வியாழன், 31 டிசம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (13)


   அன்று ஞாயிற்றுக்கிழமை  சீக்கிரம்   பொழுது  புலர்ந்தது போலவே  தெரிந்தது.
                                         
                                                                           
                                                                                                           


   ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகே ரங்கராஜபுரம் கே.வி.எஸ். தெருவில் உள்ள கலைப்பிரியா திருமண மண்டபத்தில் இரவில் எரிந்த சீரியல் லைட் இன்னும் எரிந்து கொண்டே இருந்தது.  நகரப் பேருந்துகளிலிருந்தும் இருசக்கர வாகனங்களில் இருந்தும் உறவினர்களும் நண்பர்களும்  சுற்றம் சூழ வருகை புரிய ஆரம்பித்தனர்.

           கல்யாண மண்டபத்தில் காலை டிபன் இட்லி, பொங்கல், கேசரி ரெடியாகி இருந்ததால் வருகைபுரிந்த நெருங்கிய உறவினர்களெல்லாம்  சாப்பிட்டுவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.

            திருமணம் முடிந்தவுடன் சாப்பிடுவதற்காகச்  சைவச் சாப்பாடு சமையல் கூடத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை  அதன் சாம்பார் வாசனை சாப்பிட்டவர்களைச் சுண்டி இழுத்தது. 


                                   

   மணமகன் கல்யாணராமனும் மணமகள் சசிரேகாவும் அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து இறங்கினர்.  காருக்குள் இருந்து மணமகனின் அம்மாவும் அப்பாவும் இறங்கினர்.

   “ஒம்பது முப்பதில இருந்து பத்து முப்பதுக்குள் முகூர்த்த நேரம்... இப்பவே மணி எட்டரையத்தாண்டுது... சீக்கிரம் போயி டெர்ஸ் பண்ணிட்டு ரெடியாகுங்கோ...!” என்று அவசரப் படுத்தினார் திருமண மண்டபத்தில் வரவேற்பில் நின்று கொண்டு வருகின்றவர்களையெல்லாம்  வரவேற்றுக் கொண்டு இருந்த ரெங்கராஜ்.
                                                       
   “அம்மா... நீ அப்பாவ மாடிக்குக் கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்க... பார்வை மட்டுங்கிறதுனால படி தெரியாம விழுந்திடப் போறாரு... கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்கம்மா...” என்று கல்யாணராமன் சொல்லிவிட்டுக் கீழ்த்தளத்தில் இருக்கும் மணமகன் அறைக்குச் சென்றான்.  அவனுடன் அவனது நண்பர்களும் உள்ளே சென்றனர்.

       “பட்டு வேட்டிய மட்டும் கட்டப் போறாய்... சட்டை கிடையாது...!”
நண்பன் நடராஜன் சொல்லிக்கொண்டே பட்டு வேட்டியை நீட்டினான்.

       “ஒன்னோட கட்டு மேனிய பட்டு வேட்டியோட எல்லோரும் இன்னக்கிப் பாக்கப்போறாங்க...” உடனிருந்த மற்றொருவன் கூறினான்.

        “எனக்கே அத நெனச்சா வெக்கமாத்தான் இருக்க... என்னா வழக்கம்டா... சட்டை போடாம...!” என்று மாப்பிள்ளை கல்யாணராமன் கேட்டான்.

         “கேட்டா... அதுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லுவாங்கா...!  இதெல்லாம் நம்ம மரபு... அப்படி  இப்படின்னு கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க... ஊரோட ஒத்துக் போக வேண்டியதுதான்...பேண்ட் சட்டையை கழட்டிட்டு பேசாம வேட்டியக் கட்டுடா...!” என்று நண்பன் நடராஜன் சொன்னான்.

          கல்யாணராமன் பட்டு வேட்டியக் கட்டிக்கொண்டு தலையைச் சீப்பால் சீவினான்.  முகத்திற்குப் பவுடர் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மும்முரம் காட்டினான்.  

   சிரேகாவை மணமகள் அறைக்குள் அலங்கரிப்பதற்காக உறவுப் பெண்கள் அழைத்துச் சென்றனர்.  

        “சிரிச்ச முகமா இரும்மா... மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்காத... இன்னக்கித்தான் சிரிச்சிக்கிட்டு இருக்கணும்...!” உறவுக்காரப் பெண் ஒருத்தி உரிமையுடன் சொன்னாள்.

         “இதுக்கு மேல சிரிக்க முடியாதுங்கிறியா... ஆமாமா... இன்னக்கியே சிரிச்சிக்கம்மா...!”  பேசிக்கொண்டே சசிரேகாவைப் பட்டுச்சேலையைக் கட்ட வைத்தனர்.  கழுத்தில் பெரிய நெக்லஸ், தங்கச் செயின்கள், நெத்திச் சுட்டி, இடுப்பில் ஒட்டியாணம், காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் அணிவித்தனர்.  தலையில் தலையில் மல்லிகைப் பூச்சரங்கள் சூடினர்.  உதட்டுச்சாயம் பூசச்சொல்லி வற்புறுத்தினர்.  அதெல்லாம் வேண்டாம் என சசிரேகா மறுத்து விட்டாள்.  தங்க விக்ரகம் போலச் சசிரேகா ஜொலிப்பதைப் பார்த்து பெண்களே அவளைப் பார்த்து ‘‘எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு...’’   உனக்கு  திருஷ்டிதான்  சுத்திப் போடனும்  என்று மணமகள் அறைக்குள் இருந்தவர்கள் சொன்னார்கள்.  அவர்கள் எதைஎதையெல்லாமே பேசிக் கொண்டு இருந்தார்கள்.  சசிரேகா அதையெல்லாம் கேட்கின்ற மனநிலையில் இல்லை.

   ரெங்கராஜ் ‘ பி.எச்.இ.எல்.’லில்  மேனேஜராக இருப்பதால்  கம்பெனியில் இவருக்குக் கீழே பணியாற்றும்  ஊழியர்கள் கூட்டமும் அதிகமாக வரவே மண்டபம் நிரம்பி வழிந்தது.

    “திருமண மண்டபம் என்று பெயர்தானே தவிரப் பேன் வசதிகூட இல்லை... கீத்துக் கொட்டகை... ஒரு நல்ல கல்யாண மண்டபம் கிடைக்கலையா...!.” வந்தவர்களில் ஒருவர்.

   “மேனேஜர் ஏன் இங்க போயிக் கல்யாணத்த வச்சாரு... நம்ம ஏரியாவில நல்ல மண்டபம் எத்தன இருக்கு...?“

   “இல்ல...இல்ல... ரெங்கராஜ் சாருக்கு... ரெங்கநாதர் பள்ளி கொண்டுள்ள  ஸ்ரீரங்கத்தில வக்கணுமுன்னு... அவரோட விருப்பம்... பெருமாள் மேல அவ்வளவு பக்தி...!”

   “ஒங்க விருப்படியெல்லாம் கல்யாணம் வக்க முடியுமா...?  அது அவுங்களோட விருப்பம்... அத விடுங்கப்பா... மணமேடை நல்லா அலங்கரிச்சிருக்காங்க... பாத்தியா... வீடியோகாரர் நம்பள எல்லாம் படம் எடுத்திட்டு வர்றாரு... நல்லாப் போஸ் கொடுங்க...?”

   “ஆமாமா... அப்பத்தான் கல்யாணத்துக்கு நாம வந்தது தெரியும்... சும்மா சொல்லக்கூடாது... செலவு செய்ய வேண்டியதுதானே... ஓரே பொண்ணு...  அமெரிக்க மாப்பிள்ள.... இருக்கிறவன் அள்ளி முடிய வேண்டியதுதான்...” - கம்பனியில் பணி புரிபவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு மாடியில் போடப்பட்டிருந்த  சேரில் அமர்ந்திருந்தனர்.

   மணமேடையில் அய்யர் வந்து அமர்ந்து ஹோமம் வளர்க்க ஆரம்பித்தார். மந்திரங்களைச் சமஸ்கிருதத்தில் ஓத ஆரம்பித்தார்;  அவர் ஓதுவது யாருக்குப் புரியும்?  மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெய் வார்க்க ஆரம்பித்தார்.  லேசாகப்  புகையுடன் தீ மெல்ல எரிந்தது.  தொடர்ந்து மந்திரங்களை ஓதிக்கொண்டே இருந்தார்.  
                                         
   
   சுமார் அய்நூறுக்கும் மேல் உறவினர்களும் நண்பர்களும் அந்த மாடியில் கூடிவிட்டனர்.   காலைச் சூரியனின் வெயில் சுள்ளென அடித்தது;  கூட்டம் நிரம்பி வழிந்ததாலும் மண்டபத்தின் மாடியில் கூரை வேயப்பட்டிருந்ததால் திருமண அரங்கத்தில் இருந்தவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது.

   வீடியோகிராபர் இதையெல்லாம் சுற்றி வளைத்துத்  தன் கேமராவிற்குள் படமெடுத்துக்  கொண்டிருந்தார்.

   “நாழியாகுது... சீக்கிரம் மாப்பிள்ளயக் கூட்டிண்டு வாங்கோ...!” அய்யர் அவசரப்படுத்தச் சிறிது நேரத்தில் பட்டுவேட்டி கட்டிய மாப்பிள்ளையை மணமேடைக்கு  அழைத்து வந்தனர்.
                                       


   தூரத்தில்  படமெடுத்துக் கொண்டிருந்த  வீடியோகிராபர்  மணமகன் வருகை புரிந்ததை அறிந்து வேமாக ஓட்டமும் நடையுமாக  மணமேடை அருகே வந்தார்;  வந்தவர் ‘போகஸ்’  விளக்கின் பிளக்கைச் சொருகினார்.  அடுத்த நொடியே ‘டமார்’ என  போகஸ் லைட் வெடித்து, கேமராவுடன் யாகத்தீயில் விழுந்தபொழுதே, அய்யர் கையில் இருந்த நெய் சொம்பைத் தட்டிவிட்டுத் தீயில்  கவிழ்ந்தது.   ‘டமார்...டமார்...’ சப்தம் கேட்க தீச் சுவாலை மேலெழும்ப மணமேடையே ஒரே புகைமூட்டமாகிக்  கூரையில் தீ பற்றியது.   தீ மிக வேகமாகப் பரவியது.  திருமணத்துக்கு வந்து மாடியில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக எழுந்து கீழே இறங்க ஓடினர்.  கூட்டம் முழுக்க ஒரே நேரத்தில் ஓட முனைந்ததால் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கீழே விழுந்தனர்.

    கீழே மணப்பெண் அறையில் இருந்த சசிரேகாவை  உறவுப் பெண்கள்  சரியான நேரத்தில் மண்டபத்தைவிட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர்.

   மணமகன் கல்யாணராமன் வேகமாக ஓடி அவனின் அம்மாவிடம் ‘ ‘‘அப்பாவை நான் தூக்கிகொண்டு வருகிறேன்... நீங்க வெளியே போங்க...” என்று சொல்லிவிட்டு;      பார்வை சரியாகத் தெரியாத தனது அப்பாவைத் தூக்க முனைந்தான்;  அவர் கனமாக இருந்ததால் அவனால்  தூக்க முடியவில்லை.  ‘‘யாராவது அப்பாவைத் தூக்க உதவுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினான்.  அவரவர் தப்பித்தால் போதும் என்று  ஓடுவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

   மாடிப் படிகள் மிகக் குறுகலாக இருந்ததால் ஓடியவர்களால்  வேகமாக வெளியேற முடியவில்லை. கூட்டம், கூட்டமாக முட்டிக் கொண்டு அவர்கள் கீழே விழுந்தனர்.  நெரிசல் மற்றும்  குழப்பத்தால் பெரும்பாலானவர்கள் மாடியைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை.   மாடியில் இருந்து இறங்கும் இடத்திலும் தீப்பிடித்துக் கொண்டது. படிகளை அடையமுடியாமல் பலரும் தவித்தனர்.  தீ மிக வேகமாகப் பரவியது. தீப்பிடித்த கூரை சரிந்து விழுந்தது.    அங்கிருந்தவர்களின் உடைகளில் தீப் பற்றிக் கொண்டது.    புகையில் பலர் மயங்கி விழுந்தனர்.  மண்டபத்தின் மர ஜன்னல்கள், கதவுகளிலும் தீவேகமாகப் பரவி எரிந்தது.

   மண்டபத்தில் ‘அய்யோ...அம்மா...காப்பாத்துங்க...’ என்ற அலறல் சத்தமும் மரண ஓலமும் நீண்ட தூரத்துக்குக் கேட்டது.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஒன்றும் செய்ய முடியாமல் செய்வதறியாமல் திகைத்து  நின்றனர்.


   அங்கு நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவர் தீயணைப்புப் படைக்குப் போன் செய்தார்..  சில நிமிடங்களில் ஒட்டு மொத்த மண்டபமும்  தீப் பந்தமாக மாறியது. 

   மண்டபம் மிகக் குறுகலான சந்துக்குள் இருந்ததால், வெளியில் இருந்தவர்களாலும் உள்ளே சென்று யாரையும்காப்பாற்ற முடியவில்லை.

   சற்று நேரத்திலேயே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள்  விரைந்து வந்தன.  எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க வீரர்கள் பலமணி நேரம் போராடினர்.  நீண்ட போரட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது.  அதன் பிறகே வீரர்கள் உள்ளே செல்ல முடிந்தது..  

     திருச்சியில் இருக்கும் அனைத்து ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்ட படுகாயமடைந்தவர்களைத் தீயணைப்புப் படையினர் மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தனர்.  திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ்கள் பறந்தன. 

        “ எங்க என் மாப்பிளை எங்க என் மாப்பிள்ளை ?” என ரெங்கராஜ் கதறியபடி மாடிப்படியில் ஏறத் தொடங்கினார்.  

   
                                                                                 வ(ள)ரும்...
படிக்க  ‘கிளிக்’ செய்க 

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (11)

நீங்க நினைக்காத நெஞ்சம்...!(12)


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.


















22 கருத்துகள்:

  1. மணவையாரே மனம் பதைத்து விட்டது எதிர்பாராத திருப்பம் காயமுற்றவர்கள் நலமாக ஸ்ரீரங்க நாதர் அருள் புரிவாராக
    மாப்பிள்ளையின் நிலை அறிய காத்திருக்கின்றேன்
    தமிழ் மணம் என்னவாயிற்று பிறகு வருவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திருக்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றி.

      தமிழ் மணம் தறபொழுது திறந்திருக்கிறது.

      நீக்கு
  2. அடடா...... இப்படி நடந்து விட்டதே என்று தோன்றுகிறது.

    அடுத்த பதிவில் முடிந்து விடும் எனத் தோன்றுகிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அடப்பாவமே செம ட்விஸ்ட்! சரி ஏதோ நடக்கப் போகுதுனு நினைச்சாலும் இது எதிர்பாராத ஒன்று..சரி நல்லதா முடிச்சு சுபம் போடப்போறீங்க தெரியுது! ஜோடிகள் இணையப்போறாங்க..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஆரம்பத்திலேயே விறுவிறுப்பு. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

      மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஐயா வணக்கம்.

    இந்தத் திருப்பம் சற்றும் எதிர்பாராதது. திருவரங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஒன்றில் இது போன்ற தீ விபத்து நடந்து பலர் உயிர் இழந்தது நினைவுக்கு வருகிறது.

    வர வர படிப்பவர் நெஞ்சத்தையும் தங்கள் பதிவை விட்டு “ நீங்க “ நினைக்காத நெஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறீர்கள்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      மிக்க நன்றி அய்யா.

      நீக்கு
  10. வணக்கம் ஐயா!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    தொடர்கதை இடர்பல வந்தமையால் தொடரமுடியாது போய்விட்டது.
    நேரம் கிடைக்கும்போது முற்பகுதிகளையும் படித்துக் கருத்திடுவேன் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      இடர் நீங்க இயற்கை இந்த ஆண்டு இனிதாய் அருள்புரிய வேண்டும். நேரம் கிடைக்கும் போது படியுங்கள். உடல்நலனில் அக்கறை கொள்ளவும்.

      நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...