வெள்ளி, 2 அக்டோபர், 2015

‘என் வாழ்க்கையே என் செய்தி... ’ காந்தி ஜெயந்தி...!

என் வாழ்க்கையே என் செய்தி

                                                                           








    பாரதியின்  கவிதை

வாழ்க நீ! எம்மான்இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க!


                                                                           
அடிமைவாழ் வகன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து,செல்வம், 
குடிமையி னுயர்வு,கல்வி,ஞானமும் கூடி யோங்கிப் 
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! 
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குளே முதன்மை யுற்றாய்!
                   
                                                                                                                       -மகாகவி பாரதியார்.

*********************************************************************************



கண்ணதாசனின்  கவிதை


காந்தியும்  அவர்பின்  னாலே
   கணக்கற்ற சீடர் தாமும்
நீந்திய தியாகத் தீயை
   நினைக்குங்கால் சிலிர்க்கும் மேனி!
ஏந்திய விளக்கில் தாங்கள்
   எண்ணெய்யாய் விழுந்தார் அந்நாள்
சாந்திக்கு ரத்தம் தந்தார்;
   தர்மத்தின் நிழலாய் நின்றார்!




                                                                                         
இன்றைய சமுதா யத்தை
   எண்ணுங்கால்  அவர்கள் செய்த
அன்றைய தியாகம் யாவும்
   அழிந்தன என்றே தோன்றும்!
நன்றிஇல் லாதார் மக்கள்;
   நடைமுறை அவமா னங்கள்!
மன்றிலை எதையோ கேட்டு
   மாலைகள் அணிவிக் கின்றார்!




ஒருவழி சரியாய் நின்ற
   உத்தமத் தலைவா நீயும்
மறுபடி பிறந்தால் இந்த
   மண்ணிலே பிறத்தல் வேண்டாம்!
திருமகள் பிறந்தா ளென்றால்
   தெருத்திண்ணை கோவி லல்ல!
குருமக ராஜா உந்தன் 
   கொள்கையைக் காப்பா யாக!

                                                                                                            -கவியரசர் கண்ணதாசன்.
#################################################################################

மகாத்மா பிறந்த நேரம்


முதலில் பெட்டி படுக்கைகள்
தூக்கி எறியப்பட்டன
அதனைத் தொடர்ந்து                                     
ஆளையே தூக்கி வீசினார்கள்
இரவில்
கடுங்குளிரில்

டர்பனிலிருந்து
பிரிடோரியா செல்லும் ரயிலில் 
முதல் வகுப்பில் அமர்ந்திருந்தவர்
இந்திய இளம் பாரிஸ்டர்

மாரிட்ஸ் பர்க்கில்
ரயில் நின்றபோது
வெள்ளையும் சொள்ளையுமாய்
ஏறிய மனிதன்
ஏறஇறங்கப் பார்த்தான்
இவரை
                ’ஏய்... இறங்கிப் போ
                  இது முதல வகுப்பு’

பாரிஸ்டர் காந்தி
பணிவுடன் சொன்னார்
                ‘என்னிடமும் இருகிகிறது 
                  முதல் வகுப்பு பயணச்சீட்டு’

                 ‘இறங்கவில்லையானால்
                  காவலரை  அழைப்பேன்’

                  ‘இதுவரை முதல் வகுப்பில்
                   பயணித்திருக்கிறேன்
                   இனியும் அப்படியே செய்வேன்’

காவலர் வந்தார்

                   ‘இறங்கிப் போ
                    கறுப்பருடன் இவர்
                     பயணம் செய்யமாட்டார்‘

                     ‘எங்கே போவது?

                     ‘சாமான்கள் வைத்திருக்கும்
                      பெட்டிக்குப் போ...’

மறுத்த காந்தியை                                                                            
இழுத்து வெளியே 
தள்ளினார் காவலர்

போட்ட பெட்டி படுக்கைகள்
போட்டபடி கிடக்க
விடியுமட்டும் குளிரில் நடுங்கி                              
விறைத்துக் கிடந்தார் காந்தி

என்ன கேவலம்!
பணம் கொடுத்து வாங்கிய 
பயணச்சீட்டு  செல்லாதாம்
கறுப்பர் வெள்ளையருக்கு
நிகரில்லையாம்
இந்த நாட்டுச் சட்டமாம்...                                                        
                                                                                                            கவிஞர் சிற்பி 
                                                                                                                       
அவமானத்துக்கு அஞ்சி
தாய் நாட்டுக்கே  திரும்பிவிடுவதா!                                    
இல்லை இந்த                                                                                            
மனித வெறுப்பு நோயை                                                               
எதிர்ததுப் போராடுவதா?

அலைபாய்ந்த சிந்தனையில்
பாரிஸ்டர் காந்தி
                    ’ஆனது ஆகட்டும்’ என்று துணிந்தார்

நிறவெறிக்கு எதிராய்
அந்த இரவில்
நிமிர்ந்தது அவர் சிரம்

இங்கே 
இந்த இரவில் 
குலை நடுங்கும் குளிரில்
தயங்கித் தயங்கி
ஒரு மாகாத்மா பிறந்தார்.
                                                                               நன்றி  -கவிஞர் சிற்பி. 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 (இன்று அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 147-ஆவது பிறந்த நாள்)

_________________________________________________________________________________
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.


14 கருத்துகள்:

  1. காந்திஜியைக் குறித்த விடயங்கள் தந்த மணவையாருக்கு நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      காந்தி ஜி பற்றி கவிதைகளைப் பாடிய கவிஞர்களுக்கு நெஞ்சார்ந் நன்றியுடன், கில்லர்ஜியின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமையான பதிவு...கண்ணதாசனின் கவிதை தவிர மற்ற இரண்டும் அறிவோம்...சிற்பி அவர்களின் கவிதையை இங்கு மீண்டும் வாசிக்கக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காந்தியைப் பற்றி அன்றும் இன்றும், கவிதை வடிவில் அருமை. நன்னாளில் ஒரு நல்ல, பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      வணக்கம். தங்களின் அன்பான வரவேற்பிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான படைப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...