புதிய உடன்படிக்கை
காட்சி – 7
இடம்: படுக்கை அறை
பாத்திரங்கள்: ஜான்சன், ஜாக்லின்
சித்ரா.
(ஜான்சன்
கட்டிலின் மீது அமர்ந்தும் – எழுந்தும் இருந்தவாறு இருக்கும் வேளையில்... கதவைத் திறந்து
உள்ளே நுழைகிறாள் ஜாக்குலின் சித்ரா)
ஜான்சன்: வாங்க... மெதுவா
அடிஎடுத்து வைச்சு வாங்க... சாப்பிட்டுட்டு வர இவ்வளவு நேரமா...?
ஜாக்லின்: நான் சாப்பிடலை...
ஜான்சன்: சாப்பிடலையா... ஏன் ஒடம்புக்கு
ஏதாவது...?
ஜான்சன்: பின்ன ஏன் லேட்டு...
ஆமா...‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’ -ன்னு சினிமா பாட்டு கேட்டிருக்கியா...?
ஜாக்லின்: இன்னைக்கும் நீங்க
குடிச்சிட்டு வந்திருக்கிறீங்களா...?
ஜான்சன்: ஆமா... நான்
தெரியாமத்தான் கேக்கிறேன்... குற்றவாளிய விசாரிக்கிற மாதிரில்ல... விசாரிக்கிறா...
குடிச்சா என்னா தப்பா...?
ஜாக்லின்: என்ன...? என்ன...?
தப்பான்னா கேக்குறீங்க... பின்ன தப்பில்லையா...?
ஜான்சன்: நான் என்ன மட்டமான
கள்ளச் சாரயத்தையா குடிக்கிறேன்... பிராந்தியத்தானே குடிக்கிறேன்... இது ஒன்னும்
தப்பில்லை...
ஜாக்லின்: எல்லாக் கண்ட்ராவதியும்
போதை வர்றதுதானே... போதை வர்றதெல்லாம் ஒடம்புக்குக் கெடுதிதானே...!
ஜான்சன்: அப்படிப் பாக்கப் போனா
எதுலதான் ஒடம்புக்குக் கெடுதி இல்ல... நாம திங்கிற எல்லாத்திலையும்தான் ஏதாவது
கெடுதி இருக்கு... இதுக்கின்னு எதையுமே சாப்புடாம இருக்க முடியுமா என்ன...?
ஜாக்லின்: பேச்சுக்கு வேணுமின்னா அழகா இருக்கலாம்...
ஜான்சன்: இங்கே பாரு... மிலிடரியில பிராந்தியெல்லாம் குடிக்கக் கொடுக்கிறாங்களே...!
ஜாக்லின்: அவுங்கெல்லாம் கடுமையா எக்ஸ்ஸைஸ்... வேலை எல்லாம் செய்றாங்க... அதுவும் கொஞ்சமான
அளவுதான் கொடுக்கிறாங்க...
ஜான்சன்: நா என்ன... அந்த அளவைவிட
கொஞ்சம் கூடக் குடிக்கிறேன்... அவ்வளவுதான்... எ அளவு எனக்குத்தானே தெரியும்...
இது தப்பா...? சரி தப்புன்னா கவர்மெண்டு பிராந்திக் கடைய ஏன் தொறந்து விடுது...?
ஜாக்லின்: கவர்மெண்ட் கஜானா
எப்படியோ நிறையனும்... நாளைக்கு கஷ்டப்படுறது... நாமதானே...?
ஜான்சன்: நாமலா... நாம ஏன் கஷ்டப்படனும்... காசு இல்லாதவன்தான்
கஷ்டப்படுவான்... நமக்கென்ன... பாட்டன் சொத்து இருக்கு நாலு தலைமுறைக்கும்
உக்காந்திட்டு சாப்பிடலாம்... தெரியுமில்ல...
ஜாக்லின்: உக்காந்திட்டு சாப்பிடக் கூடாதுங்க... உழைச்சு சாப்பிடனும்... கவர்மெண்ட் கூட ‘குடி குடியைக் கெடுக்கும்...
குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’-ன்னு சொல்லித்தான் கொடுக்கிது...
தெரியுமில்ல...
ஜான்சன்: அப்படியா... தெரியாதே...
எங்கே பார்ப்போம்... (இடுப்பிற்குள் சொருகி வைத்திருந்த பிராந்தி பாட்டிலை எடுத்துப்
படித்துப் பார்க்கிறான்) நா எல்லாம் அதப் பாத்ததே இல்ல... பாட்டில்... சீல் ஒடைக்காம
இருக்கான்னுதான் பார்ப்போம்... எங்கே பார்க்கிறேன்... ஆமா எழுதியிருக்கு... நீ
சொன்னது உண்மைதான்... (பாட்டிலைத் திறந்து குடிக்கிறான்) ஆமா... இந்த பாட்டில்லே இதெல்லாம்
எழுதியிருக்குங்கிறது உனக்கெப்படி தெரியும்...? ஒரு வேளை நீயும் தண்ணி
அடிப்பியோ...? (கண்ணடிக்கிறான்)
ஜாக்லின்: என்ன தைரியம் இருந்தா
எனக்கு முன்னாடியே குடிப்பீங்க...
ஜான்சன்: இதுக்காக ஒனக்கு
பின்னாடியா குடிக்க முடியும்... வர்றப்பவே ஊத்திட்டுத்தான் வந்தேன... சுதி கொஞ்சம்
பத்தலை... அதான் ஒனக்கு முன்னாடி... கோவிச்சுக்காதே... இனி ஒனக்கு முன்னாடி
குடிக்கவே மாட்டேன்...
ஜாக்லின்: எனக்கு முன்னாடின்னு
இல்ல... எப்பவுமே குடிக்கமாட்டேன்னு சொல்லுங்க...
ஜான்சன்: அய்ய்ய்யோ...
அப்படியெல்லாம் சொல்ல மாட்டேம்மா... சொல்றத செய்யனும்... செய்றதத்தான்
சொல்லனும்... பொய் சொல்லக்கூடாதுல்ல...
ஜாக்லின்: அப்ப என்னதான்
சொல்றீங்க...?
ஜான்சன்: நீ என்ன கேக்றா... புரியலையே...
ஜாக்லின்: எனக்காக நீங்க
குடிக்க்க்கூடாது...
ஜான்சன்: உனக்காக நா குடிக்கல...
எனக்காகத்தான் குடிக்கிறேன்...
ஜாக்லின்: யாருக்காவும் இனி
குடிக்க்க்கூடாது... இந்த கெட்ட பழக்கம் எனக்கு சுத்தமா பிடிக்கல...
பிளிஸ்...எனக்காக விட்டிடுங்க...
ஜான்சன்: நேத்து வந்தவ நீ... இதென்ன
இன்னக்கி பழக்கமா...?
நெனச்சவுடன விடுறதுக்கு.... இதெல்லாம் நடக்காத காரியம்...
நெனச்சவுடன விடுறதுக்கு.... இதெல்லாம் நடக்காத காரியம்...
ஜாக்லின்: ஏங்க நடக்காது... நீங்க
மனசு வச்சா கண்டிப்பா நடக்கும்...
ஜான்சன்: என்னமோ நானும் அப்ப
இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன்... ரொம்பத்தான் பேசிறியே... ஊரு உலகத்தில யாரு
குடிக்காதவன இருக்கான்... என்னமோ பெரிசா புத்திமதி சொல்ல வந்திட்டா... நமக்கு
இன்னும் முதல் இரவே நடக்கலை... இன்னைக்கி ரெண்டாவது இரவாயிடுச்சு... சரி...
விளக்கை அணைக்கவா...?
ஜாக்லின்: இதுக்கு எனக்கு ஒரு
முடிவு தெரிஞ்சாகனும்...
ஜான்சன்: எதுக்கு...?
ஜாக்லின்: நீங்க இனி
குடிக்க்க்கூடாது...
ஜான்சன்: ஒ பேச்சுக்கு நா ஒன்னும்
ஆட முடியாது... எ இஷ்டப்படி குடிப்பேன்... நீ ஒன்னும் என்னக் கேக்க்க் கூடாது...
இப்ப என்ன சொலறாய்... (பாக்கெட்டில் இருந்து சிகெரெட் பாக்கெட்டை எடுத்து
சிகரெட்டை பற்ற வைக்கிறான்)
ஜாக்லின்: இப்படியெல்லாம் நீங்க
இருப்பீங்கன்னு நெனக்கிலைங்க... சிகரெட் பிடிக்கிறதுகூட உண்டா...?
ஜான்சன்: இதுவும் கெட்ட
பழக்கமுன்னு சொல்லுவியே...
ஜாக்லின்: நா என்னத்த சொல்றது...
(பெருமூச்சு விட்டபடியே) நா சொல்லித்தான் கேக்க முடியாதுன்டீங்க...
ஜான்சன்: எப்பவும் புருஷன் சொல்றதத்தான்
பொண்டாட்டி கேட்கனும்... அதான் நம்ம நாட்டோட பண்பாடு... சரி... வா... இன்னைக்காவது முதல் இரவா இருக்கட்டும்...
ஜாக்லின்: (கோபமாக) வெளி
உலகத்துக்குத்தான் நாம கணவன் மனைவி... நா வேணுமின்னா குடியை விடுங்க... குடியை விட
முடியாதின்னா... என்னால ஒன்னும் சொல்றதுக்கு இல்லே... சாரி என்ன மன்னிச்சிடுங்க...
ஜான்சன்: இதுதான் ஒ முடிவா...?
ஜாக்லின்: ஆமாம்...
ஜான்சன்: நல்லா யோசிச்சு சொல்லு...
ஜாக்லின்: நல்லா யோசிச்சுத்தான்
சொல்றேன்... நல்லா நம்ம வாழ்றதுன்னா இதுதான் முடிவு,.. அதனால நீங்க கட்டில்ல
படுத்துக்கங்க... நா கீழே தரையில படுத்துக்கிறேன்... குட் நைட்...
-தொடரும்...
-தொடரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
சபாஷ் !! சரியான முடிவு
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
சிகரட்டை பற்ற வைத்தது அய்யா ,அய்யாவையே ஊதித் தள்ளிட்டு போகப் போறாங்களோ அம்மா :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குஅய்யோ... பரட்டை சிகரட்டை பத்த வச்சிட்டியே...! வாக்கிற்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
இரண்டாம் நாளும் பிரச்சினையா... ?
பதிலளிநீக்குத.ம.வ.போ
அன்புள்ள ஜி,
நீக்குபிரச்சினையில்லா வாழ்க்கை ஏது...? வாக்கிற்கு நன்றி.