வியாழன், 7 ஜனவரி, 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (14)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (14)


   தீயணைப்புத் துறையினர்   உயிருடன் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை எல்லாம்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.   திருமண மண்டபத்தில்  இறந்து கிடந்தவர்களின் உடலைப் பார்த்ததும்   இதற்கு முன்பு இதுபோலக்  கோர விபத்தைக் கண்டதேயில்லை என்று மிகுந்த துயரப்பட்டனர்.
                                                                       

   ஸ்ரீரங்கம்  போலிஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட காவல் நிலையமே அங்கு வந்து இருந்தது.  போக்குவரத்தை மாற்றிவிட்டு  மக்களின்  கூட்டத்தைக்  கட்டுப்படுத்திக் கொண்டும்,  ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் காயம்பட்டவர்களை மீட்டு அனுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.
                                                                     

   சிறிது நேரத்திலே எஸ்.பி.யும்  வேகமாகத் தனது வண்டியில் வந்து இறங்கினார்;   இன்ஸ்பெக்டரிடம் விசாரணை செய்தார்.



   எஸ்.பி. வந்த சிறிது நேரத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவரும் சம்பவ இடத்திற்கு   வந்தார்.  
  
       எஸ்.பி.யிடமும் தீயணைப்பு அதிகாரியிடமும்  மாவட்ட ஆட்சித் தலைவர் நடந்தவற்றைக் கேட்டார்.  பத்திரிக்கை நிருபர் எல்லாம் கேமராவும் கையுமாகப் புகைப்படம் எடுப்பதிலும் செய்தி சேகரிப்பதிலேயுமே  மும்முரம் காட்டினர்.

   “காயம் பட்டவர்களையெல்லாம் மீட்டு  ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சில்ல...” மாவட்ட ஆட்சியர் கேட்க, தீயணைப்பு அதிகாரி பதில் சொன்னார்.

   “பாதிக்கப்பட்ட எல்லாத்தையும்  ஜி.எச்., பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சுங்க அய்யா...”

   “ஏ பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புனீங்க...?” மாவட்ட ஆட்சியர் சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.

   “இல்லீங்க அய்யா... தீயில வெந்து காயம்பட்டவங்க நெறையப் பேரு... அதுனாலதான்... அதான் உடனே ஒங்களுக்குத் தகவல் கொடுத்தோம் ...”

   “எத்தனை  பேரு தீக்காயம் பட்டவங்க...?”

   “நூறு பேருக்கு மேல இருக்குங்கய்யா...”

   “யோவ்... என்னய்யா சொல்றா...?  ஆமா... யாரும் இறந்திருக்காங்களா...?”
பதட்டத்துடன் ஆட்சியர் கேட்டார்.  தீயணைப்பு  அதிகாரி  ஒன்றும் கூறாமல் இருந்தார்.

   “என்ன  கேக்கிறேன்ல்ல... யாரும் இறந்திருக்காங்களா...?”

   ”ஆமாங்கய்யா...”தயங்கித் தயங்கிப் பதில் சொன்னார் தீயணைப்பு அதிகாரி.

   “எத்தனை பேருய்யா...?”

   ”இனிமேல்தான் எண்ணணும்...” 

   “மொதல்ல அதப் பாருங்க... அதுக்குள்ள மேல இருந்து விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க... வந்திடுச்சு... சீக்கிரம் போங்க...  கவர்மண்ட்கு என்னய்யா பதில் சொல்லுவேன்... போங்கய்யா... போங்க...” என்று சொல்லி விட்டுத் தீயணைப்பு அதிகாரியை அவசரப்படுத்தினார்.

   “சரிங்கய்யா...” தீயணைப்பு அதிகாரி வேகமாக மாடியில் ஏறினார்.  

    தீயில் பலர் கருகிக்கிடப்பதைப் பார்த்து,  யாருக்காவது உயிர் இருக்கிறதா என்று அருகில் சென்று பார்த்தனர்.    ஆங்காங்கே பல உடல்கள் கரிக்கட்டையாகிக் பார்ப்பதற்கே அகோரமாகச் சகிக்க முடியாமல்  கிடந்தன. 

   தீயணைப்பு வீரர்கள் இறந்தவர்களின் உடல்களை எண்ணி, கணக்கெடுக்கும் வேளையில் ஈடுபட்டனர்.  இருபத்தியாறு பேர் பெண்கள், ஒரு சிறுமி, இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம்  இருபத்தொன்பது பேர் உடல்கருகி இறந்து கிடந்தனர். 

   ரெங்கராஜ்  மாடிக்குச் சென்று மாப்பிள்ளையைத் தேடினார்.  மாப்பிள்ளையோட  அப்பாவைத் தூக்கியபடியே  இறந்து  பிணமாகக்  கிடப்பதைப் பார்த்தும் மண்டபமே அதிரும்படிச் சத்தம் போட்டுக் கத்தினார்.  அவரின் அலறலைக் கேட்டு மிரண்டுபோய்த் தீயணைப்பு வீரர்கள் ஓடி வந்தனர்.

   “மாப்பிள்ளை...மாப்பிள்ளை...”  கையை நீட்டியவர் அதற்கு மேல் பேச்சு வரமால் மாப்பிள்ளையின் உடல் மீதே மயக்கிச் சாய்ந்தார்.  ரெங்கராஜின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர்.  அவரை மெதுவாகக் கீழே அழைத்து வந்தனர்.

   மாப்பிள்ளையின் அம்மா,  இறந்துகிடந்த கணவரையும் மனமகன் கோலத்தில் கிடந்த மகனின் உடலையும் மாப்பிள்ளையின் உடலையும் பார்த்துத் தரையில் உருண்டு புரண்டு அழுதாள்.

        “இவ்வளவு குறுகலான இடத்தில மண்டபம் இருக்கே... கல்யாண மண்டபத்துக்கு அனுமதி  வாங்கி இருக்காங்களா...மொதல்ல ஓனரைக் கூப்பிடுங்க...?”  எஸ்.பி.யிடம் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார்.


    இதையெல்லாம் பார்த்துக் கொண்டு  இருந்த சசிரேகா ‘நம்முடைய திருமணத்தில் இத்தகைய கோர நிகழ்வு நடந்து விட்டதே’  என்று எண்ணியபடி மயங்கிக் கீழே பொத்தென ரோட்டிலேயே விழுந்தாள்.


      மிழினியன் கைககள்  கட்டப்பட்டு,  பங்களாவில் அடைக்கப்பட்டிருந்தவனுக்குப்   பசிக்கு உணவு  மட்டும்  கொடுக்கப்பட்டது. அந்த இருவரும் அவனைப்  பார்த்துக்  கொண்டே இருந்தனர்.    ஞாயிற்றுக் கிழமை மதியத்திற்கு மேல்  தமிழினியனை  விட்டுவிடலாம் என்று  ரெங்கராஜ் சொல்லி இருந்தார்.  மதியம்  பன்னிரண்டைத் தாண்டவே  தமிழினியனை விடுவிக்க எண்ணிக் காரில் ஏற்றி அவனுடன் இருவரும் அமர்ந்து கொள்ள மூவரை ஏற்றிக் கொண்டு கார் திருச்சியை நோக்கிப்  பறந்தது.

   “டே... ஒ காதலிக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு... புத்தியா  பொழைக்கிற வழியப்பாருடா...  என்னா?”  இருவரில் ஒருவன் புத்தி சொல்வது போல் சொன்னான்.

   “வேற ஏதாவது செய்யணுமுன்னு நெனைச்சா...  நீ இருக்க மாட்டாய்... ஏதோ ஒனக்கு ஆயுசு கெட்டின்னு நெனக்கிறேன்...  எல்லாம் ஒ நல்லதுக்குத்தான் சொல்றேன்”  மற்றொருவன் சொல்லிக் கொண்டே தமிழினியனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான்.

   தமிழினியன் மறுப்பேதும் சொல்லாமல்  அமைதியாக இருந்தான்.

   “ஒன்னப்பாத்தா பாவமா இருக்கு...  வீடு எங்கே இருக்கு...  அங்கேயே இறக்கி விட்டிடுறோம்... ஒனக்கு எங்கடா வீடு...?”

   “கருமண்டபம்...” என்று  தமிழினியன் சொல்லிய பொழுது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் குரல் இருந்தது.

    காரை வேகமாக ஓட்டச்சொல்லி கருமண்டபம் வந்தவுடன் பஸ்ஸ்டாப்பில் தமிழினியனை இறக்கிவிட்டுக்  கார் சென்றது.

   தமிழினியனால் நடக்க முடியவில்லை;  மிகுந்த சிரமப்பட்டு நடந்து ரோஸியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

   ரோஸி தமிழினியன் வந்ததை அறிந்து  வெளியில் ஓடி வந்து  ”என்ன நடந்தது?  ஏன் தனியாக வருகிறீர்கள்?  சசிரேகா எங்கே?” கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.  தமிழினியன் நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விவரித்துச் சொல்லி முடிப்பதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டது.  அவன் சொல்லியதைக் கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதாள் ரோஸி.

   “சரி... அம்மா எப்படி இருக்காங்க...?”  தமிழினியன் கேட்டான்.

   அம்மா  எதுவும் சாப்பிட முடியாமல் வலியால் துடித்ததையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும்,  டாக்டர் சொன்னதையும் எல்லாம் அழுகையைத் துடைத்துக் கொண்டே சொல்லி முடித்தாள்.

   “ரோஸி... நல்லா கேட்டியா... இன்னும் ஆறு மாசம்தான் அம்மா உயிரோட இருப்பாங்களா...?”

   “.  ஒங்க அம்மாவுக்கு கேன்ஸர் போர்த் ஸ்டேஜ்ங்கிறத... ஒங்கள்ட்ட     அதச் சொன்னா நீங்க ரொம்ப கவலைப்படுவீங்கன்னு...  டாக்டர் ஒங்கள்ட்ட சொல்லலையாம்...”  இதைக் கேட்ட தமிழினியன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

   “சரி... அழாதிங்க... அழுது என்ன ஆகப் போகுது...?” ரோஸி  தமிழினியனின் கண்ணீரை அவளின் விரல்களால்  துடைத்து விட்டாள்.

   “அம்மா... எப்படி இருக்காங்க...?”

   “ஒங்களத்தான் எப்ப வருவீங்க...  எப்ப வருவீங்கன்னு...  சரியா சாப்பிடாமக்கூட   கேட்டுக்கிட்டே  இருக்காங்க...!”  என்று  ரோஸி சொல்லிக் கொண்டிருக்கம் பொழுதே அம்மாவைப் பார்க்க வீட்டிற்குள் தமிழினியன் நுழைந்தான்.  அவனைத் தொடர்ந்து ரோஸியும் வந்தாள்.

   தமிழினியனைப் பார்த்ததும் தங்கம்மாள் படுக்கையில் படுத்திருந்தவள் வேகமாக எழுந்து உட்கார்ந்து,  தாய்ப்பாசம் பொங்கக் கேட்டாள் , “வாப்பா... எ ராசா...  இந்த அம்மாவ விட்டுட்டு எங்கப்பா போயிருந்தா...?”

   “இல்லம்மா...  படிக்கிறது சம்மந்தமா  ஒரு அவசர   வேலை...  அதான் வெளியூர் போக வேண்டியதாச்சு...  இனிமே இதுபோல போக மாட்டேம்மா...!”  தங்கம்மாளின் அருகில் அமர்ந்தான்.

   “எங்கே ஒன்ன பாக்காமலே இந்த உசுரு போயிடுமோன்னுகூட நெனச்சேன்...”

   “ஏம்மா... பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க...?  அதெல்லாம் ஒங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா...”

   “ஒனக்கு தெரியாதுப்பா... நீ போனப்ப எனக்கு ரொம்ப முடியாமப் போயி... இந்தப் பொண்ணுதான்  எ உசிரக் காப்பாத்துச்சு...  எனக்குத் தெரியுதுப்பா இன்னும் ரொம்ப நாளைக்கு நா இருக்கே மாட்டேம்ப்பா...”

   “அதெல்லாம் ஒன்னுமில்ல... சும்மா மனசப்போட்டு குழப்பிக்காதிங்க...”

   “இல்லடா... குழப்பமெல்லாம் ஒன்னும் இல்ல... தெளிவாத்தான் இருக்கு... ஆமா...  நமக்குன்னு யாரு இருக்கா...  ரோஸிக்கும்  நம்பள விட்டா யாரு இருக்கா...  நீ ரோஸிய கண்ணாலம் கட்டிக்கப்பா...!”

தமிழினியன் அம்மாவை அதிர்ச்சியுடன் பார்க்க  “நீ ஒன்னும் பேசாதே...” என்றாள் தங்கம்மாள்.

                                                                                                                       வ(ள)ரும்...


படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!(12)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.




















                                                                                                                               

20 கருத்துகள்:

  1. பதிவில் இவ்வளவு கோரங்களா ? பல உயிர்கள் இறந்து விட்டதே இருப்பினும் இந்த நிகழ்வுகளும் ஏதோவொரு காரணத்துக்கென்றே தோன்றுகிறது மணவையாரே... தொடர்கிறேன்
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கொடூரமான காதல் வெற்றி போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இந்த வாரம் தொடர் கொஞ்சம் பதற்றமானதாகிவிட்டதே! ம்ம் சரி முடிவு க்ளைமாக்சை நெருங்கிவிட்டது போலத் தோன்றுகின்றது...கதாசிரியர் எப்படி முடிக்கப் போகின்றார் ??!!..எங்களுக்கு ஒரு கெஸ் இருந்தாலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அய்யா...

    நேரமின்மையால் தங்களின் இந்த தொடர் கதையை முழுவதும் இன்னும் படிக்கவில்லை.

    தொடருங்கள்...

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. தொடர்கிறேன்... தொடருங்கள்...!



      நீக்கு
  5. இந்தவாரம் கொஞ்சம் என்ன அதிகமே பதற்றம்தான்
    தொடர்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாரே!

      தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அப்பாடி.... எத்தனை உயிரிழப்பு....

    கதையின் போக்கு வேறு மாதிரி இருக்கிறது. முடிவு தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அதிக அலுவலகப்பணிகள் காரணமாக தொடரைத் தொடர முடியவில்லை. இன்றுதான் பார்த்தேன். விறுவிறுப்பு சற்றே அதிகம்.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள முனைவர் அய்யா,

    தங்களின் மிகுந்த அலுவலுக்கிடையில் தொடரைத் தொடர்வதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நாற்பது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த தொடர்கதை படிக்கிற உணர்வைத் தருகிறது..
    ஆனால் களம் தற்போதையது ...
    நிறைய மாற்றம் வேண்டும் ஆசானே..
    தங்களுக்கு இருக்கும் பிரச்சனையில் இவ்வளவு நீண்ட கதையை அடிப்பதே பெரும் சாதனைதான்.
    கருத்து புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன் படிக்கின்ற காலத்தில் நான் எழுதிய கதை என் கண்ணில் பட்டது. எந்த இதழிலும் இந்தக் கதை வெளிவரவில்லை. கொஞ்சம் பெரியதாக இருந்தது. அதனால் இதை இரண்டு மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதாலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் சிறுசிறு மாற்றங்களுடன் இது தொடர்கதையாக நீண்டுவிட்டது. மற்றபடி எனக்கு இதுபோலத் தொடர் எழுதிப் பழக்கம் இல்லை. தங்களின் வருகையும் கருத்தும் என்னைப் பண்படுத்துமே தவிர புண்படுத்தாது. மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஒ கோ ... அப்படியா
      இதே போல ஒரு நிகழ்வு நடந்ததே நினைவில் இருக்கா ?

      நீக்கு
    3. அன்புள்ள அய்யா,

      அந்த நிகழ்வை மறக்க முடியுமா?

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தமிழ்மணம் வாக்கிற்கு மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...