சனி, 2 பிப்ரவரி, 2019

பிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்தமிழ் இளங்கோ காலமானார்


My Photo
பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, 
திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ....,  திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.

தொடர்புக்கு:
அரவிந்தன் (ஒரே மகன்)
9486114574அமல அன்னை கெபி முன்பு தமிழ் இளங்கோ
 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு அவரது மகன் அரவிந்தன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
‘ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள் , ஜோசப்விஜூ அவர்கள் பணிபுரியும் தனியார் பள்ளியிலேயே தமிழ் ஆசிரியராக இருக்கிறார். இவரை மதுரை வலைப்பதிவர் சந்திப்பிலும், பின்னர் விபத்தில் சிக்கிய இவரை நலன் விசாரிக்க சென்றபோது பள்ளியிலும் சந்தித்து இருக்கிறேன். சிறந்த கவிஞர்; தமிழ் மீதும் கலைஞர் மீதும் மிகுந்த பற்று உள்ளவர். ’ என்று என்னை அறிமுகப் படுத்திய
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL

இனிய நண்பரும் அழகிய புகைப்படங்களை அருமையாக எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவரும், தமிழ்மீது அதீத பற்றுள்ளவரும் வலைப்பதிவர்கள் அனைவருடனும் அன்புடன் பழகும் அன்னார் அவர்கள்  64 வயதிலேயே
இறந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு  நேரில் சென்று எனது ஆழ்ந்த இரங்கலைத் தெவித்துக் கொண்டேன்;  அங்கு திரு.கரந்தை ஜெயகுமாரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.  

அவரது மகன் திரு. அரவிந்தன் அவர்கள் திருச்சி ஆர்.வி.எஸ்.  பள்ளியில் பணியாற்றி வருகிறார்.   

அவரது மகள் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.   தந்தையின் உடலைப் பார்த்து இறுதி அஞ்சலி செலுத்த மகளுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்பது மேலும் வருத்தமளித்தது. 

-மணவை ஜேம்ஸ்.

9 கருத்துகள்:

 1. தி. தமிழ் இளங்கோ அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவின் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் என்பதிவில் தவறாது பின்னூட்டப் பதிவிட்டு ஊக்கம் கொடுத்த ஐயாவின் மறைவு குறித்த செய்தி கவலையை தருகின்றது.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அன்புள்ளம் கொண்டவர் .செய்தி நேற்று கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் துக்கமடைந்தேன் .
  எனது ஆழ்ந்த இரங்கல்கள் அஞ்சலிகள் .அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நட்புகளுக்கு ஆறுதலை தர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 4. அஞ்சலிப் போஸ்ட் என அறிஞ்சு ஓடி வந்தேன் , படங்கள் பார்க்க மனம் இன்னும் கனத்து விட்டது... இளங்கோ அண்ணனின் மனம் அமைதியடையவும் குடுப்பத்தினர் ஆறுதல் அடையவும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. நான் முகநூலில் ரமணி ஐயாவின் பதிவைக் கண்டு அறிந்தேன். என்னாலும் அவரது இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை. முகநூலில் பதிந்த பதிவின் இணைப்பைப் பகிருகிறேன்.
  https://www.facebook.com/yarlpavanan/posts/2503621176346823

  பதிலளிநீக்கு
 6. எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் அதிர்ச்சியான செய்தி. வருத்தமான செய்தியும் கூட. என்னதான் அவர் உடல்நலம் குறைவாக இருந்திருந்தாலும் இச்செய்தி மிக மிக அதிர்ச்சியானதே. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தார் அனைவருக்கும் இப்பிரிவினின்று வெளிவர ஆறுதல் நல்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 7. மிகவும் வருந்துகிறேன்...ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...