புதிய உடன்படிக்கை
காட்சி – 8
இடம்: மாளிகை
பாத்திரங்கள்: ஜாக்லின், ஆரோக்கியசாமி, ஞானசௌந்தர்.
(ஹாலிங்
பெல் அடிக்கிறது... கதவை ஆரோக்கியசாமி திறக்கிறார்)
ஆரோக்கியசாமி: அடே...டே... வாங்க சம்மந்தி... வாங்க... வாங்க... அம்மா
ஜாக்லின்...
(ஞான சௌந்தர் உள்ளே நுழைகிறார்; ஜாக்லின் உள்ளே இருந்து குரல்)
ஜாக்லின்: என்னங்க மாமா...?
ஆரோக்கியசாமி: இங்கே வாம்மா... யாரு வந்திருக்கான்னு பாரு... ஆமா...
நம்ம ஊரு பக்கம் மழைமாரி ஏதும் பெஞ்சிச்சா...
ஞானசௌந்தர்: எங்கே
பெய்யுது... பாழாப்போவுது... எழவு மானம் கண்ணு திறந்திச்சுன்னா... காட்டையாவது
உழுது போடலாம்... அதுக்கும் வழியக் காணோம்... ஆமா மாப்பிள்ளைய எங்க காணோம்...
ஆரோக்கியசாமி: இப்பத்தான் வெளியே கிளம்பிப் போனான்... ஏதோ டிராக்டர்
வாங்கிறதுக்கு அலையறான் போல இருக்கு...
ஞானசௌந்தர்: அப்படியா... வாங்கட்டும்... வாங்கட்டும்...
ஆரோக்கியசாமி: என்னம்மா... ஜாக்லின்... உள்ள என்ன பண்றாய்...?
ஜாக்லின்: இதோ வந்திட்டேன் மாமா... (முந்தானையால் நெற்றியைத் துடைத்தபடி வருகிறாள். அப்பாவைக் கண்டு மகிழ்ச்சியுடன்) அப்பா... வாங்கப்பா... இப்பத்தான் வநதீங்களா...? உள்ள உலை கொதிச்சிட்டு இருந்திச்சு... அதான்...
கொஞ்சம் நேரமாயிடுச்சு... இப்பதானே வந்தீங்க...
ஞானசௌந்தர்: ஆமாம்மா... இப்பத்தான் வாரேன்... ஒன்ன பாக்கனும் போல
இருந்திச்சு... அதான் ஓடியாந்திட்டேன்...
ஜாக்லின்: எனக்கும் ஒங்களப் பாக்கனுமுன்னு ஆசையா இருந்துச்சுப்பா...
நீங்களே வந்திட்டீங்க...! கொஞ்சம் இருங்கப்பா காப்பி கொண்டு வர்றேன்... (உள்ளே
போகிறாள்)
ஆரோக்கியசாமி: இன்னும் கொஞ்ச நேரத்தில சமையல் ஆயிடும் சாப்புட்டுட்டு
இருங்க சம்மந்தி... நா தோட்டத்துப் பக்கம் போயிட்டு வந்திடுறேன்...
ஞானசௌந்தர்: நீங்க பாக்க வேண்டிய வேலைய பாருங்க சம்மந்தி...
ஆரோக்கியசாமி: மகளோட பேசிட்டு இருங்க... போயிட்டு வந்திடுறேன்... (வெளியே செல்கிறார்.
சிறிது நேரத்தில் காபியுடன் வருகிறாள்)
ஜாக்லின்: இந்தாங்கப்பா... காபி...
ஞானசௌந்தர்: ஒனக்கும்மா...?
ஞானசௌந்தர்: எப்படீம்மா இருக்கா...? (காபி குடிக்கிறார்) என்னம்மா ஒரே
கசப்பா இருக்கு...
ஜாக்லின்: எதுப்பா...?
ஞானசௌந்தர்: காபிதாம்மா... சரிம்மா... நீ எப்படி இருக்கா...?
ஜாக்லின்: நானா...?
இருக்கேம்ப்பா...
ஞானசௌந்தர்: சந்தோசமா
இருக்கியாம்மா...?
ஜாக்லின்: சந்தோசமா...? சந்... தோசமோ... என்னவோ தெரியலைப்பா...!
ஞானசௌந்தர்: (அதிர்ச்சியுடன்) அம்மா... நீ என்னம்மா சொல்றாய்...?
ஜாக்லின்: ஏம்ப்பா... என்னை இங்கு கட்டிக் கொடுத்தீங்க...?
ஞானசௌந்தர்: ஏம்மா... என்னம்மா... மாப்பிளைக்கு என்னம்மா குறை...?
ஜாக்லின்: என்னன்னு நா சொல்றதுப்பா...
ஞானசௌந்தர்: சும்மா சொல்லும்மா...
ஜாக்லின்: வேற
யார்ட்டப்பா நா சொல்லுவேன்... எனக்கு யாரு இருக்கா...? அவரு குடிகாரருப்பா... குடிகாரரு...
அவருக்குப் போயி...
ஞானசௌந்தர்: என்னம்மா உண்மையாவா...?
ஜாக்லின்: ஆமாப்பா...
ஞானசௌந்தர்: ஏதோ ஒரு இதுல... குடிச்சிருப்பாரு... பொண்டாட்டி
நெனச்சா புருஷன திருத்த முடியாமலா போயிடும்... இதுக்குப் போயி (ஜாக்லின் அழுகிறாள்) அட... அழாதேம்மா... (கண்ணைத் துடைத்து விடுகிறார்) மாப்பிளை
வரட்டும்... நா சொல்றேன்...
ஜாக்லின்: அய்யய்யோ... வேண்டாம்ப்பா... வேண்டாம்... நானே அவரைத்
திருத்த முயற்சி பண்றேன்... நீங்க ஒன்னும் கேக்க வேணாம்...
ஞானசௌந்தர்: இல்லம்மா... நா.... நாசுக்கா சொல்றேம்மா...
ஜாக்லின்: வேண்டாம்ப்பா... நா பாத்துக்கிறேன்... சரிப்பா...
வாங்க சாப்புடுங்க...
ஞானசௌந்தர்: அதுல ஒன்னும் கசப்பு இருக்காதே...
ஜாக்லின்: நா என்ன வேணுமின்னா... காபி டிகாஷன் கொஞ்சம் கூடப்
போயிடுச்சு... இதுக்குப் போயி...
ஞானசௌந்தர்: அது மாதிரிதாம்மா... மாப்பிளை வேணுமுன்னா செய்யப் போறாரு...
ஏதோ... அவர அறியாம... நாலு பேரோட சேந்துக்கிட்டு... இதுக்குப் போயி... அவரை நல்ல
வழிக்குக் கொண்டு வர்றது ஒ கையிலதான் இருக்கு... அது ஒன்னால முடியுங்கிற நம்பிக்கை
எனக்கு இருக்கும்மா... இருக்கு... ஆமா மாப்பிளை வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்...?
ஜாக்லின்: தெரியலைப்பா...
ஞானசௌந்தர்: சரிம்மா... இன்னைக்கி என்ன நாள்...?
(ஜாக்லின்
யோசிக்கிறாள்) ஓ
பிறந்த நாள்ம்மா... மறந்திட்டியா... இந்தாம்மா... என்னோட அன்பளிப்பு ( பார்சலை கொடுக்கிறார்)
ஜாக்லின்: தேங்யூப்பா... என்னப்பா...?
ஞானசௌந்தர்: பிரிச்சுப்பாரேன்...
ஜாக்லின்: (பிரித்துப்
பார்க்கிறாள்)
அய்... பட்டுச் சேலை... (தன் மேல்
வைத்துப் பார்த்து சந்தோசத்துடன்) நீங்கதான் செலக்சன் பண்ணுனீங்களா...?
ஞானசௌந்தர்: ஆமாம்... ஏன்...?
ஜாக்லின்: புடவையையெல்லாம் நல்லா செலக்சன் பண்ணியிருக்கீங்க...
இதென்ன பேண்ட் சர்ட்டா...?
ஞானசௌந்தர்: ஆமாம்மா... மாப்பிளைக்கு... வந்தவுடன நா கொடுத்ததா கொடும்மா... சரிம்மா... சாப்பாடு போடும்மா... சாப்பிட்டிட்டு கௌம்புறேன்...
ஜாக்லின்: ஏம்ப்பா... இருந்திட்டு போங்கப்பா...
ஞானசௌந்தர்: இல்லம்மா... இருந்திட்டுப் போற மாதிரியா இருக்கு...
வீட்ல பண்ணையாளு வேற சொல்லாம கொல்லாம ஓடிப்போயிட்டான்... வீட்ல யாருமில்ல... அங்க வேலை இருக்கு... நா உடனே போவணும்மா... சாப்பாடுகூட வேண்டாம்... நா கிளம்புறேம்மா...
ஜாக்லின்: இல்லப்பா... வாங்க... சாப்பிட்டிட்டுப் புறப்படுங்க...
(உள்ளே செல்கின்றனர்)
(உள்ளே செல்கின்றனர்)
-தொடரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
அருமையான நாடகம்... தொடர்கிறேன் அய்யா... http://ethilumpudhumai.blogspot.in/
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.
நீக்குஅழகான நடையில், வழக்கமான உங்கள் பாணியில். தொடர்கிறோம்.
பதிலளிநீக்குஅன்புள்ள முனைவர் அய்யா,
நீக்குதாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஞானசௌந்தர் சாப்பிட்டாரா ? தொடர்கிறேன்
பதிலளிநீக்குத.ம.வ.போ
அன்புள்ள ஜி,
பதிலளிநீக்குஞானசௌந்தர் சாப்பிட்டது உடம்பில் ஒட்டவில்லை.
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.