வெள்ளி, 2 அக்டோபர், 2015

புதுக்கவிதை


மகாத்மா நீ மீண்டும் பிறக்காதிரு...!



அண்ணலே... அன்று  நீ-
நாட்டின் பண்பாட்டைக் காக்க
ராட்டை சுழற்றினாய்...
நாடும்  உன் பின் சுழன்றது!



வியாபாரம் செய்ய வந்தவன்
அடிமைப்படுத்தியதால் 
அகிம்சை அறம்கொண்டு              
அந்நியன் வெளியேற 
அறப்போர் செய்தாய் ...
சுதந்திரம் கிடைத்தது!

                                                                                                    

இன்று ராட்டை சுழற்றுவதை விட்டு
நாட்டைச்  சுருட்டும் தந்திரிகள்
மந்திரிகள் ஆனார்கள்...!
இவர்களின் சுயநல இம்சை-
முன்னேறியயுலகின் மூளைச்சலவையால்
மூலையில் முடங்கிக்கிடக்கிறது இந்தியா...!
பண்பாடு நாகரிகம்
கடமை கலாச்சாரமெல்லாம்
பணத்திற்குப் பின்னால்தான்!



மகாத்மா... நீ மீண்டும் பிறக்காதிரு!
உன் கடிதங்களைப் போலவே
உன்னையும் ஏலம் விட்டு
நல்ல விலைக்கு 
விற்கக் காத்திருக்கிறது ஒரு கூட்டம்!









உறுதிமொழி:

இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதிகூறுகிறேன்.

மேற்கண்ட படைப்பு வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்றுமுடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.



-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

                                                                                                                                                                                                                                                              

8 கருத்துகள்:

  1. மணவையாரே அருமையான சவுக்கடி வரிகளுடன் நல்லதொரு விண்ணப்பம் காந்திஜிக்கு...
    இன்று காந்தி ஜெயந்தி பொருத்தமான வரிகள் போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 147-ஆவது பிறந்த நாளான இன்று அன்னாரின் நினைவைப் போற்றுவோம். முதலில் வந்து முதன்மையான கருத்திட்டதற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  2. வணக்கம். தங்கள் தளத்தில் நமது அழைப்பிதழைப் பகிர்ந்து நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க அன்புடன் அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      எனது தளத்தில் நமது அழைப்பிதழைப் பகிர்ந்து அழைப்பு விடுத்துள்ளேன்.

      நன்றி.

      நீக்கு
  3. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    தளத்தில் இணைத்து தகவலை உடனே தந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்! அருமையான வரிகள்! மகாத்மா ஜெயந்தி வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் பாராட்டிற்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு