காட்சி – 11
இடம்: மாளிகை
பாத்திரங்கள்: ஆரோக்கியசாமி, ஜாக்லின்
சித்ரா.
(மாமனார் ஆரோக்கியசாமி தனியாக
அமர்ந்து கொண்டு வெற்றிலையைப் போட்டுக்கொண்டு இருக்கிறார். அப்பொழுது உள்ளே வருகிறாள் மருமகள் ஜாக்லின்)
ஆரோக்கியசாமி: என்னம்மா...? இன்னைக்கி வேலைக்கி போகலையா....?
ஜாக்லின்: இல்லீங்க
மாமா... லீவு போட்டுட்டேன்...
ஆரோக்கியசாமி: ஏம்மா... ஒடம்புக்கு ஏதாவது...
ஜாக்லின்: அதெல்லாம் ஒன்னுமில்லைங்க
மாமா...
ஆரோக்கியசாமி: வேறென்னம்மா...?
ஜாக்லின்: வந்து... வந்து... (தயங்கித்
தயங்கி...) ஒங்கள்ட்ட எப்படி சொல்றதுன்னு பயமா இருக்கு...
ஆரோக்கியசாமி: என்னம்மா...? என்னவா இருந்தாலும் சொல்லும்மா...
ஜாக்லின்: மாமா... அவரு... அவரு...
ஆரோக்கியசாமி: யாரு ஜான்சனா...?
ஜாக்லின்: ஆமாங்க மாமா... அவரு தினமும்
குடிச்சிட்டு வர்றாருங்க மாமா...
ஆரோக்கியசாமி: (ஆச்சர்யத்துடன் வேகமாக)
என்ன...? எ மகன் குடிச்சிட்டு
வர்றானா...? என்னம்மா சொல்றாய்...? என்னால நம்பவே முடியலையே...!
ஜாக்லின்: நா சொல்றேன் நம்புங்க மாமா...
ஆரோக்கியசாமி: எப்பயில இருந்தும்மா...?
ஜாக்லின்: எப்ப இருந்து குடிக்கிறார்ன்னு எனக்குத் தெரியாதுங்க மாமா... கல்யாணமான முதல்
ராத்திரிக்கே குடிச்சிட்டு வந்தாருங்க மாமா... நானும் ஒங்கள்ட்ட சொல்லாமலே அவரைத் திருத்திடலாமுன்னு நெனச்சேன்... வரவர ரொம்ப ஓவரா குடிக்கறாருங்க மாமா...
ஆரோக்கியசாமி: அப்புடியா... இத ஏம்மா...
என்னிட்ட உடனே சொல்லலை... இப்படிக் குடிச்சிட்டு வந்தா குடும்பம் எப்படி நடத்துவான்...? ஆமா ஒன்ட்ட எப்படி நடந்துக்கிறான்...
ஜாக்லின்: என்னத்தங்க மாமா சொல்றது...?
ஆரோக்கியசாமி: இப்போ எங்கே போயிருக்கான்...?
ஜாக்லின்: விடிஞ்சா வெளியே போறாரு...
பொழுது சாஞ்சா வீடு திரும்புறாரு... சமயத்தில பத்து... பன்னெண்டு மணின்னு
ஆயிடுதுங்க மாமா...
ஆரோக்கியசாமி: வரட்டும்... ராஸ்கல்... காலிப்பயலுகளோட
சேர்ந்துக்கிட்டு... குடிச்சிட்டு கூத்தடிக்கிறானா...? தலைக்கு மேல வளர்ந்திட்டானேன்னு பாக்கிறேன்...
இல்ல...
ஜாக்லின்: அவசரப்படாதிங்க மாமா...
ஆத்திரப்பட்டு ஒன்னும் ஆகப்போறது ஒன்னுமில்லை... மீனு தூண்டியில
மாட்டிக்கிடுச்சு... மீனக் காப்பத்தணும்... அவசரப்பட்டு ஆகப்போறது ஒன்னுமில்லை...
ஆரோக்கியசாமி: சரிம்மா... நீ சொல்றதும்
சரிதான்... இப்ப என்ன செய்யலாம்...?
ஜாக்லின்: அவர்ட்ட எப்படி நாசுக்கா
எடுத்துச் சொல்லனுமோ... அப்படி எடுத்துச் சொல்லுங்க மாமா... எப்படியோ தூண்டில்ல மாட்டிக்கிட்ட மீன காப்பாத்துங்க மாமா...
ஆரோக்கியசாமி: ம்...ம்... முயற்சி செய்றேன்...
ஆண்டவா... இது எனக்கு வந்த சோதனையா...?
-தொடரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
குடியை விட்டாரா இல்லையா?
பதிலளிநீக்குமுனைவர் அய்யா,
நீக்கு‘குடி குடியை கெடுக்கும்’ என்றுதான் எல்லோரும் போராடுகிறார்கள்... குடிப்பவர்களைத் தவிர...!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
#ப்படியோ தூண்டில்ல மாட்டிக்கிட்ட மீன காப்பாத்துங்க மாமா...#
பதிலளிநீக்குமீன எப்படி காப்பாற்றப் போறாரோ மாமா :)
பகவான் ஜீ,
நீக்குமாட்டிக்கிட்டாரு... மச்சான் மாட்டிக்கிட்டாரு...!
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
சோதனை சாதனை ஆகட்டும்...
பதிலளிநீக்குவலைச்சித்தரே!
நீக்குசோதனை... பண்ணித்தான் பார்ப்போமே...!
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வலைச்சித்தரே!
நீக்குசோதனை... பண்ணித்தான் பார்ப்போமே...!
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.