சனி, 4 ஜூலை, 2015

திரைப்படப் பாடல் போட்டிக்கு அனுப்பிய பாட்டு





வல்வையூரானின் நீங்க எழுதுற பாட்டு


திரைப்படப் பாடல் போட்டிக்கு அனுப்பிய பாட்டு





ஆண்:

           செல்லமே செல்லமே மௌனமா?
கொல்லவே கொல்லவே வேண்டா
மதியைப் பிரியுமா வானம்...
சகியே சொல்வாய்!

பெண்:
                                                                               
         அன்பேஆருயிரே! அனிச்சம் மலர்போல்
நானே... வாடுகிறேன்...
காதலில் விழுந்தேன்
கடுஞ்சொல்ஏனோ?  தீயாய் சுடுகிறதே...ஓ...
திசைதெரியாத மேகமாகியே
விசையின்றி நானே அலைகிறேன்
விதியை எண்ணியே வாழுகிறேன்
            விழிமூடிக் கிடக்கிறேன்
      
ஆண்:
                                                                                     

செல்லமே செல்லமே மௌனமா?
கொல்லவே கொல்லவே வேண்டா!         
மதியைப் பிரியுமா வானம்...
சகியே சொல்வாய்

பெண்:


கண்ணே கனியே மானே மயிலே
எல்லாம் பொய்யா?
இதயத்தையே இடம்மாற்றிய     
திருடா நீயே!  மெய்யே! நீயே
சொல்வாயே வனமாகுதே!  பாலை வனமாகு...தே... ஏ...

ஆண்:
                                                                                                                          பெய்யாய்ச் சீண்டியது மெய்யாக மெய்தான்
      வஞ்சிமலரே உன்னை கெஞ்சுகிறேன்
      கொஞ்சி மகிழ கொஞ்சம் தாராய்?
    
பெண்:

       கொஞ்சநேரத்தில் துடித்தது நெஞ்சமே   
       போதுமே குறும்பு  மாலைதந்து விரும்பு

ஆண்:  
                                                                                                         
         நாணத்தால் நீ சிவந்து
நாயகி நீ விருந்து    
மாலைவரும் வேளைவருமே     விரைந்தே       
ஓலைவருமே...கலங்காதே... மயங்காதே!
    


பெண்:

         சோலையாகுமே நாளும் வாழ்வே
வசந்த காலமினியே...
வாசம் வீசுமினியே                                          
காதல்... பேசும் விழியே    
            காலம்... வாழ்த்துப் பாடும்

ஆண்:

           செல்லமே செல்லமே மௌனமில்ல   
சொல்லவே சொல்லவே வார்த்தையில்ல    
           உள்ளத்தில்  உன்னையன்றி யாருமில்ல
 உள்ளத்தைக் கேட்டுப்பார் பொய்யுமில்ல


பாடல் இசையைக்  கேட்க  கீழே ‘கிளிக்’ செய்யவும். 


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

    









28 கருத்துகள்:

  1. இனிய இசைப் பாட்டு
    போட்டி பற்றிய முடிவை
    நானறியேன் - தங்கள் பாடல்
    தெரிவாகி இருக்குமென
    நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ரியாஸ் குரானா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

      நன்றி.

      நீக்கு
  2. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    தோல்விக்கு இரண்டு காரணம் ... ஒன்று யோசிக்காமல் செய்வது...இரண்டு யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது. ஸ்ரீ கிருஷ்ணர்.

    வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது... தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பைவிட வலிமையானது. - விவேகானந்தர்.

    வெற்றி இல்லாத வாழ்க்கை இல்லை...
    வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை... - பில்கேட்ஸ்.

    தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால்
    வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம். - நெப்போலியன்.

    ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதைவிட
    தோற்பது எப்படி என்று யோசித்துப் பார்
    நீ-
    ஜெயித்து விடுவாய். - ஹிட்லர்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமை அருமை பாடல் நன்றாக இருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள சகோதரி,

    தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பாடல் நன்றாக இருக்கிறது. தங்களது முயற்சி மென்மேலும் தொடரட்டும்.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன். அவசியம் பார்க்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  7. ஐயா வணக்கம்.

    பாடலுக்கான சூழலும் அதற்குப் பொருந்திய தங்களின் பாடல்வரிகளும் இனிமை.

    இசைகேட்டுக் கொண்டே தங்களின் பாடலோடு ஒன்றினேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
    ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
    என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும் (இசை)
    என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
    என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
    என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
    என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

    இனிமையுடன் பாடலுடன் இசை கேட்டு மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தேவகோட்டையில் இருந்தாலும்... தங்கள் மனக்கோட்டையில் மலைக்கோட்டையாய் இருப்பது வலைக்கோட்டைதானே! எப்படியும் பின்னூட்டம் இடவேண்டும் என்று எண்ணி செல்லும் இடத்தில்( சொந்த ஊரில் இருந்த பொழுதும்) ‘செல்லில்’ சொல்லும் தங்களின் ஆர்வம்தான் என்னே!

      வியந்து போனேன்... மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கொலைவெறி காலம் ஆகி விட்டது ,இன்னும் ,மலர் ,வானம் என்றெல்லாம் எழுதினால் எடுபடாது ...தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      உண்மைதான். ஆமாம்... ஏன்தான் இந்த கொலை வெறி?
      தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,


      இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ரியாஸ் குரானா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  13. முயற்சி வெல்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,


      இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ரியாஸ் குரானா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் அய்யா,
    தங்கள் பா வரிகள் அத்துனையும் அருமை,
    வாழ்த்துக்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்! வரிகள் மிகவும் நன்றாக உள்ளன நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பாடல் கேட்கவில்லையே நண்பரே தங்கள் சுட்டியில்...எப்படிச் சென்று கேட்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      ‘திரைப்பாடல் மெட்டு ’ கிளிக் செய்தால் வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” வரும்... அதில் ‘ பாடல் இசையை இங்கே சொடுக்கி கேளுங்கள்’ என்பதை மீண்டும் கிளிக் செய்தால் பாடலுக்கான இசையை கேட்கலாம்.

      -மிக்க நன்றி.

      நீக்கு