மணிமேகலையும் உதயகுமாரனும்
தலைவன்: கீதம்கோடி பாடும் ஜோடி இதயமே -இது
காலகாலம் வாழும் காதல் உதயமே!
விழிகளில் கனவுகள் கரையட்டும்
(கீதம்கோடி..
.
தலைவி : பூவையின் நெஞ்சினில் பூத்திடும் சுகமே
பூவிழி நாயகன் நீதந்த வரமே...
சேற்றிலே பூத்திட்ட செந்தாமரையை
தேவலோகம் போற்றச் செய்த தெய்வமே...
(கீதம்கோடி...
தலைவன்: நதிமூலம் பார்க்கவில்லை ரதியே - உன்
மதிமுகம் பார்த்ததினால் கிளியே
ஜென்மங்கள் மாறினாலும் இனியே
எந்நாளும் நீதான் சகியே...
(கீதம்கோடி...
தலைவி : வாழ்க்கை ஓடம் கண்ணீரில் ஓட
கலங்கரை விளக்காய் வழிகாட்டினாய்...
என்னைப் பன்னீரில் நீராட்டினாய்
பனிமலர் போலாக்கி மனம் வீசினாய்
(கீதம்கோடி..
(‘கானல் நீர் கோலங்கள்’ மேடை நாடகப் பாடல்)
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
அன்புள்ள மணவையாருக்கு,
பதிலளிநீக்குகானல் நீர்க் கோலங்களில் தாகம் தீர்கிறதே!
இது கானல் நீரா ?
பாடல் நீரா?
அருமையான பதிவு!
தொடருங்கள் அய்யா!
நண்பருக்கு நன்றி.
நீக்குசிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி அய்யா.
நீக்கு