படிக்க ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
“எழுத்தில்தான் எல்லாம் புரட்சி செய்கிறீர்கள்...! நடைமுறையில் அது சாத்தியமில்லை அப்படித்தானே...நான் சொல்வது சரிதானே...!” ரோஸி கேட்டுக் கொண்டே தமிழினியனை நிமிர்ந்து பார்த்தாள்.
“பொதுவாக அப்படிக் கேட்டால் எப்படி? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை... சமுதாயத்தில் எத்தனையோ மாற்றம் நடந்துகிட்டுத்தானே இருக்கு?” -என்று தயங்கியவாறு பதில் சொன்னான்.
“சமுதாயத்தின் மேல பழியை போட்டுட்டு நீங்க ஒதுங்கிக்கிவீங்க... நீங்க சொல்லறத என்னால ஏத்துக்க முடியாது...!”
“நீங்க சொல்றத பார்த்தா...உங்களால் புரட்சி செய்ய முடியுமுன்னு சொல்றீங்க...அப்படித்தானே!” என்று தமிழினியன் கேட்டவுடனே சில்லரைக் காசு கொட்டியது போல கலகலவென சிரித்தாள்.
“சொல்வதை எல்லாம் செய்ய முடியாதுங்கிறீங்க... அப்படி எடுத்துக் கொல்லலாமா?”
“நீங்க சொல்றத என்னால புரிஞ்சிக்க முடியல...நீங்க யாரு...என்ன பண்ணீறீங்க... எதுவுமே எனக்குத் தெரியாது!”
“நான்தான் என் பேரு ரோஸின்னு சொன்னேனே...!”
“பேரு மட்டும்தான் சொன்னீங்க...வேற ஒன்னும் சொல்லலையே...!”
“நான் ஜி.எஸ்.டி. கார் சேல்ஸ் கம்பனியில டைப்பிஸ்ட்டா வேலைபார்க்கிறேன்... கருமண்டபம் பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலே ரோட்டு ஓரதத்தில பொறம்போக்குலதான் எங்க வீடு...ஓட்டு வீடுதான்... போதுமா?”
“ஒங்க பாதர் என்ன பண்றார்...”
இதைக்கேட்டு ரோஸி மீண்டும் விரக்தியுடன் புன்னகைத்துத் தலைகுனிந்து அமைதியானாள்.
“என்ன நான் கேட்டதுக்கு ஒன்னும் பதில் இல்லை...” என்று மீண்டும் கேட்டான்.
“நீங்க கேட்டதுக்கு பதில் இல்லைன்னு அர்த்தம்...”
“அப்படின்னா...”-என்று தமிழினியன் இழுத்தான்.
“அப்படித்தான்...” என்று ரோஸி முடித்தாள்.
“சரி... அப்பாவப்பத்திச் சொல்லாட்டினாலும் உங்க அம்மாவைப் பற்றி... சொல்லலாமா...?”
“என்னோட அப்பா யாரென்று எங்க அம்மாவுக்கு தெரியாது...!”
“என்ன உங்களோட அப்பா யாரென்று உங்க அம்மாவுக்கே தெரியாதா...? நீங்க சொல்றது புதுமையா இருக்கு...புரியும்படியா சொல்லுங்க...”
“ஆமா... என்னோட அம்மாவும் இப்ப உயிரோட இல்ல... என்ன தனிமரமா விட்டிட்டு போயிட்டாங்க...”
“உங்க அம்மா என்ன பண்ணுனாங்கன்னுவாவது சொல்லுங்களே...”
“சொல்றமாதரி இல்லங்க...!”
“சும்மா... சொல்லுங்க... நானும் தெரிஞ்சிக்கிறேன்...”
தயங்கித் தயங்கி நின்ற ரோஸி சொன்னாள், “பிராஸ்டூட்” என்று சொன்னாள்; கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதை சற்றும் எதிர்பாராத தமிழினியன் ஒரு நிமிடம் ஆடிப்போனான்.
“சாரிங்க... ஐ ஆம் சாரி...வெரி சாரி...தெரியாம கேட்டிட்டேன்...”
“பரவாயில்லங்க...கவிதையில் விபச்சாரி பற்றி குறிப்பிட்டதால் உங்களோடு பேசவேண்டும் எனத் தோன்றியது... அதான் பேசினேன்... தப்பா நினைக்காதிங்க... எங்க அம்மாதான் அப்படி இருந்தாலும்... நா அதுமாதரி ஆயிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தாங்க... என்னப் பத்தாவது வரைக்கும் படிக்க வச்சுட்டாங்க...நானும் டைப்பிஸ்ட்டா வேலை பார்க்கிறேன்...”
தமிழினியன் எதுவும் பேசமுடியாமல் அமைதியாகச் சிலையாகி நின்றான்.
“உங்கள சந்தித்ததில் ரொம்ப சந்தோசமுங்க... அப்ப நா வர்றேன்...”
“உங்கள சந்திக்கணுமுன்னா எங்க பார்க்கலாம்...”
“என்னப் பாக்கணுமுன்னா வீட்டுக்கு வாங்க...” என்று சொல்லிய பொழுது சசிரேகா வந்தாள்.
“என்ன தமிழ்...ரொம்ப நேரமாப் பேசிகிட்டு இருக்கீங்க போல இருக்கு... கிளம்புறப்பப் புரபஸர் பேச்சில பிடிச்சிக்கிட்டாரு... ஆமா யாரு... இவுங்கள பார்த்ததே இல்லையே...”என்று சசி கேட்ட உடனே தமிழினியன் போறப்ப சொல்றேன் என்றான்.
“சரி...சரி... நானே என்ன அறிமுகப்படுத்திக்கிறேன்... என் பேரு சசிரேகா...தமிழ் என்னோட லவ்வர்...என்ன சொன்னீயா... சொல்லலையா...நீ சொல்லி இருக்க மாட்டியே...அதான் நானே சொல்லிட்டேன்...என்ன சரிதானே...!”
“சரிங்க... நா புறப்படுறேன்”- வணக்கம் சொல்லி ரோஸி புறப்பட்டாள். தமிழினியனும் சசிரேகாவும் கல்லூரியிலிருந்து புறப்பட்டனர்.
-வ(ள)ரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

கதையில் ஒரு எதிர்பாராத திருப்பம் வந்து விட்டது சசிரேகாவால் தொடர்கிறேன் மணவையாரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
அன்புள்ள ஜி,
நீக்குஎப்படி ஜி? பதிவை வெளியிட்டு தமிழ்மணத்தில் இணைத்துப் பார்த்தவுடன் தளம் வந்தால்... தங்களின் முதல் பின்னூட்டம் கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் வாக்கிற்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.
அம்மாவின் தெளிவு நன்று...
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா...
அன்புள்ள வலைச்சித்தருக்கு,
நீக்குதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் பதிவுகளைப் பதிவிடும்முன்னரே படிக்கின்ற நல்வாய்ப்பு இருப்பதாலோ என்னவோ கடந்தசில பதிவுகளுக்குப் பின்னூட்டமிடாமல் இருந்திருக்கிறேன்.
நீங்களோ தவறாது என் பதிவுகளுக்க வந்து கருத்திட்டுப் போகிறீர்கள்.
முன்போல கணினிக்கு வர இயலாச் சூழலை அறிவீர்கள் என்பதால் பொறுத்திடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கதையின் திருப்பங்களை ஏனையோரைப் போலவே ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
பழுப்பேறிய ஒரு கற்றைக் காகிதத்தில் இந்தக் கதை என்னிடம் சில மாதங்கள் இருந்தும் படிக்கவில்லையே என்னும் ஆதங்கம் மிகுகிறது.
தொடர்கிறேன்.
நன்றி.
அன்புள்ள அய்யா,
நீக்குவணக்கம். எதையோ தேடிய பொழுது இந்தத் தாள்கள் கிடைத்தது. முப்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னால் தனிஅறையில் உட்கார்ந்து கொண்டு இரவினில் யாருக்கும் தெரியாமல் எழுதியதை... எண்ணினால் எனக்கே சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.
தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துகளுக்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இதென்ன தமிழுக்கு வந்த சோதனை :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்கு‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ பாடல் கேட்டிருக்குமே!
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்ந்ததைப் போன்ற உணர்வு இப்பதிவினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். மிகவும் இயற்கையாக அமைந்துள்ளது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
//தமிழினியனும் சசிரேகாவும் கல்லூரியிலிருந்து புறப்பட்டனர்.//
பதிலளிநீக்கு-நானும் புறப்படுறேன்......
அன்புள்ள அய்யா,
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. சென்று வாருங்கள்.
அருமையாக செல்கிறது கதையோட்டம். தொடர்கிறேன் அய்யா!
பதிலளிநீக்குத ம 8
அன்புள்ள அய்யா,
நீக்குதங்கள் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஐயா.. ரோஸியின் தாயாரின் திடமும் தெளிவான
பதிலளிநீக்குசிந்தனையும் மிகச் சிறப்பு!
கதை கொஞ்சம் பாதை மாற்றம் காட்டுவது அடுத்து
என்ன என அறியும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளது.
தொடருகிறேன் ஐயா!
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்கள் கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
தொடர்கிறோம்
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்கள் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
ம்ம்ம் கதை சில யூகங்களைத் தருகின்றது. சசிரேகாவும் தமிழும் லவ்வர்கள் என்று சரி சொல்கிறாள் ஆனால் தமிழ் அதைச் சொல்லவும் இல்லை....அவள் அவனது இருக்கையில் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாகவும் பின்னால் சென்று நின்றதாகவும் இதன் முதல் பகுதியில் சொல்லியிருந்தீர்கள். ஆகையினால் கதையில் ஒரு முக்கோணக் காதல் வருவது போல் தோன்றுகின்றது...ம்ம்ம்கதாசிரியர்தான் சொல்ல வேண்டும்....தமிழ், சசியின் காதல் இருவருக்குள்ளுமா இல்லை ஒருதலைக் காதலோ என்ற ஒரு சின்ன சந்தேகம் இழையோடுகின்றது...அவர்களது காதல் உறுதிப்படுமாறு காட்சிகள் வராததால்..
பதிலளிநீக்குகாத்திருக்கின்றோம் நண்பரே!
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் யூகம் சரியானதா என்பதைப் பார்த்துவிடுவோமே! சொல்லத்தான் நினைக்கிறேன்!
காதலில் காத்திருப்பதும் சுகவேதனையா...?
தங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் காத்திருப்பதற்கும் மிக்க நன்றி.
தமிழினியன் சசிரேகா பெயர் பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது.ஹஹ
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
நீக்குபெயர் பொருத்தம் சரி என்று சாதகமாக ஜோஸ்யம் சொல்லி விட்டீர்கள்...! ‘என்ன பொருத்தம்? ஆகா இந்த பொருத்தம்... காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே!‘
-என்ற பாடல் பாடத்தோன்றுமே!
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
கதையோட்டம்
பதிலளிநீக்குஅருமை அருமை
தொடர்கிறேன்
நன்றி ஐயா
தம +1
அன்புள்ள கரந்தையாருக்கு,
நீக்குதங்கள் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
சுவாரஸ்யம் கூடுகின்றது! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்கள் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
கதையின் கண்ணோட்டம் மிக அற்புதமாக உள்ளது... தொடர்ருங்கள் ஐயா.. காத்திருக்கேன். த.ம 11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள அய்யா,
நீக்குவணக்கம். தங்கள் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதாங்கள் எதிர்பார்ப்புடன் தொடர்வதற்கு மிக்க நன்றி.
ஐயா
பதிலளிநீக்குகதையின் கண்ணோட்டம் மிக அற்புதமாக உள்ளது
latha
அன்புடையீர்,
நீக்குதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.
கதையின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
பதிலளிநீக்குJoshva
அன்புள்ள அய்யா,
நீக்குதாங்கள் ஆவலுடன் எதிர் நோக்குவதற்கு மிக்க நன்றி.
கதைதான்சகோ ஆனாலும் இப்படிப்பட்டகுழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்னபாவம்
பதிலளிநீக்குசெய்தனர் அருமை சகோ தொடர்கிறேன்.என்னிடமும் கதைகள் உள்ளன எழுதுவதற்கு நேரம்
ஒதுக்க வேண்டும்.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களிடம் இருக்கின்ற கதைகளை நேரம் கிடைக்கும் போது வெளியிட ஆவன செய்யவும். தங்கள் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோ !
பதிலளிநீக்குகதை சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்கிறேன்.... முதற்பகுதிகளை வாசிக்காததால் தொடர சிரமமாக உள்ளது அல்லவா அது தான் தாமதம் மன்னிக்கணும். நன்றி..!
அன்புள்ள சகோதரி,
நீக்குவணக்கம். தங்களின் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது வாசித்தால் போதும்.