புதன், 6 ஏப்ரல், 2016

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (15)


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (15)




  இருட்டு இன்னும் விலகாத வைகறைப் பொழுது.       தமிழினியன் எப்போது தூங்கினான்;  எப்போது விழித்தான் என்றே தெரியவில்லை.  அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அறிந்து கொண்டு  ரோஸி கேட்டாள்.


என்ன... ஒரே சிந்தனை...?”  ரோஸி அருகில் நிற்பதை அப்பொழுதுதான் தமிழினியன் பார்த்தான்.

பதிலேதும் சொல்லாமல் அமைதியாக ரோஸியைப் பார்த்தான்.

என்ன தூக்கம் வரலையா...?” 

ஆமாம்என்பது போலத் தலையை அசைத்தான்.

எனக்குந்தான்...!ரோஸி சொன்னவுடனே தூக்கிவாரிப் போட்டதைப் போல எழுந்து உட்கார்ந்தான்.

என்ன சொல்றீங்க...?  அப்ப நீங்களும் தூங்கலையா...?”  ரோஸியைப் பார்த்து தமிழினியன் கேட்டான்.

ஆமாம்என்று தலையை ஆட்டினாள் ரோஸி.


“ஏன்...?” என்று  கேட்டு ரோஸியைப் பார்த்தான் தமிழினியன்;  அவளின் முகம் அந்த வேளையிலும் பளிச்செனத் தெரிந்தது.

நான் தூங்கலைங்கிறது எப்படித் தெரியும்...?”

அப்ப... நீங்களும் தூங்கலையான்னா...?  நீங்களும்... அந்த உம்க்கு என்ன அர்த்தமாம்...?  சொல்லிவிட்டுச் ரோஸி சிரித்தாள்.

சரி... சரி... ஏன் தூங்கல...?

நீங்க ஏன் தூங்கலையாம்...?”

அம்மா சொன்னத நினச்சு நினச்சு... எனக்குத் தூக்கம் வரலை...?”  தமிழினியனின் பெருமூச்சு ரோஸியைச் சுட்டது.

என்ன...?  முடிவு எடுத்தீங்க...?”

ஒரே குழப்பமா இருக்கு...!

குழம்பிய குட்டையில மீன் பிடிச்சாச்சா... இல்லையா...?”

“ ‘மயக்கமா கலக்கமா... மனதிலே குழப்பமா... ’இந்தப் பாட்டுதான்  என்னோட மனசில மாறி மாறி வருது...

ஏழை மனதை மாளிகை ஆக்கி... இரவும் பகலும் காவியம் பாட ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கே... என்ன இருந்தாலும் கவிஞர்தானே...!

நான் கவிஞனும் இல்லை... நல்ல ரசிகனும் இல்லை... காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை... ஆனா அம்மா எதையும் என்னிட்ட இதுவரைக்கும் கேட்டதே இல்ல... எதையுமே எதிர்பாத்ததும் இல்லை...  அம்மாவோட  ஆசையை நெனச்சா...!

ஒங்க அம்மா ஆசை... பாவம்... அவுங்களுக்கு என்ன தெரியும்...?”

சரி... அத விடுங்க... அம்மா சொன்னதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...?” ரோஸியிடம் கேட்டான்.

நீங்க என்ன நினைக்கிறீங்க...?”

எனக்கு  குழப்பமா இருக்கு...!

எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல...!

அப்படின்னா...?”  

அப்படித்தான்...!

கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்...!

மொதல்ல இந்த வாங்க... போங்கன்னு ரொம்ப மரியாதையா சொல்றத விடுங்க...

சரிங்க...

பாத்திங்களா... இன்னும்  உங்கள மாத்திக்கல...!

சரி... மாத்திக்கிறேன்... ம்...ம்... சொல்லுங்க...

நீங்கதான் சொல்லனும்...!

இருவரும் நீண்ட நேரம் மௌனமாக இருந்தனர்.  தமிழினியன்தான் மௌனம் கலைந்தான்.

அம்மாவுக்கு... நா சசியை காதலிக்கிறது தெரியாதில்ல...!

“ஆமாம்... நீங்க ஆசைப்பட்டது அம்மாவுக்குத் தெரியாதில்ல...!

இனி தெரிஞ்சுதான் என்ன ஆகப் போவுது...   எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை... இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடுமுன்னு...கண்ணதாசன் பாடிட்டு போயிட்டாரு...

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடுமுன்னு அவரேதான் பாடியிருக்கிறாரு... இந்தக் கவிஞர பிடிச்சதுக்குக் காரணமே கவிதைதான்...!





             “என்னோட ஆசையும் என் அம்மாவோட ஆசையும் நிராசையா ஆயிடுச்சு...!”

ஒங்க அம்மா நிம்மதிக்காக...  நீங்க நிம்மதியில்லாம வாழமுடியுமா...?   யாருக்காகவும்... ஒங்கள நீங்க மாத்திக்காதிங்க... நீங்க நீங்களா இருங்க... அனாதையா இருந்த எனக்கு ஒங்களோட புனிதமான நட்பு கிடைச்சதே நா செஞ்ச புண்ணியம்...!  அது போதும் எனக்கு...!  அம்மாட்ட  நடந்ததச் சொல்லிப் புரிய வைப்போம்....

தமிழினியன் குழப்பத்திலிருந்து விடுபட்டவனாக புன்னகையுடன் ரோஸியைப் பார்த்து வணங்கினான்.  ரோஸியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தமிழினியனின் காலில் விழுந்தது;  கண்கள் குளமாயின. 

                                                                                                       வ(ள)ரும்...












9 கருத்துகள்:

  1. தமிழினியன் ரோஸியிடம் சொன்னது என்ன ? அறிய ஆவலுடன் நானும் மணவையாரே...
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தாங்கள் முதலில் வந்து ஆவலுடன் எதிர்பார்ப்பிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிமையான பாடல்கள் தொடருங்கள் ஐயா தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாரே!

      முதல் தளத்தில் வீடு கட்டிக்கொண்டு இருப்பதால் என்னாலும் தொடர்ந்து பதிவுகள் எழுதமுடியவில்லை. தாங்கள் தொடர்வதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. என்னாயிற்று அப்புறம்? யார் யாருடன் சேரப் போகின்றார்கள்?!! அறிய...தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      அறியத் தொடர்வதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    தங்களுக்கும் சித்திரைத்திங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு