ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஒரு பிரமுகரின் மனைவிக்கு அஞ்சலி
முதலாம் ஆண்டு அஞ்சலி


---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------

அண்ணனைக் காணாது ஆண்டொன்று போனதோ?

அண்ணனின் உள்ளமோ அன்றாடம் - அண்ணியை

எண்ணியே வாடியே ஏங்கித் தவிக்கிறதே!

உண்மையில் அன்பின் உயிர்.-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------

அண்ணன்   நினைவில் என்றும் வாழும் அண்ணி...

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன்னை கரம் பிடித்தேன்                                                                     
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொண்ணை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆல‌ம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ 
என்னை பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் . . .


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

   முதலில் வந்து ஆழ்ந்த அஞ்சலி செலுத்தியதற்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆண்டொன்று கடந்து விட்டது. அன்பால் வாழுகிறார் அனைவரின் உள்ளத்திலும். அவருக்கு எனது அஞ்சலி.

   நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

   தங்களின் அஞ்சலிககுமிக்க நன்றி.

   நீக்கு
 2. நெகிழ்வு.

  வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

  இருப்பதன் அருமை இன்மைகளி்ல் தெரியும் என்பது எவ்வளவு உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   உண்மைதான், நிழலின் அருமை வெயிலில் தெரிகிறது.

   நன்றி.

   நீக்கு
 3. அன்பின் ஜி தங்களின் நண்பருக்கு எமது ஆறுதலையும் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 4. உங்களது கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். சகோதரியின் ஆன்மா சாந்தி பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 5. பிரிவு என்பதானது வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கம் கொடுமையானதே. உணர்ந்தவர்களுக்கே அதன் அருமை புரியும். மனது நெகிழ்ந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 6. திருச்சி சிவா
  இளைஞர்களின் நம்பிக்கையாக பார்க்கப் பட்டவர்..
  எங்கள் ஊர் எம்.பியாக இருந்தவர்.
  உங்கள் இல்லம் வந்தபொழுது இவருக்கும் உங்களுக்கும் இருக்கும் நெருக்கம் அறிந்தேன்.
  இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 7. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பிரிவுத் துயர் பொல்லாதது. மிகவும் வேதனையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள சகோதரி,

   நேற்றைக்கு அண்ணன் திருச்சி சிவா அவர்களைச் சந்தித்தேன். மிகமிக... சொல்லொண்ணா வேதனையில் அண்ணியின் நினைவிலேயே வாடுகிறார். மனதுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

   நீக்கு
 8. ஆழ்ந்த இரங்கல்கள்;காலம் துயர் ஆற்றும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள அய்யா,

   நிச்சயம் காலம் துயர் ஆற்றும் . மிக்க நன்றி..

   நீக்கு
 9. ஆண்டுகள் பல போனாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ஜீ,

   ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மிகமிக உண்மையானவை.

   நீக்கு
 10. அன்புள்ள அய்யா,

  ஆழ்ந்த இரங்கலில் அண்ணனின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...