திங்கள், 11 மே, 2015

கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் - கவிதை.



கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் 


கவிதை இன்று (11.5.2015)  முரசொலி நாளிதழில் வெளிவந்தது.



 பார்வைக்காக:



அண்ணன் காட்டிய வழியில்

கலைஞர் ஊட்டிய மொழியில்


எந்தச் சரிகமபதனிக்குள்ளும்
முடங்கிக்கிடப்பதல்ல மடங்கிக்கடப்பதல்ல
புரட்சிப்பூபாளம்!
சிலந்திவலைக்குள் சிக்கக்கூடியவையல்ல
தந்தை பெரியாரின் கந்தகச் சிந்தனைகள்!
உடையா நடைமுறைச் சிந்தனைகள் அவை
வாழ்வுக்குள் வரமறுக்கும்
கற்பனைக் காவியக்கனவுகள் அல்ல.
வெற்றியின்  முகவரியில் காத்திருக்கும்
வெப்ப வினாக்களின் வெளிச்சவிடைகள்!
கடக்கத் துணிந்தவனுக்குக்
கடலின் எல்லா அலைகளிலும் கதவுகள்
திறந்தே இருக்கும்!
சாதிக்கமுடியாத சாக்கரடீசு-தனது
சந்ததி பெரியார்மூலம் சாதித்துக்கொண்ட
சரித்திரம்தான் திராவிடஇயக்கம்!



வைதிகம் போற்றி வைத்துப் புளகாங்கிதம் அடைந்த
பொட்டுக்கட்டும் புன்மை மரபைச்
சுட்டுத்தள்ளித் தளைகளிலிருந்து பெண்ணை
விடுதலைப்பிறவி ஆக்கியது
திராவிட இயக்கம்.
கலைகளை வளர்ப்பவர் என்று சொல்வது 
ஒருபுறம்;
தேவதாசிகள் என்னும் காமத்தின் பண்டங்களாக்கித்
தின்று தீர்ப்பது இன்னொருபுறம்!
இவர்கள் விடியலின் புதல்விகள்
அடிமைகள் அல்லர் என்று போராடிவென்ற
இயக்கம் திராவிடஇயக்கம்!


அடிமைப்  பத்திரங்களுக்கு
மறுபதிப்புப் போட்டுக்கொடுக்கக்
கடவுள் அனுப்பிய மூடத்தூதர் அல்லர்
ஈ.வே.ரா.!  முழுமை அறிவுப்பிழம்பு!
பட்டம்கொடுத்துச் சுயசிந்தனையைக் 
காயடிக்காத 
பகுத்தறிவுப் பல்கலைக்கழகம் அவர்.


அற்பப்பிறவிகள் பெண்கள்;  அவர்களுக்கு
அவசியம் இல்லை படிப்பு;
அவசியம் இல்லை அரசியல்; அவசியம் இல்லை
வாசல்படிக்கு வெளியே வாழ்க்கை;
உளுந்தளவு எறும்புக்கு எதற்குக் கொம்பு வேண்டும்?
ஓடும் நதிக்கு ஓடங்கள் தேவை;
உட்கார்ந்துவிட்ட கிணற்றுக்கு எதற்காக வேண்டும்?
சேலைப் பெண்களுக்கு இலக்கணம்
வேலை செய்வதும் சேவை செய்வதும்தான்!
இப்படி இருட்டுச்சமூகம் மருட்டிய போது
மகளிர்க்குப் பாதைகள்
மறுக்கப்பட்டால் ஊர்கள் கொளுத்தப்படும்
வகுப்பறைக்கதவுகள் அடைக்கப்பட்டால்
பள்ளிகள் இடிக்கப்படும் என்று
தீப்பந்தக் கண்களால் திசைகளை உசுப்பியது
திராவிட இயக்கம்.
சரிந்து வீழ்வதற்குச் சம்மதிக்கும் சமாதானம்
தனக்குச் சவப்பெட்டி வாங்கத்
தன்னையே விற்பதற்குச் சமமானது என்று
புரட்சிப்பொறிகள்
காற்றில் நீரில் நெருப்பைப் பற்றவைத்தன.
இன்று
தந்தை பெரியார் சந்ததியில் வந்தவன்
மாநிலங்கள் அவையின்
மையமண்டபத்தை உலுக்கினான்;
அண்ணா காட்டிய வழியில்
கலைஞர் ஊட்டிய மொழியில்


திருச்சி சிவா


திருநங்கையர்க்காக வார்த்தைகளில்
நியாயங்கள் வைத்து வாதங்கள் தொடுத்தான்
அகம் வேறுபடாமல் அத்தனை கட்சிகளும்
ஒருமுகமான அதிசயம் நடந்தது!
திருநங்கையர் ஊனப்பாலினம் ஒதுக்கப்படும்
ஒவ்வாப்பாலினம் என்ற ஏளனக்கருத்தை உடைத்தெறிந்தான்;
மறத்தமிழ்க் கண்ணகிப் பெண்ணாள்
காற்சிலம்பு மறுமுறை நீதிகேட்டுப்
பாராளுமன்ற மண்டபம் எங்கும் தெறித்தது.
பசியெடுத்த வாழ்வுக்குப் பதில்தேடிய
திருநங்கையர்
புசிக்கத் தயாரித்தான் தனிப்பட்ட சட்டமுன்வரைவை!
நிறைவேற்றம்
மறையாத அண்ணா காதுகளுக்கு
வெற்றித்தூது கொண்டுபோனது!
தலைவர் கலைஞர் மனத்தில் நூறு சந்தனவனங்களைத்
திறந்து வைத்தது!
தந்தை பெரியாரின் தகுதியுள்ள பேரர்
ஒவ்வொருவர் கண்ணிலும் உதயசூரியர்கள்!
என்மக்கள் என்மக்கள்தான் என்று
செம்மாந்த தமிழ்த்தாய் உவப்பைப்
பரிமாறிக்கொள்ள
ஒவ்வொரு தமிழன் வீட்டுக்கும் போய்க்
கதவைத் தட்டுகிறாள்!





















                                                                                                   -மாறாத அன்புடன்,
            
                                                                                                     மணவை ஜேம்ஸ்.

23 கருத்துகள்:

  1. ஐயா வணக்கம்.
    படித்ததில் தங்களுக்குப் பிடித்த இது போன்ற பகுதிகளைப் பகிர்வது, உங்கள் ரசனை குறித்து நாங்களும் அறியத் துணை செய்யும்.
    நாடாளுமன்ற உறுப்பினரோடு உள்ள உங்கள் படம் பகிர்ந்ததில் மகிழ்வு.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல மரபுக்கவிஞரும் சிறந்த புதுக்கவிதையாளருமான ஈரோடு தமிழன்பன் அவர்கள் 80வயதுக்கு மேலும் இப்படி எழுதுகிறார் எனில் பாராட்ட வேண்டிய படைப்பு.
    திருச்சி சிவா அவர்கள் நல்ல பேச்சாளர் மட்டுமல்ல, தொடர் படிப்பாளியும் கூட. அண்மையிலான திருநங்கையர் பற்றிய அவரது தனிநபர் மசோதா வெற்றிபெற்றது வரலாற்றில் பேசப்படும்.
    தங்களுக்குப் பிடித்த கவிதையோடு த ங்களுக்குப் பிடித்தவர் பற்றிய கவிதையும் அருமைதான்.
    நண்பர் விஜூ சொல்வது போல அடிக்கடி இப்படிப் பகிருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களைப் பற்றிய தங்களின் உயர்வான கருத்திற்கும் - பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      திருச்சி சிவா அவர்களைப் பற்றி அருமையாக கூறியிருந்தீர்கள்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிறந்த பதிவு அறிய புகைப்படம் அதன் கீழே திருச்சி திரு. சிவா அவர்களோடு தங்களின் புகைப்படம் கண்டேன் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பொங்கட்டும் கவிவெள்ளம் ..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தற்போது தான் கணணுற்றேன் செவியுற்றேன் நன்றி ஐயா

      நீக்கு
  5. //சாதிக்கமுடியாத சாக்கரடீசு-தனது
    சந்ததி பெரியார்மூலம் சாதித்துக்கொண்ட
    சரித்திரம்தான் திராவிடஇயக்கம்!///
    கவிஞர் போற்றுதலுக்கு உரியவர்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள கரந்தையாருக்கு,

    தங்களின் போற்றுதலுக்குரிய கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  7. கடவுள் அனுப்பிய மூடதூதர் அல்ல ஈ.வே.ரா...
    அசத்தலான பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சாதிக்கமுடியாத சாக்கரடீசு-தனது
    சந்ததி பெரியார்மூலம் சாதித்துக்கொண்ட
    சரித்திரம்தான் திராவிடஇயக்கம்!

    நாங்கள் திராவிடத்தின் மாணவர்கள் என்பதை பெருமையோடும் கர்வத்தோடும் சொல்லிக்கொள்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      பெரியாரின் பிள்ளைகள் என்பதைப் பெருமையோடும் கர்வத்தோடும் சொல்லிக்கொள்வோம். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தரே!

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் செய்தி பயனுள்ளதாக இருந்தது.
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்க்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. நல்ல ஒரு எழுத்தினைத் தெரிவு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  13. மிகச் சிறப்பான கவிஞரிடம் இருந்து அழகிய வரிகள்! சிறப்பான பகிரு! பகிர்வுக்கு மிக்க நன்றி ந்ண்பரே! தாமதமாக வ்ருவதற்கு மன்னிக்கவும். ஒவ்வொன்றாகத்தன் வர முடிகின்றது.....வேலைப் பளு. இனி கொஞ்சம் குறைந்துள்ளது..

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள அய்யா,

    தங்களின் மிகுந்த வேலைப் பளுவுக்கும் இடையில் தங்களின் மேலான கருத்துகளுக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...