‘முடிவுகள் அறிமுகம்’ - நாடகம்!
-ஆவது பதிவு
எங்கள் திருச்சி, ஆர்.சி.மேனிலைப்பள்ளி பொன்விழாவிற்காக நான் எழுதி இயக்கிய ‘முடிவுகள் அறிமுகம்’ மேடை நாடகம்
9-1-1996 ஆம் ஆண்டு நடைபெற்றது.
9-1-1996 ஆம் ஆண்டு நடைபெற்றது.
நீங்கள் படத்தில் பார்க்கும் அனைவரும் கதாபாத்திரங்களே...! எங்கள் பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள். பெண்கள் மூன்று பேர் மட்டும் தொழில்முறை நடிகைகள். பெண் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எங்கள் பள்ளி ஆசிரியரின் மகள்.
நாடகத்திற்குத் தலைமை தாங்க திருமிகு.V.G.P. பன்னீர்தாஸ், சென்னையிலிருந்து வருவதாக இசைவு அளித்து இருந்தார். அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் தாளாளர் அருட்பணி. S. தாமஸ் அடிகளார் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வர சந்தித்தேன். சிறப்பு அழைப்பாளர் அவசர அலுவல் காரணமாகத் தீடிரென வெளிநாடு சென்றதால், வணிக சங்கத் தலைவர் A.G.L. ஞானராஜ் தலைமை தாங்கினார். திடீரென நாடகம் ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பிக்க வேண்டுமென தாளாளர் பணித்தார். உடனடியாக ஒப்பனைக்கான வேலைகளில் ஈடுபட்டோம். ஆறு மணிக்கெல்லாம் நாடகம் ஆரம்பிக்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால் நாடகத்தில் வீடியோஸ்கோப்பில் டைட்டில் போடவேண்டும் என்பதற்காக நடிகர்கள் அனைவரையும் ஸ்டில் எடுத்துப் பெயர் சேர்ப்பதற்காக அன்றைய மதியம் இணை இயக்குநர் திரு.ஜெராடு ஜெய ஆனந்த் திருச்சி கலைக்காவிரிக்குச் சென்றவர் அந்தப் பணியை முடித்துத் திரும்பவில்லை. அவரைத் தொடர்ப்பு கொண்டால் மின்சாரத் தடையால் பணிமுடிப்பதில் கால தாமதம்; வந்து விடுவேன் என்றார். இரண்டாவது காட்சியில் டைட்டில் போட வேண்டும். பள்ளியில் இதற்கு மேல் தாமதிக்க வழியில்லாத்தால் டைட்டில் வேண்டாம் என்று முடிவு செய்து நாடகத்தை ஆரம்பித்தோம்.
டைட்டிலை அடுத்து சிறுமியின் பரதநாட்டியக் காட்சி. நாட்டியதற்காகப் பயிற்சி கொடுத்த ஆசிரியர் திரு.சுந்தர் (சமீபத்தில் காலமானார்) அவர்கள் என்னிடத்தில் வந்து நடனக் கேசட் பெரிய மிளகுபாறை வீட்டில் வைத்து வந்துவிட்டேன் என்றார். எங்கள் பள்ளியிலிருந்து சென்று வர குறைந்தது பத்து நிமிடமாவது ஆகும். அது வரைக்கும் முதல் காட்சியை நீட்டிக்க முடியாது; இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் உடனே கேசட்டை எடுத்து வாருங்கள் என்று சொல்ல அவர் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு பறந்தார்.
பிரமாண்டமாக இருக்க வேண்டுமென நினைத்து இவ்வளவு ஏற்பாடுகள் முடிந்தபின் டைட்டிலும் இல்லை... நடனமும் இல்லையே என்ற ஆதங்கத்துடன் மனது தத்தளித்தாலும் வேறு என்ன செய்ய முடியும்? என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது....... நண்பர் திரு.ஜெராடு டைட்டில் கேசட்டுடன் இருசக்கர வாகனத்தில் வந்து வண்டியை நிறுத்தாமல்கூட ஓடிவந்து சி.டி. கேசட்டை டெக்கில் போட முதல்காட்சி முடிவடைந்தது. அடுத்த காட்சி டைட்டில்... போடச் சரியாக இருந்தது.. டைட்டில் பத்து நிமிடம் ஓடியதால் நடனக்கேசட்டும் வந்து சேர்ந்தது. திட்டமிட்டபடி நடனக்காட்சியும் இடம்பெற்றது. அப்பொழுதான் எனக்கு நிம்மதியும் வந்தது.
நாடகம் நடந்து 18 ஆண்டுகள் கடந்து விட்டன. நாடகத்தில் நடித்த ஆசிரியர்களில் 8 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர்.
ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அன்றைய செய்திகளில் பிரபலமாக இருந்த பிரேமானந்தா சாமியாரை வைத்தும் எழுதப்பட்டது.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
விரைவில் இந்த நாடகம்
காணொளிக் காட்சியாக வெளியிடப்படும்.
என் கைத்தலம்பற்றி
வலைத்தளம் பற்ற வைத்த ‘ஊமைக்கனவுகள்’ திருமிகு.ஜோசப்
விஜு அவர்களுக்கும்
பார்வையாளர்களுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும்
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்றென்றும்
நன்றியுடன்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
(புகைப்படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மேல் ’கிளிக்’ செய்க)
தங்களின் வெற்றிகரமான 100வது பதிவுக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் ஊக்கமிகுந்த பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
வணக்கம் மணவையாரே தங்களின் 100 வது பதிவு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி விரைவில் 1000 த்தை தொட... இல்லை தாண்டி ஓட.. எமது மனப்பூர்வமான வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎல்லாம் சரி கடைசி நன்றி என்ற புகைப்படத்தை தவிற மற்றவை தெரியவில்லையே மணவையாரே...
தமிழ் மணம் 1
அன்புள்ள ஜி,
நீக்குவணக்கம். தங்களின் அன்பான ஆதரவுடன் பாராட்டுதலும் வாழ்த்துகளும் இருக்கையில் ஒரு கை ஓசைகூடக் கேட்காமலா போய்விடும். கடைசி நன்றி என்ற புகைப்படத்தைத் தவிர மற்றவை தெரியும்படி செய்தாச்சு ஜி. தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தருக்கு,
நீக்குஎனக்கு இந்த சித்து விளையாட்டு அவ்வளவாகத் தெரியாத போதும்... உதவி என்று வேண்டினால் நேரம் காலம் பார்க்காமல் உதவச் சித்தமாயிருக்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
தவறைச் சரி செய்ய நீண்ட நேரம் ஆகும் என்றாலும் அதைப் பெரிதாக நினைக்காமல் உடனடியாக உதவி செய்து கொடுத்த நல்ல உள்ளத்திற்கும்... உள்ளத்திருந்த வந்த வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றிகள் .
முதலில், தாங்கள் நூறாவது பதிவினை எட்டியுள்ளமைக்கு
பதிலளிநீக்குஉளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!
உங்கள் பதிவுகள் இன்னும் பல நூறுகள் கண்டு ஆயிரமாகப் பெருக வேண்டுகிறேன்!
முடிவுகள் அறிமுகம் உங்களின் அளப்பரிய ஆற்றலைத் திறமையைக் காண்பிக்கின்றது.
அருமை!
வாழ்த்துக்கள் ஐயா!
த ம+1
அன்புள்ள சகோதரி,
நீக்குஎங்கோ பிறந்து... எங்கோ இருக்கும் தங்களை வலைத்தளம் மூலம் சகோதரியாகப் பெற்றதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.
தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
புகைப்படங்கள் இப்பொழுது கண்டேன் மணவையாரே போலீஸின் மீசை ஸூப்பர்
பதிலளிநீக்குஅன்புள்ள ஜி,
நீக்குநாடகத்திற்காக வளர்த்த உண்மையான மீசையுடன் S.P.-யாக நடித்தார். நமது திண்டுக்கல் வலைச்சித்தர்தான் புகைப்படம் தெரிய வழி அமைத்துக் காட்டியது. தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் ....வீ டியோவில் இருந்தால் நன்றாய் இருந்து இருக்கும் :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. வீடியோ இருக்கிறது... விரைவில் தங்கள் ஆசை நிறைவேறும்...!
வணக்கம் ஐயா.
பதிலளிநீக்கு1996 என்பது நான் படித்துக் கொண்டிருந்தகாலம்.
நம் பள்ளியில் படித்திருந்தால் உங்களிடம் படித்திருப்பேன்.
இந்நாடகத்தில் பங்கேற்ற பெரும்பாலான ஆசிரியர்களோடு உங்களையும் அறிவேன் என்பதால் காலம் மாற்றிய முகங்களையும், கையசைத்துப் போன கரங்களையும் முன்கொணர்ந்து போயிருக்கிறது புகைப்படங்களின் பழைய வாசனை.
அதற்காய் நன்றியுண்டு .
இதனிடையே என்னைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம்.
அன்புள்ள அய்யா,
நீக்குவலைத்தளம் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு... வலைத்தளம் தொடங்கி... நல்ல ஆலோசனைகளைக் கூறியும்... நானும் வளரவேண்டும் என்று எண்ணி தாங்கள் என்னை ஊக்கப்படுத்தியும் உதவிகள் பல செய்தும் வருவதற்கும் நெஞ்சார்ந்த நன்றி.
‘இதனிடையே குறிப்பிட்டு இருக்க வேண்டாம்’ என்று தாங்கள் சொல்வது சரிதான்... முதலிலேயே குறிப்பிட்டு இருக்க வேண்டும்.... பொருத்தருள்க!
’அங்காடித் தெரு’ திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நாயகன் நாயகி இருவரும் ஊஞ்சலாடும் பொழுது ஒருவர் காலை ஒருவர் மிதித்து மிதித்து விளையாடுவதை வசந்தபாலன் காண்பிப்பார்... அடுத்த காட்சியில் பெரிய விபத்தில் நாயகிக்கு இரண்டு காலும் இழந்து விடுவாள். அதுபோல நாம் ஒருவருக்கொருவர் தட்டச்சு செய்து யார் வேகமாக தட்டச்சு செய்கிறோம்... கைகளில் விளையாடி இருக்கிறோம். எனக்கு ஏற்பட்ட விபத்தில் விரல் பாதிக்கப்பட்டதையும் அதையும் நினைத்துக் கொள்வதுண்டு.
1996-இல் அந்த நாடகம் போடும் பொழுது எனக்கு கிடைத்த அரசாங்க ஊதியத் ரூபாய் 900/-
அதையும் நினைத்துக் கொள்வதுண்டு...! மறக்க முடியுமா...?
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....................................
தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
அய்யா வணக்கம்.
பதிலளிநீக்குதங்கள் நாடக ஆக்கம் அருமை,
மிகச்சிறப்பாக இருந்து இருக்கும் என என்னால் உணர முடிகிறது.ந்ல்ல நாடக ஆசிரியரை எமக்கு அறிமுகப்படுத்திய ஊமைக்கனவுகள் ஐயா விற்கும் நன்றி,
வாழ்த்துக்கள் ஐயா, தொடருங்கள் இன்னும் பல பதிவுகள். நன்றி.
அன்புள்ள சகோதரி,
நீக்குவணக்கம். தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தங்கள் நூறாவது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் மேலும் பல்கிப் பெருக என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குபுகைப் படங்களைப் பார்க்கும்போதே புரிகிறது. திட்டமிட்டு திறம்பட அமைந்திருக்கிறது நாடகம் என்பது காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக இருக்கிறது. காணொளி காண ஆவலுடன் உள்ளேன். நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ....!
பகிர்வுக்கு நன்றி! தங்களை அறிமுகப் படுத்திய viju அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகடட்டும்.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அண்ணா, பிடியுங்கள் பூங்கொத்தை! நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள், ஆயிரங்கள் தாண்டி எழுதுங்கள்.
பதிலளிநீக்குநாடகம் அருமையாக இருந்திருக்கும் என்று தெரிகிறது , பகிர்விற்கு நன்றி அண்ணா. காணொளி காணக் காத்திருக்கிறேன்.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நாடகத்தின் சி.டி. இருக்கிறது. அதை Youtube-ல் ஏற்றுவதற்ககான தொழிநுட்பம் தெரியவில்லை. விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்.
நன்றி.
வாழ்த்துக்கள். தொடர்ந்து படைப்புகள் பெருகட்டும்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.