படிக்க ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...!(1)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
நீங்க நினைக்காத நெஞ்சம்...!(1)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)
ரோஸியைப் பற்றித் தற்பொழுது தான் அறிந்ததைத் தமிழினியன் சசிரேகாவிடம் சொல்லியதைக் கேட்டு ரோஸியின் மீது இரக்கப்படுவதைச் சசியின் முகம் காட்டிக் கொடுத்தது.
இருவரும் பேசியபடியே சாலையோரமாக நடந்தார்கள். இருமருங்கும் நெருக்கமாக வளர்ந்திருந்த பூ மரங்கள் அவர்களுக்குச் சாமரங்கள் வீசி வரவேற்பதைப் போலத் தரையில் விழுந்து வணங்கிக் கிடந்தன.
“சசி... ஒன்னோட பரதநாட்டியம் ரொம்ப...ரொம்ப... ரொம்ப நல்லாயிருந்தது” அவளின் கையைக் குலுக்கி வாழ்த்துச் சொன்னான்.
“தேங்க்ஸ்... தமிழ்... ஒங்க கவிதை சூப்பர்...!” அவனின் கையைக் குலுக்கி இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்; பிடித்த கையை அவள் விடுவதாய் இல்லை.
“ஆமா... ரோஸியைப் பத்தி ரொம்பத்தான் கவலைப்படுற மாதரி தெரிஞ்சிச்சு...!
நம்பளப்பத்தி கவலப்பட யாரிருக்கா...?” தமிழின் பெருமூச்சு அவளின் மேல் பட்டுச் சுட்டது.”
“ஏன்... என்னவாம்...?” சசி தன் இடது கையைத் தமிழின் வலது கைக்குள் நுழைத்து இறுக பற்றிக் கொண்டு கேட்டாள்.
“தெரிஞ்சோ... தெரியாமலோ... என்ன காதலிச்சிட்டாய்...!” சசியின் தலைமுடியயைக் கோதியைபடியே சொன்னான்.
“தெரிஞ்சோ... தெரியாமலோ இல்ல... தெரிஞ்சுதான் காதலிச்சேன்... இந்தக் கவிஞரை...!” அவனின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளினாள்.
“என்ன... தெரிஞ்சிக்கிட்டாய்...?”
“என்ன... தெரிஞ்சிக்கணும...?
“நா என்ன சாதின்னு தெரியுமா...?”
“நீ ஆண் சாதி... நா பெண் சாதி...!”
“எதுலையுமே விளையாட்டுத்தான்... நா கீழ் சாதி... நீ மேல் சாதி...!”
“நீதான் மேல் சாதி... ஆமாம்... நீ மேல்... நான் பிமேல்...”
“என்ன கிண்டலா...? ஒன்னிட்ட இந்தக் குறும்புப் பேச்சு பிடிச்சிருக்கு...”
“ஒங்கள்ட்ட இந்த அரும்பு மீசை பிடிச்சிருக்கு...” மீசையைப் பிடித்து ஆசையாய் இழுத்துப் பார்த்துச் சிரித்தாள்.
“சசி... நா என்ன சாதின்னு தெரியுமா?” -தமிழ் மீண்டும் கேட்டான்.
“நாமெல்லாம் மனித சாதி... நீங்க சாதிப்பீங்க... எனக்குத் தெரியும்...!”
“அதெல்லாம் இருக்கட்டும்...! நா தாழ்த்தப்பட்ட இனம்...நீ...” பேச்சை இடைமறித்துச் சசி பேசினாள்.
“போதும்... போதும்...ஒங்க சுயபுராணம் பாடுறத நிப்பாட்டுங்க...! ஒங்களுக்கு ஜாலியா நாலு வார்த்தை பேசத் தெரியாதா...?”
“ஜாலியாவா? அப்படி நா இருந்ததே இல்லையே...! துவாக்குடி மலையில கல்லு உடைச்சு எங்க அம்மா என்ன கஷ்டப்பட்டுப் படிக்க வக்கிறாங்க... அங்கேயே ஒரு குடிசையில குடியிருக்கிறோம்... ரொம்பக் கஷ்டம் படுறோம்ப்பா...நல்லா படிச்சு முடிச்சு... நல்ல வேலைக்குப் போயி எங்க அம்மாவ உட்கார வச்சுக் கவனிக்கனும்!”
“கவனிச்சிட்டாப் போச்சு...அய்யாவின் கனவுத் திட்டம் வேறு என்னவாம்...?”
“நக்கல்தானே வேணாங்கிறது... நா சீரியஸா பேசுறேன்...”
“சரி...சரி... சாரி... நா சீரியஸா கேக்கிறேன்...போதுமா...? சொல்லுங்க...”
“ஒங்க அப்பா ‘பெல்’ல்ல ஜெனரல் மேனஜரா வேலை பார்க்கிறாரு.... ! நீங்க ஹை கிளாஸ்... நான் லோ கிளாஸ்... ”
“ஹை கிளாஸ் கிழே இறங்கி வந்தா... லோ கிளாஸ் மேலே வந்திடுமுல்ல... ரெண்டும் சமம் ஆயிடும்... நீ ஒன்னம் கவலைப்படாதேப்பா...!”
“இல்ல சசி... நீ நெனக்கிற மாதரி நம்ம சமுதாயம் இல்ல...! சாதிய தலையில தூக்கி வச்சிட்டு ஆடும்... ஒனக்குத் தெரியாது...!”
“நல்லா ஆடட்டும்... நா ஆடமாட்டேன்... ஒங்கள ஆட்டிவக்க பொறந்திருக்கேன்... போதுமா...?”
“நா சொல்றது ஒனக்குப் புரியுதா? இல்லையான்னு தெரியலை...!”
“நீ என்ன காதலிக்கிறியா...? இல்லையான்னுதான் தெரியாலை...!” -சசிரேகா கேட்க சற்று நேரம் எதுவும் பேசமால் மௌனமாக இருந்தான்.
“நா கேக்கிறது காதுல விழுந்ததா...? இல்லையா...? ” என்று கேட்டவளிடம் ‘விழுந்தது’ என்பதுபோல் தலையசைத்தான்; அவன் கண்களிலிருந்து கண்ணீர் அவள் கையில் விழுந்தது.
“ஏய்... என்னப்பா... என்னாச்சு...!” பதறித்தான் போனாள் சசிரேகா.
“காதலிக்கிறேன்... உயிருக்கு உயிராக...!” இதைக் கேட்ட சசிரேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது; இதுதான் ஆனந்தக் கண்ணீரோ! சசியின் புன்னகையில் நாணத்தால் சிவந்த முகம் கண்டு தமிழும் சிரித்தான்.
“சரி... சசி! பிராக்டிக்கலா திங் பண்ணுவோம்... ஒங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கலைன்னா...?”
“ஒங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கலைன்னா...?” -எதிர் கேள்வி கேட்டாள்.
“எங்க வீட்ல அப்பாவா இருக்காரு... அவருதான் போய்ச் சேர்ந்திட்டாரு... அம்மாதான்... சும்மாதான்... ஒன்னும் பிரச்சனையில்ல...!”
“எங்க வீட்ல அம்மாவா இருக்காங்க... அவுங்கதான் போய்ச் சேர்ந்திட்டாங்க... அப்பாதான்... பார்த்துக்கலாம்...!”
“ஒரு வேளை நம்ம காதலை ... ஒங்க அப்பா ஏத்துக்கலைன்னா...”
“பாஸிட்டிவாவே திங் பண்ணமாட்டியா...?”
“பிளஸ் மைனஸ் ரெண்டையும் யோசிக்கணுமுல்ல...”
“ஏத்துக்கலைன்ன... வீட்ட விட்டு ஓடிவந்திடுறேன்... போதுமா?”
“அய்யய்யோ... அவசரப்படாதே சசி... ஒன்ன வச்சுக் காப்பத்த எனக்கு ஒரு வேலை வேணுமுல்ல... ஒரு பேச்சுக்குக் கேட்டேன்... நல்லதே நடக்கும்... ”
“அப்படிச் சொல்லுங்க... நம்பிக்கைதான் வாழ்க்கை...”
- என்று சொல்லி சசிரேகா கலகலவெனச் சிரித்தாள். அவளின் அருகே கார் வந்து நின்றது; காருக்குள்ளே சசியின் அப்பா இருந்தார்.
- வ(ள)ரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
- வ(ள)ரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
"நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)"
பதிலளிநீக்குதொட்டணைத் தூறும் மணற்க்கேணி-தொடர்
தொடர்கிறேன் நண்பரே!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி. தொடர்வதற்கு
சசி அப்பா வில்லனா ..அறிய ஆவல் :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குதங்களின் ஆவலுக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஆவலுடன்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா....
அன்புள்ள வலைச்சித்தருக்கு,
நீக்குதங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் ஆவலுடன் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
காதல் பயணத்தை தடை செய்ய அப்பா வந்துவிட்டாரா? தொடர்கிறேன்! இந்த பதிவின் ஆரம்ப பத்திகள் இரண்டுக்கு மேற்பட்ட தடவை டைப் செய்துள்ளீர்கள் கவனித்து நீக்கி விடவும். நன்றி!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நெஞ்சார்ந்த நன்றி. திருத்தி நீக்கி விட்டேன்.
மணவையாருக்கு வணக்கம்
பதிலளிநீக்கு//நீதான் மேல் சாதி ஆமாம் நீ மேல் நான் பிமேல்//
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்
இறுதியில் வில்லன் வந்ததும் மனம் பதைத்து விட்டது தொடர்கிறேன்...
மணவையாரே.. சின்ன டவுட்டு இவர்கள் வசிப்பது திருச்சி ஏரியா காரின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பழைய மெட்ராஸ் போல் இருக்கிறதே... ஒருவேளை முன்பு அவளின் அப்பா மெட்ராஸ் ப்ராஞ்சில் வேலை செய்யும் பொழுது வாங்கிய பழைய கார் என்பதை தெரிந்து கொண்டேன்.
தமிழ் மணம் 5
அன்புள்ள ஜி,
நீக்குதாங்கள் இரசித்துப் படித்தது கண்டு மகிழ்ச்சி. அவள் அப்பாவின்... அப்பா(வி) கார் என்பதை அறிந்து கொண்டதற்கு பாராட்டுகள். ‘அஞ்சாத சிங்கம் உன் காளை...அது பஞ்சா பறக்கவிடும் ஆளை’ன்னு அஞ்சாமல் அஞ்சாவது ஓட்டு போட்டதற்கு மிக்க நன்றி.
அருமையான கதையோட்டம் அய்யா!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
த ம 6
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அப்பாவும் வந்திட்டார்...
பதிலளிநீக்குமகளை காரில் அழைத்து( இழுத்து)ச் சென்றுவிடுவார்.
நாமும் அந்தக் காரின் பின்னாலேயே செல்வோமா?
அள்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அருமை ஐயா
பதிலளிநீக்குதொடர்கிறேன்
நன்றி
அன்புள்ள கரந்தையாருக்கு,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அட! அவனும் காதலிக்கின்றானா...அப்போ சாதி, அந்தஸ்துதான் வில்லனா...ம்ம்ம் மிகவும் ரசித்து வாசிக்கின்றோம்...மேல் ஃபிமேல் அருமை....தொடர்கின்றோம் ஓரளவு கதையை ஊகிக்க முடிகின்றது என்றாலும் அடுத்த பகுதிக்குக் காத்திருக்கின்றோம்....
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதாங்கள் இரசித்துப் படிப்பததற்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
தொடருங்கள் ஐயா!
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
வாழ்த்துக்கள்!
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் தொடரைத் தொடர்வதற்கு மிக்க நன்றி.
தொடர்கிறேன் மணவை!
பதிலளிநீக்குஅன்புள்ள பெரும்புலவர் அய்யா,
பதிலளிநீக்குதாங்கள் தொடர்வதற்கு நெஞ்சார்ந்த நன்றி.
இதற்கு முந்தைய பாகங்களைப் படித்தேன். ஜாதி வித்தியாசம் எத்தனை வருடமானாலும் நீங்கவே நீங்காது என்பதற்கு உங்கள் தொடர் ஒரு சாட்சி. நீங்கள் முன்பு எழுதியது தானே இத்தொடர். இப்பொழுது பதிவிடுகிறீர்கள் . சரிதானே. ஆனால் இன்னும் பசுமை மாறாமல் இருக்கிறது பாருங்களேன் ஜாதி வித்தியாசம்..
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வாழ்த்துக்கள்!
அன்புள்ள சகோதரி,
நீக்குவணக்கம். இந்தக் கதை திருச்சி எஸ்.ஐ.டி. யில் பாலிடெக்னிக்கல் டிப்ளோமா மெக்கானிக்கல் இன்சினியரிங்...(D.M.E.) நான் படித்துக் கொண்டிருந்த பொழுது... 13-12-1983 அன்று... முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் எழுதியது. அதன் நகல் (carbon paper) காணக் கிடைத்தது. சிறிய மாற்றங்களுடன் பார்வைக்காக...
தங்களின் வாழ்த்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
அட அதற்குள் அப்பா வந்துவிட்டாரா..... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
கதை அருமையாகச்செல்கிறது தொடர் 4ஐக்காண நாளை வருகிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் தொடரைத் தொடர்வதற்கு மிக்க நன்றி.
ஐயடா இப்பவே நெஞ்சு தீயுது அம்மாடி இதை எல்லாம் தாங்கும் சக்தி எனக்கில்லய்யா. இப்பவே ரொம்ப வலிக்குது. ம்..ம் தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் நன்றி.