திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்... காந்தி என்றார்...!




கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்... காந்தி என்றார் தோழா!



கனவிலே வந்தயெம் காந்தி பிரானே!
நனவிலே நான்விடை கூற - மனதிலே
கில்லர்ஜீ வந்தார்! கொடுப்பாய் விடையென்றார்
இல்லையென் பேனோ இனி?


                                                                   
    

                                                           

கரந்தை   ஜெயக்குமார்   கண்ணிலே   காந்தி

பரந்துபட்ட சிந்தனையைப் பாருக்குச் சொல்லிடவே...

தில்லை அகத்தாரும் தீரமுடன் கேட்டிடவே...

எல்லையில் லாதவர் எம்பெருமான் அண்ணலவர்

கேட்டிட்ட நல்லபல  கேள்விக்குத் தான்பதிலைத்

தீட்டினேன் நன்றி யுடன்! 

கனவில் வந்த காந்தி...ஜி! கேட்ட (கில்லர்... ஜி அன்று) கேள்விக்குப் பதில்: 

                                                       
                                                     


நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?


      மகானே!  நீயே முட்டி மோதிப் பார்த்து முடியாமல் போனதால்தானே இந்தக் கேள்வி கேட்கிறாய்...?  உனக்குத்தான் தெரியுமே மறுபிறவி ஒன்று இல்லையென்று... தெரிந்து கொண்டே தெரியாது போல் கேட்கிறீரே...! இந்த நக்கல்தானே வேணாங்கிறது...!

   “கேட்ட கேள்விக்கு பதில் என்ன?...நீ மறு பிறவியில்...”   அண்ணல் மகாத்மா காந்தி ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டிக் கேட்டார்.
                                                                                                       
                                   


   “.....................................................நான் பயந்து கொண்டே மெளனமாக நானும் ஆள்காட்டி விரலை ஆட்டாமல் மெல்ல அவரைப் பார்த்து நீட்டினேன்.
          

ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?


             இப்பக் கேட்டாயே ஒரு கேள்வி...சரியான கேள்வி...தாத்தா...!  கேள்வியில் சின்ன சந்தேகம்... இந்தியாவின் ஆட்சியாளனாகவா...?  இல்லை தமிழ்நாட்டின் ஆட்சியாளனாகவா?
                                                       
              நீ அப்பவே நினைத்திருந்தால் ஆட்சியாளராக வந்திருக்கலாம்... நீதான் ஆட்சி அதிகாரத்தை விரும்பாமல் வெளியிலேயேயிருந்துவிட்டாய்..!  நீமட்டும் தப்பித்துக்கொண்டு என்னை மாட்டிவிடப் பார்க்கிறாயே...இது முறைதானா?...என்ன முறைத்துப் பார்க்கிறாய்...?  கேட்ட கேள்விக்குப் பதில் என்ன என்கிறாயா?  மோடி மஸ்தான் வேளையெல்லாம் என்னிட்ட வேண்டாம் என்கிறாயா?  சோனிதிட்டாமில்லாம ஒரு நல்ல திட்டமாச் சொல் என்று கேட்கிறாயா?                                                               

                                                                                                            
                                                    
       ம்...ம்... இப்படிச் செய்யலாமா?           இந்தியாவிலுள்ள எல்லாக் கோவில்களிலும்...ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்கக்கூடிய தங்கத்தையெல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடவேண்டும்......ஒரு பவுன் தங்கம் கூட இல்லத்தில் யாரிடமுடமும் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்டு ... உடனடியாக நடைமுறைப்படுத்தி ... தங்கத்தையெல்லாம் அரசுக் கஜனாவிற்கு கொண்டு வந்திடுவோம்...வந்திடுவோம் என்ன வந்தாச்சு அண்ணலே...(வேண்டுமானால்... தவிர்க்க முடியவில்லையென்றால்... விருப்பப் பட்ட ஆபரணங்களை இரும்பிலே செய்து மஞ்சள் முலாம் பூசிவேண்டுமானால் அணிந்து கொள்ள உள் ஒதுக்கீடாக ஒரு தனிச் சட்டம் இயற்றிக்கொள்ளலாம்) அப்புறம் என்ன செய்யலாம்?...நீதான் சொல்லனும்...!

                   என்ன ஆச்சர்யம்... பணக்கார நாடுகளிடையே நாம பெற்ற இடத்தைப் பார்த்தாயா?! என்ன?நீயே மிரண்டு விட்டாயாவல்லரசு நாடுகள் எல்லாம் நம்மிடம் கையேந்தி நிற்கிறதா?  நிற்கட்டும்...நிற்கட்டும்...! முதலில்....இந்திய தேசிய நதிகளையெல்லாம் இணைத்து விவசாயத்தை முதலில் முன்னேற்றமடையச் செய்வோம்....நீதானே சொன்னாய்... கிராமங்களால்தான் இந்தியா வாழ்கிறது’ என்று... முதலில் கிராமங்கள் வாழட்டும்..... என்ன தாத்தா நா சொல்றது சரியா?  இல்லையா?

        “  தமிழ்நாட்டப்பத்தி யோசிக்கவே மாட்டியா?
        
        ‘தமிழ்நாடென்ன செய்யதது நமக்கு...நீ என்ன செய்தாய் அதற்கு?
-என்று யோசிக்கணுமா...!  நாம மட்டும் யோசிச்சு....?  நாட்டு மக்கள் யோசிக்கமாட்டேங்கிறாங்களே....! 
          ஆமாம்...! இன்னாள் சட்டமன்றமா?       முன்னாள்சட்டமன்றமா?
                     
                                   


          

     இலவசங்கள் இனி என்ன வேண்டுமென்றாலும்... எவ்வளவு வேண்டுமென்றாலும் ஆட்சியாளர்கள் கொடுத்துக்கொள்ளலாம் என உடனடியாக ஆணை பிறப்பிக்கப்படும்.  ஒரே ஒரு சின்ன நிபந்தனை...ஒரு ரூபாய் கூட அது மக்களின் (வரிப்) பணமாக  இருக்கக்கூடாது என்பதுதான்.... (அரசியல்வாதிகளின் சொத்தில் இருந்துமட்டும்....வேறெதுவும் இல்லை.

         (குறிப்புமீன் பிடிக்க பயிற்சி வகுப்பு எடுத்து கற்றுத் தரப்படும்.  மீன் இலவசமாக யாருக்கும் இனிமேல் கொடுக்கப்பட மாட்டாது)
      

இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?


                இதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்...நீங்கள் இந்தியர்களாக இருப்பதால்...யார் யார் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ...அவர்களிடமும் தங்கநகைகள் இருக்கக்கூடாது என்பது கண்டிப்பாகும் என்று அறிவித்து விடுவோம்...அப்புறம் யாருடைய எதிர்ப்பு இருக்கப்போகிறது...?

 முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

                                                                 
        என்ன தாத்தா இப்படி கேட்டுப் விட்டாய்...பெற்றோர்கள் சேர்த்த சொத்தோபணமோ... பூர்வீகச் சொத்தோ (இப்பொழுது இருக்கும் முதியவருக்கு இது பொருந்தாது) பிள்ளைகளுக்கு அது கண்டிப்பாக அதில் உரிமை கொண்டாட முடியாது... முதியவர்கள் அவர்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக இருந்து  அவர்களேதான் செலவு செய்து கொண்டு வாழ வேண்டும்....!

         பிள்ளைகளோ...பேரன் பேத்திகளோ....அவர்கள் உழைத்த உழைப்பில்தான்...வாழவேண்டும்...உழைத்துத்தான் வாழ வேண்டும்...  முதியோர்களுக்கு இந்தச் சலுகை உடனடியா அமலுக்கு வருகிறது.


அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?


                     பாபுஜீயைப் போல அகிம்சைவாதியாக... தன்னலமில்லாத்... தியாகியாக...  இருக்க முடியாது என்பதால்...

         மக்களுக்கு இம்சை அரசனாக இல்லாமல் இருக்க ஒரு திட்டம்... அரசியல்வாதிகள் ஊழல் செய்யலாம். அது ஒன்றும் தவறில்லை என்று ஒரு திட்டம் போட்டு அரசியல்வாதிகள் நினைத்தபடி திருடிக்கொள்ள இடம் அளிக்கப்படும்.  ஆனால் ஒரு சின்ன நிபந்தனைதான்... ஒவ்வொரு ஊழல் செய்கின்ற பொழுதும் அவரின் உடம்பிலிருந்து (குறைந்தது எந்த ஓர் உறுப்பையாவது...எது என்பது அவரின் சொந்த விருப்பத்திற்கு விடப்பட்டு )வெட்டி எடுக்கப்படும்.  அதற்குரிய மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.  என்ன இருந்தாலும் நாட்டுக்காக உழைத்திருக்கிறார்கள் இல்லையா?  


                                                            

மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?


         இப்படி மொட்டையாக கேட்டால் எப்படி...அரசியல்வாதிகளுக்கு நாம் போடும் மதிப்பெண்களைக் கேட்கிறீர்களா...?  ஒரு தடவை உறுப்பு வெட்டப்பட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது!
                                   

         ‘நான் அதைக் கேட்கவில்லை.... மாணவர்களுக்கு போடும் மதிப்பெண்களைக் கேட்டேன்’ என்கிறீர்களா?...இப்படி விளக்கமாக கேட்டால்தானே புரியும்...!

        
         உங்களுக்குத் தெரியாதா?  ஒன்பதாம் வகுப்பு வரை மதிப்பெண்களே மாணவர்களுக்குக் கிடையாது.... சி.சி.இ. மெத்தேடு... படிப்படியாக இது மேலும் மேலும் வளர்ந்து.... படிப்பில் உயர்கல்வி வரைக்கும் செல்லப் போகிறது...!  மதிப்பெண்கள் இருந்தால்தானே மேல் நீதிமன்றங்கள் போவது...அதற்கான வாய்ப்பேயில்லை! 

         உலகத்தரத்திற்குக் கல்வியை உயர்த்தப் போகிறோம்.  அயல்நாட்டுடன் இதற்கான வரைவு ஒப்பந்தம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

            

விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?


                                                                


       விஞ்ஞானிகள் யாரும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்படும்.  இந்திய நாட்டின் செலவில் படித்து அறிவியல் அறிஞர்களாகி வெளிநாடு செல்வதா?  அண்ணலே ! வெளிநாட்டுத் துணியையே உடுத்தக்கூடாது என்று போராடியவராயிற்றே... வேண்டுமானால் அவர்கள் எந்த நாட்டிற்கு வேண்டுமானலும் சுற்றலா சென்று வர ஒரு மாதம் மட்டும் அனுமதி வழங்கப்படும்.  இங்கு ஊதியம் குறைவாக இருக்கிறது என்ற கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்பட்டு( இங்குதானே படித்தார்கள்) ....குடியரசுத் தலைவரின் ஊதியத்தை விட சிறிது குறைத்து வேண்டுமானல் ஊதியம் வழங்க சிபாரிசு செய்யப்படும்.     

இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

                                                                       
              இதை எனக்கு முன்னால் வந்தவர்கள் செய்யாத்தால் எனக்கு பின்னால் வருபவர்கள் செய்வார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா அண்ணலே!   நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இதைவிட நன்றாக செய்வார்கள்... ஏன் செய்யமாட்டார்களா?
மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
           
            மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக...  என்றால்......
 என்றால்......

                       இந்தியாவில்தான் உலகத்திலேயே அதிகமான இளைஞர்களைக்கொண்டுள்ள நாடு நம் நாடுதான்...!  இப்பொழுது  35 கோடியே 60 இலட்சம் இளைஞர்கள்  இந்தியாவில்தான் இருக்கிறார்கள்...!
                                                                                                 

    
       உனக்குத் தெரியுமா?  உலகிலேயே 10  முதல் 24 வயதுள்ளவர்கள் தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட 26 கோடியே 90 இலட்சம் பேர்தான்...    
             அமெரிக்காவில் 6 கோடியே 50 இலட்சம் பேர்தான் இருக்கிறார்கள்...அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள மனித வளம் மிகுந்த நாடு நம்நாடுதான் என்பதில் பெருமிதம் கொள்வோம்....என்ன மகிழ்ச்சியாக இருக்கிறதா?


    நூறு இளைஞர்களைத்தான் விவேகானந்தர் கேட்டார்... இப்பொழுது பார்த்தாயா? ஆனால் ஒரே ஒரு விவேகானந்தர் இருந்தாலே போதும்!  நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்!

       


எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்குஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

                                                                                       
       எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கா! ... போலத்தானே இருக்கு...! அப்ப சரியா இல்லையா?  என்ன... சரியா இருக்கு...ஆனா சரியா இல்லையா...?  வரும்...ஆனா வராதா?  வலைத்தளத்தில் பதிவர்களுக்குப் பதில் சொல்வதைப்போல நீ சரியாக சொல்வது போல இருக்கு என்கிறீர்களே!  தாங்கள் வலைத்தளத்தைத் திறந்ததைச் சொல்லவே இல்லையே....! தங்களின் வலைத்தள முகவரியைக் கொடுத்தால்தான் என்ன தாத்தா...தா...தா...!

        என்ன...! நிறையப்பாவங்கள் செய்து விட்டதால் எனக்கு வலைத்தள முகவரி கொடுக்க முடியாதா?

       என்ன மானிடப்பிறவியும் கொடுக்க முடியாதா?  எவன் சொன்னான்என்ன இறைவன் சொன்னானா?  

       எங்கே இருக்கிறான்... இழுத்து வந்து என் முன் நிறுத்துங்கள்...! அவனை நான் கேள்வி கேட்க வேண்டும்...?
                                                                   
        எங்கே ஒழிந்து கொண்டு இருக்கிறாய்...நீ உண்மையில் உயிரோடு இருந்தால் முதலில் வெளியே உன்னைக் காட்டு....! நீ இருப்பதாக நீயே சொல்லாத பொழுது... நீ இருப்பதாக இங்குள்ளவர்கள் சொல்வது நியாயமா?  நீ இடைத்தரகர்களாக இராம்பால் போல யாரையாவது சாமியார்களை நியமித்திருக்கின்றாயா?  உன் பேரைச் சொல்லி  உழைக்காமலே கொழுக்கிறார்களே...! பாமர ஏழைகள் உழைத்த பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகிறார்கள்.... நீ கூட எங்களைப்போல மனிதப்பிறவி எடுத்தாகத்தானே இங்குள்ளவர்கள்  சொல்கிறார்கள்...? இப்பொழுது என்ன பிறவியை நீ எடுத்திருக்கிறாய்... அதே பிறவியை நானும் எடுக்கச் சம்மதமா?!

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.


16 கருத்துகள்:

  1. பதில்களில் உள்ள கேள்விகள் + சந்தேகங்கள் சிந்திக்க வைத்தன...

    எனது பாணியில் : கனவில் வந்த காந்தி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      சிந்திக்க வைத்ததற்கு நன்றி.

      நீக்கு
  2. ஆஹா
    அலுவலகம் கிளம்பி விட்டேன் மாலை வருகிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      எல்லோரையும் கிளப்பி விட்டதற்கு நன்றி.

      நீக்கு
  3. அருமையான பதில்கள் ஐயா!

    ஆட்சியாளானாக வந்தால்...அதற்கான பதிலை மிகவும் ரசித்தோம். தங்கம் எல்லாம் கஜானாவுக்கு வந்துவிடும்...ஆஹா நல்ல யோசனை நாங்கள் அடிக்கடிச் சொல்வது இது. இதுமட்டுமல்ல, அரசியல் வாதிகளும் பெரும் பணக்காரர்களும் சேர்த்து வைத்திருக்கும் கள்ளப்பணங்களை கஜானாவிற்குக் கொண்டுவந்துவிட்டால் இந்தியா மிகவும் பணக்கார நாடுதன்...

    முதியோருக்கான பதிலும் மிகவும் அருமை! மற்ற நாடுகளில் இல்லாததை ...அந்த பதிலும் மிகவும் அருமை ஐயா!

    மிக்க நன்றி எங்கள் வேண்டு கோளை ஏற்று பதில் அளித்தமைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தாங்கள் அடிக்கடி சொல்வதையே நானும் சென்னேனா...? ஆச்சர்யம்....! எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அய்யா...! அரசியல்வாதிகள் பணம் பற்றியும்... முதியோர் பற்றியும் .... நம் நாடு பற்றியும்...சொன்னதைப் பாராட்டிய தங்களின் உள்ளத்திற்கு என் நெஞ்சார்ந்து நன்றி.

      நீக்கு
  4. கவிதையோடு தொடங்கி..
    காந்திஜியை பயமுறுத்தி...
    நகையை புடுங்குவதாய் மிரட்டி..
    விஞ்ஞானிகளுக்கு சம்பளம் கூட்டி...
    மக்கள் தொகையை காட்டி...
    இறைவனையும் விரட்டி...
    அருமையாக பதிவைப்போட்டு ‘’அசத்தல் மன்னர்’’ ஆகி விட்டீர்கள் நண்பரே....
    வாழ்த்துகள்

    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கில்லர்ஜீ,

      வணக்கம். அசத்தலான பகிர்வைக் கொடுத்தற்கு மிக்க நன்றி அய்யா. தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் வணங்கி மகிழ்கின்றேன்.

      நீக்கு
    2. நண்பரே மன்னிக்க,
      எனது பெயரை கில்லர்ஜி என்றே எழுதவும் தங்களின் செயலால் தெய்வகுற்றம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்.

      பயபக்தியுடன்...
      கில்லர்ஜி.

      நீக்கு
    3. அன்புள்ள நண்பர் கில்லர்ஜி,

      தெய்வக் குற்றம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சவேண்டாம் அய்யா....! குற்றம் செய்தது நான் தானே... இருந்தாலும் நண்பனுக்கு ஏதாவது இன்னல் வந்துவிடும் என்று அச்சமா...? ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா...’
      என்ற பாடல் வரி இப்பொழுது நினைவுக்கு வருகிறதே...!

      நண்பர் சொல்லிவிட்டதால் தெய்வக் குற்றம் ஏதும் நிகழாது... இப்பப் பாருங்களேன்! O.K.

      நன்றி.

      நீக்கு
  5. நன்றாகவே சொன்னீர்கள். செஸ் விளையாடும் மூத்த குடிமகன்கள் படத்தை ரொம்பவே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மூத்த குடிமகன்கள் மகிழ்ச்சியாக இருப்பது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது தானே அய்யா.... நன்றாகச் சொன்னதாகச் சொல்லிய தங்களுக்கு நன்றி நவில்கின்றேன்.
      தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா!

    கனவில் வந்த காந்திக் கேள்விகளுக்கு
    நனவிலே தந்திட்ட நல்ல பதில்கள்!

    அத்தனையும் உங்கள் உள்ளக்கிடக்கையில்
    ஒளிந்திருந்த உறுத்தல்கள் என நினைக்கின்றேன்!
    ஒரேயடிகாகக் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள்!

    மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  7. அன்புச் சகோதரி,

    தங்களின் பாராட்டிற்கும்...வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...