ஞாயிறு, 26 மார்ச், 2017

பள்ளியறைப் பாடமாகிறது திருக்குறள்



பிளஸ் 2 வரை திருக்குறள் பாடம்


 நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பிக்க அரசு ஏற்பாடு




திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருமிகு. ராஜரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
‘திருக்குறளில் உள்ள 108 அதிகாரங்களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் நீங்கலாக, அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப்படும்.
உலகப் பொதுமறையான திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக் கதைகள்,  இசைப்பாடல்கள்,  சித்திரக் கதைகள்,  அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி 

‘கிளிக்’ செய்க
திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி கற்பிக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

                              ‘கிளிக்’ செய்க

- மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.






13 கருத்துகள்:

  1. நல்லதொரு விடயம் பெருமை கொள்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகப் பொதுமறையாம் திருக்குறளை எண்ணி தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் ஜி.

      தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சிறந்த பணித் திட்டம்
    வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி. செயல்பாட்டில் சிறப்பாக அமையவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. முப்பாலில் இருபால் மட்டுமே பள்ளிகளில் கற்பிக்கக்கூடியவை.ஆரம்பிக்கட்டும். வெறும் நூறு குறள்கள் மாணவர்களிடம் போய்ச் சேர்ந்தாலும் இன்னொரு தலைமுறைக்குக் குறள் வாழும்.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...