ஒரே ஒரு குறை…!
திராவிடத்தின் ஆலவிருட்சமே!
உன் விழுதே…
தமிழகத்தை ஆள்கிறது…!
உன் எழுதுகோலும் செங்கோலும்தான்
எங்கள் தளபதி கையில்…
தமிழகம் மீண்டு(ம்) வாழ்கிறது…!
நீ-
பெண்களுக்குச் சொத்தில்
சமபங்கு கொடுத்தாய்…
இன்றோ முதல்வர்…
அவர்கள் உள்ளாட்சியில்
ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள்
இல்லை இல்லை…
அதைவிட அதிகமாகத் தந்தே
ஆட்சிக்கட்டிலில் அமரவைத்தே
மாட்சிமை பொருந்திய தலைவரானார்.
பெண்களெல்லாம்…
நகரத்தை வலம்வர
இலவசமாகப் பேருந்தைக் கொடுத்ததால்
பேருவகை கொள்கின்றனர்.
ஏழைகள் அணுகும்
எளிய முதல்வராய் இருந்தே…
நரிக்குறவர்களின் நலம் கேட்டு
இல்லம் தேடிச்சென்று- அவர்கள்
இல்லத்தில் பிள்ளைக்கு உணவூட்டி
அப்படியே தானும் உண்டு மகிழ்ந்ததை
தமிழகமே கண்டு வியந்தது…!
தமிழ்ச்சிங்கமே!
நீ எட்டடி பாய்ந்தால்
உன் குட்டி எண்பதடி பாய்கிறது…!
தமிழகத்தின் முதல்வர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
இந்தியாவிற்கே முதல் முதல்வரானார்…!
ஒரே ஒரு குறை…
இதையெல்லாம் பார்க்க
நீ இல்லையே…!
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்,
நிவைஞ்சலி
பதிலளிநீக்கு