வியாழன், 27 நவம்பர், 2014

வலைப்பூவை செல்போனில் ...!வலைப்பூவை செல்போனில் 

பார்ப்பதற்கு ஏற்ப மாற்ற...!

 

          அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே...!

                     வணக்கம்.  தற்போது செல்போன்களின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது.  ஒரே ‘கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என செல்போனிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன.
                                 


                     வலைப்பூ வலைப்பக்கமானது கணினிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதனால் வலைப்பூவை செல்போனில் பார்க்கும்போது தெளிவாக இட அமைப்புடன் தெரிவதில்லை.
                                                                                        

                                                                  
                      ஆனால்... செல்போன்களின் அபார வளர்ச்சியால் பலரும் இணையதளங்களைத் தேடி... கணினிக்குச் செல்லாமல் செல்போனிலேயே பார்த்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.    வலைப்பூவை செல்போனிலும் பார்ப்பதற்கு ஏற்றபடி அமைப்புகளை அமைத்து விட்டால் பலர் பயனடைவார்கள்.  இதற்கு எந்த மென் பொருளையும் உங்கள் வலைப்பூவில் சேர்க்க வேண்டியதில்லை.
                                                                             
                      பிளாக்கர் சேவையே இதை எளிமைப்படுத்தியுள்ளது.  அதை எப்படிச் செய்வது?
                           


                      கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து பிளாக்கர் டிராப்ட் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.

                   http://draft.blogger.com
  
                                                Settings>Email&Mobile  என்ற பகுதிக்குச் செல்லவும். பின்னர்
                                                Show Mobile Template
 என்பதற்கு நேராக உள்ள
                                                Yes.  On mobile devices.
                                                Show the mobile
                                                version of my     Template  
என்பதைத் தேர்வு செய்து சேமித்துக் கொள்ளவும்.

                   செல்போனில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதை அறிந்துகொள்ள அருகிலேயே உள்ள
                    Mobile Preview  
என்ற பட்டனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ள முடியும்.

                  தினத்தந்தியில் 10.11.2014 அன்று கம்ப்பூட்டர் ஜாலம் பகுதியில் இடம் பெற்ற செய்தியைத் தந்துள்ளேன்... 
                  முயன்று பாருங்களேன்...!
எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன்...!!

                                                                                                     ( நன்றி- தினத்தந்தி)


-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


26 கருத்துகள்:

 1. அய்யா,
  வணக்கம்.
  ஏதேது தொழில் நுட்பப் பதிவர் ஆகிவிட்டீர்களே!
  முன்பே தெரிந்திருந்தால் தோழர் மதுவை விட்டுவிட்டு உங்களைப் படுத்தி எடுத்திருப்பேனே ?

  எங்களை எல்லாம் மறந்து விடாதீர்கள் அய்யா!

  “ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்“ என்று நீங்கள் சொல்கிறீர்கள்!
  இப்படியே தமிழ்மணத்தில் இணைத்துப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் “பெருக“ என் வாழ்த்துகள்!

  பகிர்வுக்கு நன்றி.

  ( கொஞ்சம் பொறுங்க.. நானும் ஒரு தொழில்நுட்பப் பதிவு போடுறேன் )
  த ம 1
  ( தமிழ்மணம் இல்லாததால் இந்த 1 தங்கள் மனத்திற்கு )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது கவிஞரே நல்ல விதமாக இந்தப்பாமரனுக்கும் விளங்கும்படி சொல்லுங்கள் பார்த்துக்கொள்கிறேன் நன்றி.

   நீக்கு
  2. அன்புள்ள நண்பர் கில்லர்ஜி,

   வணக்கம். இந்த சாமான்யன் படித்ததைப் பகிர்ந்தேன்.

   நன்றி.

   நீக்கு
  3. ஆசானே! என்ன இது தமிழ் வகுப்பு....அதிலும் ஒரு கணக்கைப் புகுத்தினீர்கள், பின்னர் பின்னூட்டம் அலசல்...இப்போது தொழில் நுட்பம்...ஆஹா! எங்கேயோ போகின்றீர்கள்! ஆசானே இந்த மாணாக்கர்களை மறந்துவிடாதீர்கள்!

   நீக்கு
  4. அன்புள்ள அய்யா,

   நான் மிகமிகச் சிறியவன்... பெரிய வார்த்தையெல்லாம் எனக்குப் பொருந்தாது....!

   நன்றி.

   நீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  வணக்கம். தொழில் நுட்பக் கல்வி (D.M.E.) படித்ததோடு சரி... அவ்வளவுதான்... நீங்கள் சொல்வது போல கணினி தொழில் நுட்பம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதய்யா...! தினத்தந்தி நாளிதழில் படித்ததைப் பகிர்ந்து கொண்டேன்...அவ்வளவுதான்.

  தமிழ்மணம் என்னை உள்ளே விடுவேனாங்கிது...!முட்டிமோதிப் பார்க்கிறேன்... கதவு திறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...விரைவில் தமிழ்மணத்தில் இணைத்து ...தங்களின் வாக்குகளோடு...வாழ்த்துகளும் கிடைக்க வேண்டுகிறேன்...!

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் மணத்தில் இணைக்க தாங்கள் திண்டுக்கல் தனபாலன் அவர்களையோ அல்லது தங்களுக்குத்தான் தெரியுமே நண்பர் மது/கஸ்தூரி அவர்களையோ தொடர்பு கொண்டால் போதுமே. பின்னர் தங்களுக்கு தமிழ் மணத்திலிருந்து மின் அஞ்சல் வரும்...

   நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

   தமிழ் மணத்தில் இணைக்க திருவாளர்.மது அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளேன்.... அவரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்...உங்களை உள்ளேயே விட மாட்டேங்கிது என்றார்...தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்... விரைவில் தமிழ் மணத்தில் இணைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது .
   நன்றி.

   நீக்கு
 3. ஆகா
  தொழில் நுட்பப் பதிவர் ஆகிவிட்டீர்களே
  வாழ்த்துக்கள் நண்பரே
  பயனுள்ள பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ... பயனுள்ள பதிவென்று வாழ்த்தியதற்கு நன்றி.

   நீக்கு
 4. ஆகா அருமையான தகவல் அய்யா
  வாழ்த்துக்கள்
  நல்லதோர் பயணம் சிறக்கட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   தாங்கள்தான் முயன்று பார்த்துச் சொல்ல வேண்டும். வலைப்பூ உறவுகளின் நல்லதோர் பயணம் சிறக்க முயன்று பார்த்து வழிகாட்டுங்கள்.

   நன்றி.

   நீக்கு
 5. மணவையாரே,,, சமூக நலன் வேண்டி தாங்கள் இட்ட இடுகையை படித்தேன் இந்தப்பாமரனுக்கும் உதவியமைக்கு நன்றிகள் கோடி......
  அன்புடன்
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா!

  நல்ல தகவல்! ’அவசிய - அவசர’ நிலையில் நான் வெளியே நிற்கின்ற சமயம் நிச்சயம் கைபேசியில் வலையுறவுகளின் பதிவு பார்த்துக் கருத்திட உங்கள் தரவு மிகவும் உதவும்.
  ஆன்ரொயிட் கைபேசியில் செல்லினம் செயலியால் தமிழில் மடல்கள் எழுதுகிறேன். மிகச் சுலபமானது.! அப்படியே பின்னூட்டமும் இடலாம்தானே..!
  தகவலிற்கு மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி,

   ஆன்ரொயிட் கைபேசியில் செல்லினம் செயலியால் அப்படியே பின்னூட்டம் இடலாம்.

   நல்ல தகவலென்று நவின்றதற்கு நன்றி.

   நீக்கு
 7. மிகப் பயனுள்ளத் தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 8. ஐயா! கீழே கொடுத்திருக்கும் வலைப்பூவுக்குச் சென்று பார்க்கவும். அதில் பல போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்களும் கலந்து கொள்ளமாமே என்பதால்...

  http://vayalaan.blogspot.com/

  பதிலளிநீக்கு
 9. அண்ணா
  தொழில்நுட்ப பதிவரா promote ஆகியிறுகிறீர்கள்!!!!! சூப்பர் அண்ணா!! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. அன்புச் சகோதரி,

  அப்படியெல்லாம் இல்லை... படித்ததைப் பகிர்ந்தேன்...
  வேறொன்றும் அறியேன்...!!

  நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...