வியாழன், 27 ஆகஸ்ட், 2015

அன்னை தெரசாவை காறித் துப்பியவனைத் தெரியுமா?



அன்னை தெரசா !




அன்னை தெரசா  அகிலமே  போற்றிடுமே!

அன்பை   விதைத்து   அனாதைகளைக்   காத்து

தொழுநோய்  போக்கிடும்  தொண்டினைச்  செய்து

தொழுதிடவே  வைத்திட்ட  தாய்!

                                                                                   -மணவை.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. 


                                                                                                                         



யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.




ரோமன் கத்தோலிக்கத்  தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கொல்கொத்தாவில்  காலடி வைத்தார் அன்னை தெரசா.




68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது 
கொல்கொத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.

(எங்கள் பள்ளியிலிருந்து சுற்றுலா சென்ற பொழுது   'Missionaries of Charity' Mother House  கொல்கொத்தாவிற்கு அன்னை  மறைவுக்குப் பின் சென்றிருந்தோம்.)
                                                                            


1953இல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957இல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கித் தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா.

                                                                                     



அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெருத் தெருவாகப் போய் யாசகம் கேட்டுத் தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். 

ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். 

அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்குப்  போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். 


கடைக்காரர் தெரசாவை கோபமாகப்  பார்த்து விட்டு,
 ”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. 
                                                    
 
    (நிழல்  நிஜமாகவில்லை)

அப்போது சற்றும் மனம் தளராமல்

 “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்”
                                                                      
அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாகப்  பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்தப்  பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார்.
இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். 

இப்படித்  தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.
                                                                   


ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது
 'Missionaries of Charity' அமைப்பு  தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.
                                                                       


வாழ்ந்த பொழுது  ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது

1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி  அவரது  87 ஆவது வயதில் மரணமடைந்தார்.

1979இல் அமைதிக்கான “நோபல் பரிசு” 
1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது
1985இல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம் கொடுத்து 
அன்னை தெரசாவின் தன்னலமற்ற சேவையைப்  பாராட்டி 
உயரிய விருதுகளைக் கொடுத்துப்  பெருமைப்பட்டுக்கொண்டன.

  -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.




28 கருத்துகள்:

  1. அன்னை தெரசாவின் தன்னலமற்ற தொண்டினைப்போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      முதல் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. ஆமாம் அய்யா அன்னையைப் போற்றுவோம்.

      நீக்கு
  2. நீங்கள் சொன்ன செய்திகளில் சிலவற்றை முன்னரே படித்துள்ளேன். இருந்தாலும் தற்போதைய தங்கள் பதிவில் சில புதியனவற்றை அறிந்தேன். புகைப்படங்கள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் மணவையாரே...
    அறியாத பல விடயங்கள் அறிந்தேன் நன்றி
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மாண்புமிக்கவர்களுக்கு வரும் நிலைப்பாடுகள் தான் ஐயா!
    ஆயினும் இந்தச் சம்பவம் மனதை அப்படியே உலுக்கிற்று.

    உங்களால் அறிந்தேன் அவர் பெருமைகள் இன்னும் ஒருபடி மேலே!
    நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!

    த ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன என்பது உண்மையே!

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.



      நீக்கு
  5. செய்தியாய்படித்ததுண்டுஆனாலும்தாங்கள்படத்தோடுசெய்தியும்தந்ததும் விழிகள் கசிந்ததுசகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      அறிந்த செய்திதான் என்றாலும் அன்னையின் பிறந்தநாளில் மீண்டும் அவரின் தூய தொண்டினை நினைவு கூர்வோம் என்றுதான். தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி. எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால் (வலது) மட்டுமே தட்டச்சு செய்ய முடிகிறது.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.


      நீக்கு
  6. இச்சம்பவம் பற்றிப் படித்துள்ளேன். இதை விட அவர் மதம் பரப்புகிறார் எனும் அவப் பெயர் என சகலதையும் சகித்தார். சாதித்தார்.
    அன்னையை நினைக்கும் போது, இந்த நாட்டு ஏழைகளுக்கு துரும்பையும் கிள்ளாத சங்கரமடச் சாம்புறாணிகள் நினைவில் வந்து தொலைகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ‘எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
      எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
      எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
      வாழை வழியாக வந்து
      பேசிப் பழகும் கிள்ளைகள்......’

      தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன என்பது உண்மையே!

      நன்றி.

      தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. இதுபோல் ஒருவர் இனிவருவாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள்

      அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை

      துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே – நம்மை

      சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

      நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு

      நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்

      மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே

      மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்

      “அன்னையின் ஆணை” என்ற படத்தில் கவி.கா.முஷெரீப் அவர்கள் எழுதிய பாடல் நினைவிற்கு வந்தது.


      நன்றி.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மதத்தைப் பரப்ப அவர் சேவை செய்திருந்தாலும் ,மற்ற மதத்தினர் அவரைப் போன்றே நல்ல காரியங்கள் செய்திருக்கலாமே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      சரியாகச் சொன்னீர்கள்!

      நல்ல மனம் வாழ்க
      நாடு போற்ற வாழ்க
      தேன் தமிழ் போல்
      வான் மழை போல்
      சிறந்து என்றும் வாழ்க
      நல்ல மனம் வாழ்க
      நாடு போற்ற வாழ்க

      தங்களின் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. 500க்கும் மேற்பட்ட Missionaries of Charities அமைப்பை தோற்றுவித்த அன்னை தெரேசா ஏன் ஒரு மருத்துவமனை கட்டவில்லை.

    Hell's Angel: Mother Teresa by Christopher Hitchens
    https://www.youtube.com/watch?v=9WQ0i3nCx60
    https://www.youtube.com/watch?v=iKkcDgeYBdk
    https://www.youtube.com/watch?v=qGuzFUeDDgY

    http://www.slate.com/articles/news_and_politics/fighting_words/2003/10/mommie_dearest.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அவசியம் பார்க்கின்றேன்.


      நீக்கு
  12. எச்சில் துப்பிய செய்தியை க் கேள்விப்பட்டிருக்கிறேன்! மணவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள புலவர் அய்யா,

      சிலர் அறிந்திருப்பார்கள்... சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்...!

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      நீக்கு
  13. இந்தச் செய்தி அறிவோம் நண்பரே! அன்னையைப் பற்றிய பகிர்வு அருமை...நன்றியும்....மதரைப் போல் எல்லாம் இனி ஒருவர் பிறப்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      அன்னையைப் போலொரு தெய்வமில்லை – அவள்
      அடிதொழ மறப்பவர் மனிதரில்லை – மண்ணில் மனிதரில்லை!

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அன்னையின் பணி போல ஒரு அரசியல்வாதியும் செய்யவில்லை.அவரின்சேவையை பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு