ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-5




விதி விலக்கு




            விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்...மிகாமலும்...உறழ்ந்தும்... அமையும் இடங்கள் பார்ப்போமா?



                                           வீதி விளக்கு பாத்திருக்கின்றோம்... விதி விலக்கெல்லாம் சொன்னாத்தானே தெரியும் என்பதுநீங்கள் சொல்வது கேட்கிறது.

                                                                                                                                                                                                                                 சிறப்பு விதி   
                                    
எழுவாய்த் தொடர்:  

எழுவாயாக நிற்கும் பெயர், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது.  ( எ.டு)  பாரதிதாசன் பாடினார்.



எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது என்பது விதி.  ஆனால்
எழுவாய்த் தொடரானாலும் நிலைமாழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழிமுன் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

     தீ சிறியது  =   தீச் சிறியது
     நா +குழறியது = நாக் குழறியது
    
 (குறில் நெடிலுக்குப் பின் மிகும்)
      இரா  +  பகல் இராப் பகல்        

      நிலா +   காண் நிலாக் காண்

                   
      ஆமா(காட்டுப் பசு)  +   துரத்தினான்=  
ஆமாத் துரத்தினான்         
                                         (இரு நெடில்களின் பின் மிகும்)


      திணை சிறியது = திணைச் சிறியது ; திணை சிறியது.
          (குறில் இணைச் சொல் வல்லினம் மிகுந்தும் – மிகாமலும் வரும்)


      சுடு  + சிறிது = சுடுச் சிறிது
      விள + தீது    விளத் தீது (சுடு, விள- சொற்களுக்குப் பின் மிகும்)  
 


              ஓரெழுத்து ஒருமொழியாகிய  நிலை மொழி ஈற்றில் பூ, ஈ, தூ, கோ, ஆ – என்ற சொல்லுடன் புணரின், இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும் வல்லினம் மிகும். 
               (வேற்றுமைத் தொகைகளில் வலி மிகாது எனும் விதி இங்குப் பொருந்தாது)

     பூச் சிதைத்தான்.
     ‘நெஞ்சோடுதான் பூப்பூத்தது’(வினைச்சொல் வருமொழியாய்...மிகும்)
     ‘பூவே பூச்சூடவா’                                        

     பூப்பறிக்கக் கோடரி எதற்கு?

     ஈப் பிடித்தான், தூத் துறந்தான் (தூ-ஊன் உணவு)
     கோப் பழித்தான் (கோ- அரசன்)
     ஆத் துரத்தினான் (ஆ-பசு)

        ‘பூ நிலைமொழியாய் நின்று, ஒரு பெயர்ச்சொல் வருமொழியாய் வருமிடத்து வல்லெழுத்து மட்டுமே மிகும் இடங்களும் உளஇன மெல்லெழுத்து மட்டுமே தோன்றும் இடங்களும் உள; உறழ்ந்து தோன்றும் இடங்களும் உள.

      பூ(நிலை மொழி)  +  கோலம் (வருமொழி) [பெயர்ச்சொல்]
                                   பூக்கோலம்(வல்லெழுத்து மிகுதல்)       
     பூ  + பொழில் = பூம்பொழில் 
(இன மெல்லெழுத்து வருதல்)

     பூ  பல்லக்கு = பூப் பல்லக்கு
[உறழ்ந்து] (வலி மிகுந்து வந்தது)
                     பூம் பல்லக்கு 
(இன மெல்லெழுத்து மிகுந்த வந்தது)

       ‘பூந்தோட்டக் காவல்காரா!   பூப்பறிக்க இத்தனை நாளா

      ‘பாட்டு வரும்; உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்;
      அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

      ‘வீர மகன் போராட வெற்றி மகன் பூச்சூட

             -திரைப்படப் பாடல்களில் பூப்பெயரை அடுத்து ‘வினை வரும்போது (மலர்-பொருளையும்) வல்லெழுத்தும்;

‘பெயர் வரும்போது(அழகுபோன்ற பண்புப் பொருள்களையும்)
 இன மெல்லெழுத்தும் வரும்.

                  (-நன்றி. தவறின்றித் தமிழ் எழுத...மருதூர் அரங்கராசன்)

               வல்லொற்றுகள் ‘க், ச், ட், த், ப், ற்’ ஏதேனும் ஒன்று சொல்லில் இடம்பெறும் போது, அதனை அடுத்து இன்னோர் ஒற்று தமிழில் எந்தச் சொல்லிலும் இடம் பெறாது... இடம் பெறவும் கூடாது.

(எ.டு)  கற்ப்போம் கற்ப்பிப்போம் (தவறு)  
       கற்போம் கற்பிப்போம்   (சரி)


          அதற்க்கு இடமளிக்க வேண்டாம் (தவறு)       
          அதற்கு இடமளிக்க வேண்டாம்(சரி) 

              முயற்ச்சி உடையார் (தவறு)
              முயற்சி உடையார்(சரி)           

           “சிறப்பு விதின்னு ஒரு சில சொற்களைச் சொல்வீர்கள் என்று பார்த்தால் பல சொற்களைச் சொல்றீர்களே?!” 

ஆமாம்... நீங்களே நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி. 
‘பல, சில’ சொற்கள் தம்முன் தாம் வந்து புணருகின்ற போது எவ்வாறு மாற்றங்களைப் பெறும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

பல  +  பல  = பல பல (இயல்பு);

                   பலப்பல (வலி மிகதல்)

                   ற்பல (நிலைமொழி ஈற்று அகரம்
                       கெட்டு, லகரம் றகரமாய்த்                       திரியும்)

     [மூன்றுமே சரியான வழக்கு பயன்படுத்தலாம்]

 ‘சில என்பதும் அவ்வாறே புணரும்.

            சிலசில, சிலச்சில, சிற்சில.

‘சில என்னும் சொல் ‘பல என்பதோடு சேர்ந்தால்
             சில  + பல = சிலபல (இயல்மாய் மட்டுமே புணரும்)   [‘சிலப்பல’ என்றோ   ‘சிற்பல’ என்றோ புணர்வதில்லை]
                   

‘சில, பல  என்னும் சொற்கள் பிற சொற்களோடு  புணரும்போது

 பல கலை, பல சாலை, சில தரவுகள்  (இயல்பாய்ப் புணரும்) அல்லது
 பல் கலை, பல் சாலை, சில் தரவுகள்(ஈற்று அகரம் கெட்டும் புணரும்) 
                                    ஆனால் வலிமிகுதல் கிடையாது.

பிறமொழிச் சொற்களுடன் நம்மொழிச் சேர்ந்தால் எப்படி? 


           பேஷ்...பேஷ்...நன்னாக் கேட்டீங்க...போங்க...
வடமொழி, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் ஒலி பெயர்ப்பாகத் (TRANSLITERATION)  தமிழில் வழங்குதல் உண்டு.  அவ்வகைச் சொற்கள் வருமொழியாக வரும் தொடர்களில் வலி மிகுவதில்லை.



      உத்தம + புத்திரன்=  உத்தம புத்திரன்  


       
          
      பதி    =   பக்தி    பதி பக்தி                                 
     சில பிறமொழிச் சொற்கள், காலங் காலமாகத் தமிழில் வழங்கி வரும் காரணத்தால் தமிழ்ச் சொல் போன்ற அமைப்பையும், ஒலிப்பையும் பெற்று விடுகின்றன.  அவ்வகைச் சொற்கள் வருமொழியாய் வரும்போது தமிழ்ச் சொற்களுக்குரிய விதியையே பெறும் வலி மிகுதலில் தவறில்லை.

    
     அந்தக் கார் உள்நாட்டில் தயாரிக்கப் படுகிறது.
       வெள்ளைச் சட்டைதான் அவனுக்குப் பிடிக்கும்.     
   
      கடன் வாங்கித் தானம் கொடுத்தார். 

      ‘நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை  சொன்னதுக்கு சமம்!’

        எனக்கு ஒரு சந்தேகம்....ரொம்ப நாளா கேட்கனுமுன்னு நெனச்சேன்.  ஆமா... ஓர் சந்தேகமா?... ஒரு சந்தேகமா?”

      “ஓர்... எங்கே போடவேண்டும்... ஒரு எங்கே போட வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்?”     
      
         ஒன்று என்னும் சொல் சில இடங்களில் ஓர் என்னும் வடிவத்தையும், சில இடங்களில் ஒரு என்னும் வடிவத்தையும் பெறும்.

            வருமொழி முதலில் உயிர் எழுத்து இருக்குமானால் நிலைமொழி ஓர் என்னும் வடிவம் பெறும்.            



(எ.டு) ஓர் அறை, ஓர் இலை, ஓர் ஊர், ஓர் ஐயம்.                                                                          
                வருமொழி முதலில் மெய்யெழுத்து இருக்குமானால் நிலைமொழி ஒரு என்னும் வடிவம் பெறும்.
                                                                      
 (எ.டு) ஒரு காடு, ஒரு கடிதம், ஒரு தவறு, ஒரு படகு.

             “அது, அஃது எங்கு வரும் என்ற இதேபோல சந்தேகம்... அதைச் சொல்ல வேண்டாமா?” 

             சரியாகக் கேட்டீர்கள்... அதுவும் ஒரு, ஓர் போலவே அது, அஃது என்பனவும் அமையும்.  அதாவது வருமொழி முதலில் உயிர் எழுத்து இருக்குமானால் நிலைமொழி அஃது என அமைய வேண்டும்.

      (எ.டு)  அஃது அறம், அஃது இல்லை, அஃது ஊக்கம், அஃது ஐயமே.

             வருமொழி முதலில் மெய்யெழுத்து இருக்குமானால் நிலைமொழி அது என அமையும்.

           (எ.டு)    அது கடை, அது வீடு, அது தோட்டம், அது புத்தகம்.  

சந்திப் பிழையின்றி எழுதுவோம்-4

                




-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.

29 கருத்துகள்:

  1. பல பயனுள்ள குறிப்புகள் கொண்ட பதிவு.
    வகுப்பறையைப் போலவே சுவாரசியமாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் அய்யா!

    சரி சரி ...

    தேர்வு எப்பொழுது வைக்கப் போகிறீர்கள்?

    ஆர்வமுடன்,

    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.

      லல்லு அவர்கள் சொன்னதைப் போல நூலைக் கையில் கொடுத்தாயிற்று... சந்திப் பிழையின்றிப் பார்த்து எழுதவேண்டியதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...!

      மிக்க நன்றி.

      நீக்கு
  2. தங்கள் மூலம் தமிழை மீண்டும் கற்று வருகிறேன் அய்யா!
    உபயோகமான தகவல்!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள S.P. அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மிக்க நன்றி ஆசிரிய நண்பரே! மீண்டும் அசை போடுகின்றோம். குறித்தும் கொண்டோம். மரபுப் பிழைகளும் தெரிந்து கொள்கின்றோம். நீச்சல்காரன் எனும் வலைத்தளப் பதிவர் இளைஞர் நாவி என்ற சந்திப் பிழை திருத்தம் செய்யும் மென்பொருள் வெளியிட்டுள்ளார். அவரது தளத்தில் http://dev.neechalkaran.com/p/naavi.html#.VSEtSdyUegw

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தமிழ் வாத்தியார் என்னை மரமண்டை என்றுசொல்லி மண்டையில் கொட்டி சொல்லி கொடுத்தது. தங்களின் சந்திப்பிழையின்றி எழுதுவோம் என்ற பதிவு என் தமிழாசிரியரை நிணைவு கூற வைத்தது அய்யா....த.ம1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      நாமெல்லாம் மறத்தமிழர் என்று நிறுபிப்போம்.
      ‘வாங்கய்யா... வாத்தியாரைய்யா... வரவேற்க வந்தோம் அய்யா’ என்று தமிழ் வாத்தியாரை நினைத்தற்கும் தங்களின் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. 4 பேருக்கு பயன் பெளும் பதிவு மணவையாரே தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
      சொல்ல ஓர் வார்த்தையில்லை..
      நான் ஊமையாய் பிறக்கவில்லை..
      உணர்ச்சியோ மறையவில்லை..
      என் தங்கமே உனது மேனி..
      தாங்கி நான் சுமந்து செல்ல..
      எனக்கொரு பந்தமில்லை
      எவருக்கோ இறைவன் தந்தான்
      அந்த நாலு பேருக்கு நன்றி

      நாலு பேருக்கு நன்றி
      அந்த நாலு பேருக்கு நன்றி
      தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
      தோள் கொடுத்து தூக்கி செல்லும்
      நாலு பேருக்கு நன்றி

      1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசர் கண்ணதாசன் இயற்றி எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த பாடல் நினைவிற்கு வந்தது.

      வாக்கிற்றும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. google translate செய்யும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் உங்கள் பதிவுகளை பார்த்துக் கொள்ளலாம்... நன்றிகள்... அற்புதமான விளக்கங்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அசத்தல் பதிவு... மின்னூலாக வெளிவரட்டும்

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு ! எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள். இனி வரும் எனது பதிவுகளில் குறைந்தபட்ச சந்தி பிழைகளோடு (!) எழுத முயற்சிக்கிறேன்.

    (உங்கள் தளத்தை எனது வலைப்பூவில் இணைத்துள்ளேன்.)

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி




    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தங்களைப் போன்ற சான்றோர்கள் எனது (சாமானியன்...எனக்குப் பொருத்தமாக வலைப்பூவின் தலைப்பு) வலைத்தளம் வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    எனது தளத்தைத் தங்களது வலைப்பூவில் இணைத்துள்ளதை அறிந்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -மிக்க நன்றி.
    த.ம. 8.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா,

      இந்த இயந்திர உலகில், தம்மால் இயன்ற சமூக உதவியை, தன்னலம் போற்றாமல் செய்யும் அனைவருமே சான்றோர்தான் !

      வலைப்பூ நடத்தும் உங்களை போன்ற ஆசிரியர்கள் நினைத்தால் இந்த தமிழ் பாடங்களையெல்லாம் " டியூசனாக " நடத்தி வருமானமும் ஈட்ட முடியும் !

      இலக்கணத்தின் இத்தனையையும் இணையத்தில் இலவசமாக பயிற்றுவிக்கும் உங்களை போன்றவர்களே உண்மையான சான்றோர்.

      நன்றி

      நீக்கு
    2. அன்புள்ள அய்யா,

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அய்யா! இராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்ததாகக் கதை சொல்வார்களே (அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றாலும்கூட) அதுபோல ஒரு சிறிய முயற்சி.

      ‘நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் ஒரு
      காட்சியின் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

      விதவையான அம்பிகா... அவளின் மாமனார் கோபாலகிருஷ்ணன்... சிவக்குமார் அவளுக்கு உதவிகள் செய்து நண்பர்களாகப் பழகிக்கொண்டு இருக்கின்ற பொழுது, அம்பிகாவிற்கு வாழ்வு கொடுக்க எண்ணி விதவையான அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிடுவான். உடனே ஓங்கீ அவனது கன்னத்தில் அறைந்துவிடுவாள்-

      மாமனார் கோபாலகிருஷ்ணன் அப்பொழுது பேசும் வசனம்...

      “ஒன்ன தொட்டுட்டார்ன்னு அடிச்சிட்டா... ஆனா நீ

      அடிக்கும்போது அவர தொட்டுட்டா...”

      -திரு.ஆர்.சுந்தர்ராஜன் எழுதிய வசனங்களில் நான் இரசித்தது.

      சொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும்... சொல்லும் போது நான் கற்கிறேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  11. நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    முதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  14. தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவதோடு ஐயம் வரும்போது அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நான் எழுதுவதில் சந்திப் பிழைகள் இருக்கிறதா என்று சொன்னால் நலமாய் இருக்கும் ,சரியாக எழுதுவதாக நான் நினைத்துக் கொண்டுள்ளேன் ,நினைப்பு பிழைப்பைக் கெடுத்து விடக் கூடாது என்பதால் கேட்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவானே இப்படிக் கேட்டால் எப்படி? எல்லோரின் தலையெழுத்தையும் தாங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்...! அதனால் சந்திப் பிழைமட்டுமல்ல... சந்ததிப் பிழைகூட வராது...! படைப்பவராயிற்றே...! கடைக்கண் பார்வைப் பட்டால் போதும்... ஜீ.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  16. அப்பாடா பல சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்கநன்றி சகோதரரே. உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்.இனி தவற விடமாட்டேன். பயனுள்ள பதிவுக்கு நன்றி! முன்னர் இணைய முடியாதிருந்தது அல்லவா ஆகையால் தான் தவற விட்டேன் போலும் இனி தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள சகோதரி,

    எனது தளத்தில் இணைந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பாராட்டுதலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு