சனி, 7 மே, 2016

புதிய உடன்படிக்கை - 3 -நாடகம்



காட்சி-3
இடம்: ஹோட்டல்
பாத்திரங்கள்: ஜான்சன், நண்பர்கள் கனகராஜ், செல்வம், சேகர்.

(ஜான்சனின் வரவுக்காக காத்திருக்கின்றனர்.  ஜான்சன் உள்ளே வருகிறான்)
                                                                       

செல்வம்: என்னடா... ஜான்சன் இவ்வளவு நேரமாவா எங்கள காக்க வைக்கிறது...?

ஜான்சன்: சாரிப்பா... எ பொஷிசன்ல நீங்க இருந்தாத் தெரியும்... சரி... ஒங்களுக்கு என்ன டிரிங்ஸ் வேணுமோ வாங்கிக்கங்க... நீங்க இன்னக்கி மட்டும் எது வேணுமுனாலும்... எவ்வளவு வேணுமுனாலும் குடிக்கலாம்...

கனகராஜ்: டேஅப்போ உனக்கு...?

ஜான்சன்: எனக்கா...?  டே...! இன்னக்கி எனக்கு பஸ்ட் நைட்... தெரியுமுல்ல...

கனகராஜ்: அதுனாலதான் கேக்கிறேன்... பயமில்லாம போகணுமுல்ல...

ஜான்சன்: வொய்ப்... கண்டு பிடிச்சிட்டான்னா...?

செல்வம்:  வாடையடிக்காம வாய மாத்திக்கலாம்டா... எதுக்கு பாக்கு... பாத்தாத்துக்கு ஏலக்காய்... சோம்பு... கொய்யாக்காய் மிட்டாய் இருக்கு...    நீ எதுக்கு கவலைப்படுறாய்...?

சேகர்: ஏம்ப்பா.... மச்சியப்போட்டு ரொம்ப கம்பல் பண்றீங்க... வீட்ல... ஏடாகூடமா ஆயிடப் போவுது... லைட்டா... பீர்மட்டும் என்னாட்டம் குடிக்கட்டுமே...!

கனகராஜ்: டே! சேகர்... ஒனக்கு கலரக் குடிச்சாலே போதை வந்திடும்... ஜான்சனைப் பத்தி நீ தெரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்... அவனுக்கு ‘பீர்வாடையே ஆகாது... அவன் எப்பவுமே... ஹாட்டிரிங்ஸதான்...

செல்வம்: டே!  நம்ம பேசிக்கிறத பாத்தா... இன்னைக்குத்தான் குடிக்க ஆரம்பிக்கிற மாதிரில்ல இருக்கு... இத்தன நாளு குடிச்சிட்டு வீட்டுக்கு போயிருக்கியே,... என்னைக்காவது தெரிஞ்சிருக்கா...? சொல்லுடா...?

ஜான்சன்: இல்ல...!

சேகர்: என்னைக்கும் மாதிரியா இன்னக்கி... விளையாடாதிங்கடா...

கனகராஜ்: நீ இல்லாம குடிக்கிறதா...?  நெனச்சா மனசுக்க ரொம்ப கஷ்டமா இருக்குடா...!

செல்வம்: லைட்டா... கம்பெனி கீப்பப் பண்ணுடா...

ஜான்சன்: ம்... ம்... (யோசித்து) சரி... ஒங்க இஷ்டப்படியே குடிக்கிறேன்... போதுமா...?  எனக்கும் நீங்க குடிக்க... நா பாத்திக்கிட்டு இருக்க... மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு...!
                                                               

கனகராஜ்: போதும்ப்பா... சரி... ஒ அளவு எவ்வளவு...?

ஜான்சன்: எ அளவா...?  இன்னைக்கி எனக்கு ‘குவாட்டர்’ போதும்...

சேகர்: என்ன குவாட்டரா...?  அது அதிகம் மாதிரி தெரியுது...

ஜான்சன்: ‘ஆஃப்அடிச்சாத்தான் எனக்கு லேசா போதை இருக்கிற மாதிரி தெரியும்... தெரியுமா...?

கனகராஜ்: அதானே... எவ்வளவு குடிச்சாலும்... குடிச்ச மாதிரியே தெரியாது... தெரியுமுல்ல... அப்புடியே ஸ்டடியா இருப்பான்...

ஜான்சன்: அதானே... நல்லா எடுத்துச் சொல்லுடா... சரி என்னனென்ன வேணுமோ...  ஆர்டர் பண்ணுங்க... அவுங்க அவுங்க... தனித்தனியா ஆர்டர் சொல்லிக்கங்க...  என்ஜாய்...சர்வர்...

(சர்வர் வர... ஆர்டர் செய்கிறார்கள்)


                                                                                                                         
                                                                                                

                                                                                                                           -தொடரும்...
                                                   
                                                
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.                                                                                                                                                                                                       






















8 கருத்துகள்:

  1. ஆகா
    திருமண மாப்பிள்ளையே பார்ட்டியிலா
    தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாரே!

      தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    தாங்கள் தொடர்வதற்கும் வாக்களித்ததற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எங்கே போய் முடியப் போவுதோ ,இந்த என்ஜாய் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      எதுவரை போகுமோ... அதுவரை போகலாம்... புதுவகை ரசனையோடு பார்க்கலாம்...!

      நீக்கு
  4. ஓ கல்யாண தினத்தன்றே குடி....என்ன ஆகப் போதுகு பார்க்கச் செல்கின்றோம்

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    குடிமகனே...பெருங்குடிமகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு...கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...!

    நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...