படிக்க ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
“எழுத்தில்தான் எல்லாம் புரட்சி செய்கிறீர்கள்...! நடைமுறையில் அது சாத்தியமில்லை அப்படித்தானே...நான் சொல்வது சரிதானே...!” ரோஸி கேட்டுக் கொண்டே தமிழினியனை நிமிர்ந்து பார்த்தாள்.
“பொதுவாக அப்படிக் கேட்டால் எப்படி? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை... சமுதாயத்தில் எத்தனையோ மாற்றம் நடந்துகிட்டுத்தானே இருக்கு?” -என்று தயங்கியவாறு பதில் சொன்னான்.
“சமுதாயத்தின் மேல பழியை போட்டுட்டு நீங்க ஒதுங்கிக்கிவீங்க... நீங்க சொல்லறத என்னால ஏத்துக்க முடியாது...!”
“நீங்க சொல்றத பார்த்தா...உங்களால் புரட்சி செய்ய முடியுமுன்னு சொல்றீங்க...அப்படித்தானே!” என்று தமிழினியன் கேட்டவுடனே சில்லரைக் காசு கொட்டியது போல கலகலவென சிரித்தாள்.
“சொல்வதை எல்லாம் செய்ய முடியாதுங்கிறீங்க... அப்படி எடுத்துக் கொல்லலாமா?”
“நீங்க சொல்றத என்னால புரிஞ்சிக்க முடியல...நீங்க யாரு...என்ன பண்ணீறீங்க... எதுவுமே எனக்குத் தெரியாது!”
“நான்தான் என் பேரு ரோஸின்னு சொன்னேனே...!”
“பேரு மட்டும்தான் சொன்னீங்க...வேற ஒன்னும் சொல்லலையே...!”
“நான் ஜி.எஸ்.டி. கார் சேல்ஸ் கம்பனியில டைப்பிஸ்ட்டா வேலைபார்க்கிறேன்... கருமண்டபம் பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலே ரோட்டு ஓரதத்தில பொறம்போக்குலதான் எங்க வீடு...ஓட்டு வீடுதான்... போதுமா?”
“ஒங்க பாதர் என்ன பண்றார்...”
இதைக்கேட்டு ரோஸி மீண்டும் விரக்தியுடன் புன்னகைத்துத் தலைகுனிந்து அமைதியானாள்.
“என்ன நான் கேட்டதுக்கு ஒன்னும் பதில் இல்லை...” என்று மீண்டும் கேட்டான்.
“நீங்க கேட்டதுக்கு பதில் இல்லைன்னு அர்த்தம்...”
“அப்படின்னா...”-என்று தமிழினியன் இழுத்தான்.
“அப்படித்தான்...” என்று ரோஸி முடித்தாள்.
“சரி... அப்பாவப்பத்திச் சொல்லாட்டினாலும் உங்க அம்மாவைப் பற்றி... சொல்லலாமா...?”
“என்னோட அப்பா யாரென்று எங்க அம்மாவுக்கு தெரியாது...!”
“என்ன உங்களோட அப்பா யாரென்று உங்க அம்மாவுக்கே தெரியாதா...? நீங்க சொல்றது புதுமையா இருக்கு...புரியும்படியா சொல்லுங்க...”
“ஆமா... என்னோட அம்மாவும் இப்ப உயிரோட இல்ல... என்ன தனிமரமா விட்டிட்டு போயிட்டாங்க...”
“உங்க அம்மா என்ன பண்ணுனாங்கன்னுவாவது சொல்லுங்களே...”
“சொல்றமாதரி இல்லங்க...!”
“சும்மா... சொல்லுங்க... நானும் தெரிஞ்சிக்கிறேன்...”
தயங்கித் தயங்கி நின்ற ரோஸி சொன்னாள், “பிராஸ்டூட்” என்று சொன்னாள்; கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதை சற்றும் எதிர்பாராத தமிழினியன் ஒரு நிமிடம் ஆடிப்போனான்.
“சாரிங்க... ஐ ஆம் சாரி...வெரி சாரி...தெரியாம கேட்டிட்டேன்...”
“பரவாயில்லங்க...கவிதையில் விபச்சாரி பற்றி குறிப்பிட்டதால் உங்களோடு பேசவேண்டும் எனத் தோன்றியது... அதான் பேசினேன்... தப்பா நினைக்காதிங்க... எங்க அம்மாதான் அப்படி இருந்தாலும்... நா அதுமாதரி ஆயிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தாங்க... என்னப் பத்தாவது வரைக்கும் படிக்க வச்சுட்டாங்க...நானும் டைப்பிஸ்ட்டா வேலை பார்க்கிறேன்...”
தமிழினியன் எதுவும் பேசமுடியாமல் அமைதியாகச் சிலையாகி நின்றான்.
“உங்கள சந்தித்ததில் ரொம்ப சந்தோசமுங்க... அப்ப நா வர்றேன்...”
“உங்கள சந்திக்கணுமுன்னா எங்க பார்க்கலாம்...”
“என்னப் பாக்கணுமுன்னா வீட்டுக்கு வாங்க...” என்று சொல்லிய பொழுது சசிரேகா வந்தாள்.
“என்ன தமிழ்...ரொம்ப நேரமாப் பேசிகிட்டு இருக்கீங்க போல இருக்கு... கிளம்புறப்பப் புரபஸர் பேச்சில பிடிச்சிக்கிட்டாரு... ஆமா யாரு... இவுங்கள பார்த்ததே இல்லையே...”என்று சசி கேட்ட உடனே தமிழினியன் போறப்ப சொல்றேன் என்றான்.
“சரி...சரி... நானே என்ன அறிமுகப்படுத்திக்கிறேன்... என் பேரு சசிரேகா...தமிழ் என்னோட லவ்வர்...என்ன சொன்னீயா... சொல்லலையா...நீ சொல்லி இருக்க மாட்டியே...அதான் நானே சொல்லிட்டேன்...என்ன சரிதானே...!”
“சரிங்க... நா புறப்படுறேன்”- வணக்கம் சொல்லி ரோஸி புறப்பட்டாள். தமிழினியனும் சசிரேகாவும் கல்லூரியிலிருந்து புறப்பட்டனர்.
-வ(ள)ரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.