அந்தாதி
அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக அமையப் பாடுவது அந்தாதியாகும்.
அந்தம் (இறுதி) ஆதியாக (முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.
மூன்று முடிச்சு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல் அற்புதமான அந்தாதி. திரைப்பாடலில் வேறு அந்தாதி பாடல் இருந்தால் அறியத்தரலாமே!
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..
மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்...
மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்...
"ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம்
கோடியின்பம் தேடிவந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
ஓசையின்றிக் கேட்குமது ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு மேடைகண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தைபல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும்மொழிமௌனம்
ராகந்தன்னை மூடிவைத்த வீணையவள் சின்னம்
சின்னம்மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலைக்கோலம்
என்னையவள் பின்னிக்கொள்ள என்றுவரும் காலம்
காலமிது காலமிது காதல்தெய்வம் பாடும்
கங்கைநதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலில் முதல் ஐந்து வரிகளில் அந்தாதி அமைப்பினைக் காண முடிகிறது.
மண் திணிந்த நிலனும்
தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார்பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:
· ஒலியந்தாதி
· பதிற்றந்தாதி
· நூற்றந்தாதி
· கலியந்தாதி
· கலித்துறை அந்தாதி
· வெண்பா அந்தாதி
· யமக அந்தாதி
· சிலேடை அந்தாதி
· திரிபு அந்தாதி
· நீரோட்ட யமக அந்தாதி
· அந்தாதி வகை இலக்கியம்;(8)
· அற்புதத்திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
· பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமான் நாயனார்
· கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
· சிவபெருமான் திருஅந்தாதி - கபில தேவர்
· சிவபெருமான் திருஅந்தாதி - பரணதேவர்
· திருவேகம்பமுடையார் திருவந்தாதி - பட்டினத்தார்
· திருத் தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
· ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
அந்தாதி.
பெரும்பாலும் அந்தாதிகள் வெண்பா, விருத்தம், கலித்துறை எனும் பாவினங்களில் பாடப்பெற்றுள்ளன.
====================================================
பெரும்பாலும் அந்தாதிகள் வெண்பா, விருத்தம், கலித்துறை எனும் பாவினங்களில் பாடப்பெற்றுள்ளன.
====================================================
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் - (புறம் - 2)
அற்புதத்
திருவந்தாதி
|
||||||||||||||
காரைக்கால் அம்மையாரால் இயற்றப்பெற்ற இந்நூல் 101 வெண்பாக்களால் ஆகியது. இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. சிவபெருமானிடம் ‘இந்த உலகில் பிறந்து பேசக் கற்றுக் கொண்ட நாளிலிருந்து உன் திருவடிகளையே
சரண் அடைந்துள்ளேன். என்
துயர் தீர்ப்பது எந்நாளோ’ என்ற உள் உணர்வோடு
பாடல்களைப் பாடியுள்ளார். இறைவனின் பெருமைகளையும், தம் அன்பின் வெளிப்பாட்டையுமே மையமாக வைத்துப் பாடியுள்ளார்
அம்மையார்.
|
||||||||||||||
‘பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்’ எனத் தொடங்கிப் ‘பேராத காதல் பிறந்து’ என நூல் முடிவதால் மாலைபோல் அமைந்தது இந்நூல்.
அபிராமி அந்தாதிஅபிராமிப் பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி பெரிதும் வாசிக்கப் படுவது
வாசகர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் இசைப்பேழைகளை
அல்லது குறுவட்டுக்களாக கிடைக்கின்றன.
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே - 99 பொருள்: ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே! தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும், இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு). குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும் விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! - 100 பொருள்: ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.
பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமான் நாயனார்
சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட நூல். இவர் 63 நாயன்மார்களில்ஒருவர். அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன.
பொன்வண்ண மேனி. மின்வண்ணச் சடை, வெள்ளைநிறக் காளை ஆகியவற்றைக் கொண்டிருப்பவன் ஈசன். (இவற்றில் வியப்பு ஒன்றும் இல்லை) என் மனத்தின் வண்ணம் எப்போதெல்லாம் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியெல்லாம் காட்சி தருகிறானே!
காளத்தியில் கயிலையைக் கண்டவர் அப்பர். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தோன்றியது இந்த நூல். இந்தத் தொடுப்பில் கயிலை பற்றி ஒரு பாடலும், காளத்தி பற்றி அடுத்த பாடலும் என மாறி மாறிப் பாடல்கள் அமைந்துள்ளன.
பாடல்
எடுத்துக்காட்டுக்கு இரண்டு வெண்பாக்கள் அந்தாதித் தொடையுடன்
கயிலையை ஏத்தினால் பிறப்பிருக்கை இல்லை.
காளத்தியைப் பேணுவார்க்கு என்றும் மகிழ்ச்சி.
|
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குசிற்றிலக்கிய வகைகளின் இலக்கணங்களை அவற்றிற்குரிய இலக்கணத்தோடு தரும் உங்கள் முயற்சி இன்று பெரிதும் தேவைப்படுகிறது.
திரைப்படப்பாடல் என்றெல்லாம் இணைத்துக் கொண்டுசெல்வது, படிப்பவர்கள் மனத்தில் அணுக்கத்தை ஏற்படுத்தும்.
தங்களின் இப்பணி தொடர வேண்டும்.
நன்றி.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
சங்க இலக்கியங்களில் பதிற்றுபத்து நான்காம் பத்து அந்தாதி அமைப்பு உண்டு என்பது பலர் கருத்து, எனினும் தாங்கள் சொன்ன காரைக்கால் அம்மையார் நூலே முதல் நூல் என்பர்.
பதிலளிநீக்குஉலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்,,,,,,,,,,,,,
எனும் இளம்பூரனர் பாடல் அந்தாதிக்கு சான்று காட்டுவர்,
தங்கள் பதிவு மிகவும் பயன்படக் கூடியது இன்றைய நிலையில். நன்றி.
அன்புள்ள சகோதரி,
நீக்குஅந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி ... பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில்தான் இருக்கிறது என்ற தகவல் இருக்கிறது. தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
அந்தாதியை இலக்கியப் பாடல்களாக சொல்லியிருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு புரிந்திருக்காது. ஆனால் அதையே திரைப் படப்பாடலில் சொன்னதால் சட்டென்று விளங்கியது.
பதிலளிநீக்குத ம 3
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அந்தாதி பற்றி அறியாச் செய்திகள் பல அறிந்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
பழமையையும் (அந்தாதி) புதுமையையும், (சினிமா) ஒன்றாகக் கலந்து சுவையாகச் சொன்னீர். இது போன்ற படைப்புகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குவலைத்தளம் புதிய வடிவினில் மிளிர்கின்றது. வாழ்த்துக்கள்.
த.ம.4
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் ஆக்கப்பூர்வமான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அந்தாதி பற்றிய விபரங்கள் திரைப்படப் பாடல் மூலம் இலகுவாக புரிய வைத்தமை இனிதே.
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!
அன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குதங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
இனிமையான பாடல்... அருமையான விளக்கங்கள்...
பதிலளிநீக்குபாராட்ட வார்த்தைகள் இல்லை...
வாழ்த்துக்கள் பல...
அன்புள்ள வலைச்சித்தரே!
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அந்த காலத்தில் இப்படி அந்தாதி வடிவில் வந்த பாடல்களை இன்றும் ரசிக்க முடிகிறது ,இன்னைக்கும் பாடல்கள் வருதே கொலை வெறியாய் :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குஉண்மைதான் பகவானே...! அந்தக் காலப்பாடல்கள் நெஞ்சில் நிலைத்து நிற்பவை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அந்தாதியைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும் வகையில் மிக அழகான ஒப்புமைகளுடன் தாங்கள் பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. சிற்றிலக்கியங்களில் ஒரு வகையான அந்தாதியைப் பற்றி பல அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆடி வெள்ளி தேடி உன்னை...என்ற பாடலுக்காக அத்திரைப்படத்தை நாங்கள் பல முறை பார்த்தது தற்போது நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அண்ணா! கலக்குங்க !! அந்தாதியை இவ்ளோ அழகா,எளிமையா, சினிமா பாட்டு உதாரணமெல்லாம் கொடுத்து விளக்கிய விதம் சூப்பர் அண்ணா!
பதிலளிநீக்குஅன்புச் சகோதரி,
நீக்குஉதகைக்குச் சென்று வந்ததால் தாமதம். தங்களின் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வணக்கம் மணவையாரே...
பதிலளிநீக்குதாமதமான வருகைக்கு மன்னிக்கவும் காரணம் எனது பதிவில் சொல்லி இருக்கிறேன்.
திரைப்படப்பாடல்களையும் இணைத்து அழகாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள் அருமை. நிறைய விடயங்களை இந்தப்பாமரனுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி
தமிழ் மணம் 10
அன்புள்ள ஜி,
நீக்குதங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அந்தாதி அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடரட்டும் தமிழ்ப்பணி
தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
நீக்குதம 11
பதிலளிநீக்குதங்களின் வாக்கிற்கு நன்றி.
நீக்குமுதலில் அருமையான ப்திவிற்கு எங்கள் வணக்கம்!
பதிலளிநீக்குஅதுவும் மிக மிக அழகான திரைப்படப் பாடல்களுடன் விவரித்து, இலக்கியங்களில் இருந்து பல பாட்டுகள் கொடுத்து விளக்கியது அருமை! தங்கள் முயற்சி மிகவும் பாராட்டிற்குரியது. இதை நாங்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளோம்......நண்பரே! உங்கள் அனுமதியுடன்.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவணக்கம். தாராளமாக செய்து கொள்ளுங்கள். தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
வணக்கம் அண்ணா
பதிலளிநீக்குநலமா? கை நன்றாகச் சரியாகிவிட்டதா? கேட்கவேண்டும் என்று நினைத்து நினைத்து வண்டி தாமதமாக வந்துள்ளது :-)
அந்தாதி பற்றி அழகாகக் கற்றுக்கொடுத்தற்கு நன்றி. நீங்களும் விஜூ அண்ணாவும் செய்யும் பணி பெரிது! இருவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்
அன்புள்ள சகோதரி,
நீக்குவணக்கம். வண்டி தாமதமாக வந்தது பரவாயில்லை, வண்டி வேகமாகப் போனதால்தான் எனது இடது கையில் சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் சேதமடைந்துள்ளன. அந்த விரல்களில் எந்த வேலையும் (தட்டச்சு உட்பட) செய்ய இயலாது.
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
அந்தாதித் தொடையைப் பற்றி அருமையான விளக்கத்துடன் எடுத்துக்காட்டுகளும் அளித்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅந்தாதியில் அமைந்த 'ஆழ்வார்கள் நான்மணிமாலை' என்னும் கவிதைப் பதிவை எழுதிவருகிறேன். இந்தப் பதிவு பற்றிய தங்கள் கருத்துகளையும் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இமயவரம்பன்
https://www.imayavaramban.com/ஆழ்வார்கள்-நான்மணிமாலை/