பறக்கத் தெரியாத பறவைகள்...!
ஊர்வலம் போகும் மேகங்களே...
தலைவன்:அந்தி வர மனசு தந்தியானது
. சூரியனப் போகச் சொல்லியானது
தலைவி : சந்திரன துணைக்கு நான் அழைத்தது
மோகன ராகத்துக்கு அடியெடுத்தது
(ஊர்வலம் ...
தலைவன்:பூவிதழில் தேனிருக்குது
போதையேறும் போலிருக்குது
தலைவி :பாதையோரம் காத்திருப்பது
பார்வை வரம் நீ கொடுப்பது
(ஊர்வலம்...
தலைவன்:பாவையுனை நானினைப்பது
தேக சுகம் நூறிருக்கிது
தலைவி :வெக்கத்தில தத்தளிப்பது
சொர்க்கத்தில முத்தெடுப்பது
(ஊர்வலம்...
*15.8.1988‘ பறக்கத் தெரியாத பறவைகள்’
மேடை நாடகத்திற்காக எழுதியது
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக