார் திகழ்ந்தார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் திரையிசை உலகில் அதிகம் பாடல் எழுதும் பாடலாசிரியராகவே இருந்தார். 1,500 திரைப் பாடல்களுக்கு மேல் எழுதிய இவர், ‘தங்கமீன்கள்’, ‘சைவம்’ ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர்.
நா.முத்துக்குமாரின் பாடல்கள் தனித்த அடையாளமாகத் தெரிய முதல் காரணம், அவரது பாடல்கள் புதுக்கவிதையை உள்வாங்கிக்கொண்டு மிளிர்வதுதான்.
‘கஜினி’ படத்தில் இவர் எழுதிய
‘மழை அழகா
வெயில் அழகா
நீ கொஞ்சும்போது மழை அழகு
நீ கோபப்பட்டால் வெயில் அழகு’
- என்ற வரிகள் பழைய தம்பதிகளைக்கூட குல்மொஹர் மரத்துக்கு கீழே காதலர் களாக்கியது.
‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தில் இடம்பெற்ற பாடலில்
‘மரங்களின்
நிழலும்
உன்னைக் கேட்கும்
எப்படி சொல்வேன்’
என்கிற முத்துவரிகளை கேட்கிறபொழு தெல்லாம் மழை வந்து குடை கேட்குமே!
‘சைவம்’ படத்தில் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடும்
‘அழகே அழகே எதுவும் அழகே
மலர் மட்டுமா அழகு
விழும் இலைகூட ஒரு அழகு’
- என்கிற மல்லிகை வரிகள் தென்றலை அழைத்துக் கொண்டு நம் நெஞ்சுக்குள் நுழையும்.
‘சூரியனோ சந்திரனோ’ என்று கோரஸில் ஆரம்பிக்கும் ‘பல்லேலக்கா பல்லேலக்கா’ பாடலில்...
‘கிராமத்துக் குடிசையிலே
கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே...
கூரை ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே...
ஆலமரத்துக்கு ஜடை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊர் ஓரம் அய்யனாரிடம்
கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே’
- என்கிற வரிகளில் தமிழும், நா.முத்துக் குமாரும் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்!
ஓவியம்: ஆர்.ராஜேஷ்
‘காதலித்து கெட்டு போ
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனானாலும் நகர்ந்து செல்’
* * *
‘இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்’
என்றேன் மகனிடம்.
கோபமாக சொன்னான்
‘அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!’
* * *
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்குகின்றன!
- இதுபோன்ற கவிதைகளை நா.முத்துக்குமாரின் நேற்றைய அடை யாளங்களாகச் சொல்லலாம்.
கனகராஜ்:ஒங்க அப்பாட்ட
எதுக்கு கேக்கிறாய்... ஒ ‘வொய்ப்’ட்ட ஏதாவது தொழில் செய்றமுன்னு சொல்லி ஒரு
நாற்பதாயிரம் பணம்... அவுங்க அப்பாக்கிட்ட இருந்து வாங்கித் தரச் சொல்லு...
செல்வம்: என்னமோ இதுக்கு போயி... பயந்துகிட்டு... நீ
மொதல்ல முதல் போடு... நாங்க ஒன்ட்ட வேலைக்கு இருக்கோம்...
ஜான்சன்: நல்ல
அய்டியாதான்... ஆனா அவள் இதைக் கேக்கனுமே...