சனி, 30 ஆகஸ்ட், 2014

பாய்மரம் - சிறுகதை


                                       




          ‘இந்த அவசரநிலைப் பிரகடனம்-  சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்காது என்று உறுதிகூற விரும்புகிறேன்.  ஏழைகளின் துயர்களைத்  துடைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’  இப்படிப்  பிரதமர்  நாட்டு மக்களுக்குத்  தொலைக்காட்சி,  வானொலி மூலமாக உரையாற்றினார்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

கவியரசு கண்ணதாசன்...!


                   
                           

கவியரசு கண்ணதாசன்...!

          (மணவை ஜேம்ஸ்)

சாத்தப்பன் என்ற அழகப்பன்
சட்டையணியா விசாலாட்சியின்
கூ(ட்)டலில்
ஆழக்கடலில் தேடிய முத்து...
ஆசைச் சுகத்தில் தோன்றிய முத்து...
1927 சூன் 24 -இல்   தோன்றிய
முத்தையா எனும் கவிமுத்து!

எட்டாவது பிள்ளைக்கு-
எட்டாம் வகுப்புதான்
எட்டமுடிந்தது.


பெத்து எடுத்தவர்கள்
தத்து கொடுத்தார்கள்
22-ஆவது அகவையில்
பிள்ளைப்பேறு இல்லாத
தெய்வானை ஆச்சிக்கு
ஏழாயிரத்திற்கு...!

ஒருத்தி மகனாய் பிறந்து-
ஒருத்தி மகனாய் வளர்ந்த...
கண்ணனுக்குத் தாசனான
கண்ணதாசன்!.

‘கலங்காதிரு மனமே-நீ
கலங்காதிரு  மனமே-உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே ’
கன்னியின் காதலியில்
1948-இல் முதல் பாடல்
நூறு ரூபாய் சன்மானம்!.


அய்யாயிரத்திற்கும் மேல் பாடல்...
‘கண்ணே கலைமானே  ’
கடைசிப் பாடல்
‘மூன்றாம் பிறை’யில்...

பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல
கண்ணதாசன்  -  கருணாநிதி...
‘அபிமன்யு’ திரைப்படத்தை தொடர்ந்து
ஆறுநாள் பார்த்து
கலைஞரின் தமிழால்
அவர்மீது காதல்...
‘மருதநாட்டு இளவரசி’-யின் போது
சக்ரபாணி கலைஞரிடன்
‘இவர்தான் உங்கள் காதலி’
அறிமுகப்படுத்தினார்.

பாசமாக-
பசுமையாக நட்பு வளர்ந்தது...
ஒருவரை ஒருவர்
ஒருநாள் பார்க்கவில்லையென்றால்-ஏதோ
ஒன்றைப் பறிகொடுத்தது போல...
ஓகோ... இதுதான்-
ஓரினச்சேர்க்கையோ?
ஆமார்...
தமிழின்பால் ஓரினச்சேர்க்கை!
தமிழினம் என்ற ஓரினச்சேர்க்கை!.

இவர்களுக்குத்தான்
எத்தனை ஒற்றுமை...?
முதலெழுத்து ‘க’ தான்
கண்ணதாசன் - கருணாநிதி


ஒரே காலத்தில் எழுதத்தொடங்கியது...
கல்லக்குடியில் போராடியது...
கவிஞருக்கு மூன்று மனைவிகள்
பார்வதி - பொன்னம்மை - வள்ளியம்மை
கலைஞருக்கு மூன்று மனைவிகள்
பத்மா - தயாளு - இராஜாத்தி.
இருவரும் இணைந்தே
பல இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்...!
பலான இடத்திற்கும் சென்றிருக்கிறார்கள்...!

1949-இல் பொள்ளாச்சியில்
திராவிட இயக்க மேடையில்
‘கவிஞர்’ என்ற பட்டத்தை
கலைஞர் கொடுத்தார்.
அப்பொழுது எழுதியிருந்தது...
அய்ந்தே பாடல்தான்!

கலைஞரிடம் முரண்பட்ட பொழுது-
‘தென்றலாக வீசியவன் நீ - என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ - அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!  ’
-என்றார் கலைஞர்.

காங்கிரஸ் உணர்வில்-
கலந்திருந்த பொழுது ஆத்திகர்...
தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட பொழுது
தன்னை இணைத்து... நாத்திகர்...!
மீண்டும் ஆத்திகர்...!

                                                                 
மாறி மாறி யோசித்து
மாற்றி மாற்றி யோசித்து-
பாட்டில் வாழ்ந்தார்...
பாட்டிலில் வாழ்ந்தார்!


காமராசரை கவிஞர் நேரில் ‘அய்யா’
பிறரிடம் பேசும் போது ‘பெரியவர்’ என்பார்...
தாயாக - தந்தையாக - தெய்வமாகப் பார்த்தார்
காமராசரை..

‘காட்டுக்கு ராஜா சிங்கம்
பாட்டுக்கு  ராஜா கண்ணதாசன்’
-என்றார் காமராசர்.

காமராசரின் வாழ்க்கையை...
படமாக எடுத்தார்...
படம் பாதியிலே நின்றது...!


உங்கள் பெயரை
‘காமதாசன்’ மாற்றலாமா?
என்றார் ஒருவர்...
நல்லது....இடையில் ‘ராஜா’
என்ற வார்த்தையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்...
‘காமராஜதாசன்’ என்றார்.

‘காமராசர் வீடு-
நிமிர்ந்தால் தரையிடிக்கும்...
நிற்பதற்கே இடமிருக்கும்...
ஆண்டி கையில் ஓடு இருக்கும்
அதுவும் உனக்கில்லையே’
-என்றார் கவிஞர்.


எம்.ஜி.ஆர். அவர்கள்...
கவி அரசை-                                                              
அரசு கவியாக்கினார்...                                                
‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் சரியாசனம்...’
‘கடலளவு கிடைத்தாலும்
மயங்கமாட்டேன்- அது
கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்’

பதினாறும் பெற்று அல்ல...
அவற்றில் ஒன்று குறைவாக
பதினைந்து மக்களைப் பெற்ற மகராசன்.

‘கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றிய செந்தீயே - நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு! ’
1969-இல் தன் இறப்பிற்கு...
தானே எழுதிய இரங்கற்பா...
1981 அக்டோபர் 17 இல்
அந்தக் குயில் பாட்டு பாடப்பட்டது.


எப்படி கவிஞன் வாழ வேண்டும்...
எப்படி மனிதன் வாழக்கூடாது...
என்பதற்கு இவனே
எடுத்துக்காட்டு...!
                                                                       
உன் பாடலைக் கேட்காமல்                  
ஒரு பொழுதும் விடியாது...!
ஒரு பொழுதும் முடியாது...!


                                                                                           -மாறாத அன்புடன்,
                                                                               
                                                                                             மணவை ஜேம்ஸ்.
                                                         
                                                                               






                                                                                          

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மழலை


                                                   மழலை


யாமறிந்த மொழிகளிலே...
மழலை மொழி போல
இனிதாவது எங்கும் காணோம்!
மழலைகள்-
இங்கு
மழலைகளாக இருக்கின்றார்களா?
இல்லை... நாம்தான்
இருக்கவிடுகின்றோமா?
இங்காவது-
மழலைகள் இருக்கிறார்கள்...!

கண்ணீர்த் துளிகளாக ஆகிப்போன
அண்டை தேசத்தின் மழலைகள்..?.
 முள்ளிவாய்க்கால்களுக்குள்
 முடங்கிக்கிடக்கிறார்கள்?



இங்கு-
நினைவு மண்டபம்கூட
 நிலைக்கவில்லையே?
மறக்க முடியுமா?
அல்லது மறைக்கத்தான் முடியுமா?
இராவண தேசத்தின்
இரத்தச் சரித்திரத்தை...!



பள்ளிக்கூடம்-
பால்முகம் மாறா பாலகர்களை
விலைக்கும் வாங்கும்                                  விசித்திர
 வியபாரக்கூடம்...!


பள்ளிக்கூடம்-
பணம் காய்க்கும் மரங்களாகிவிட்ட பிறகு
அந்தக் காய் பறிக்கத்தான்
அகிலத்தில் எத்தனை போட்டி?

காலத்தே பயிர் செய்யச் சொன்னால்
காலம் வருமுன்னே
இந்தச் சின்ன நாற்றங்கால்களைப்  பிடுங்கி
நடுவதென்ன நியாயம்?

                                               
குழந்தைக்கு-            
தாய்ப்பால் தரமறுக்கும் தாயைப்போல்
தாய்மொழியையும் தரமறுக்கும் அரசு
இது தவறென்று கொட்டு முரசு...!!



ஆங்கிலப் புட்டிப்பாலை
ஆர்வமுடன் ஊட்டும் அரசுத்தாய்...!
அசுரத்தாய்...!!
தன் சேய்க்கே நஞ்சான
கள்ளிப்பாலை   வார்க்கலாமா?                                          
கல்விச்சோலையை வனமாக்கலாமா?
    

வேற்றுமையாய்  இருந்த கல்வியை-
ஒற்றுமைப்படுத்திய
சமச்சீர்கல்வியை
சமூகம் மறக்குமா?


படைப்பாற்றலை வளர்க்கின்ற கல்வி-
படிப்பாற்றலை வளர்ப்பது எப்போது?
எல்லோரும் தேர்ச்சி
என்றாகிவிட்ட பிறகு...
எதற்குப் படிப்பது
என்றாகிவிட்டவர்களை...
என்ன செய்வது?

பள்ளிகளில்-
விலையில்லாமல் எல்லாம் கொடுத்து
விலைமதிப்பில்லா கல்வியும்
விலைமதிப்பில்லாமல் போனதே...!

பள்ளிகள்-
பகுத்தறிவை வளர்ப்பதைவிட்டு
மூடத்தனத்தையா வளர்ப்பது?
சரஸ்வதி வீணையிலிருந்து அபஸ்வரம்...!
எப்பொழுது சுபஸ்வரம் வரும்...?

                                                                                       - மாறாத அன்புடன்,

                                                                                         மணவை ஜேம்ஸ்





வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மகாத்மாவே...!பாரத நாடு?



                                      மகாத்மாவே ...!பாரத நாடு?





சாராயக்கடைகளை-

சர்க்காரே நடத்தி...

சாதனை சரித்திரத்தில்

இடம் பிடித்துவிட்டனர்.


மகாத்மாவே...!

உன்-

மதுவிலக்குக் கொள்கையையே...

விலக்கி வைத்து விட்டனர் தெரியுமா?


பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள்

பாரதநாடு...!




பாரதநாட்டில்-

மதுவினால் மாண்டு போனவர்கள்...

ஆண்டொன்றிற்கு

பதினெட்டு இலட்சத்திற்கு மேல்..!.
                                                                                            
தமிழகத்தில் மட்டும்

இரண்டு இலட்சத்திற்கு மேல்..!.                  


தேசப்பிதாவே...!

நம் தேசத்தில்...

மது அரக்கனால்

ஒன்றரை இலட்சம்

சாலை விபத்துகள்...!

அவற்றில் மரணம் மட்டும்

பதினைந்தாயிரத்துக்கும் மேல்...!


குடிமகன்களால்...

குற்றச்சம்பவம்-

இரண்டேகால் இலட்சத்திற்கும் மேல்...!

பாலியியல் வன்முறை                                        

அறுநூற்றுக்கு மேல்

பாழாய்ப்  போன பாரதத்தில்...!

.


தமிழகத்தில் மதுவினால்...                                  
       

நடப்பாண்டில் மட்டும்-                                    

நாட்டின் ஈட்டிய வருமானம்

எவ்வளவு தெரியுமா?

இருபத்து  ஓர் ஆயிரம் கோடிக்கும் மேல்...



இது வெகுமானமா?

இல்லை -

உனக்கிது அவமானமா?


சாரயக்கடைகளில்...
                                                                                         
எச்சில் தம்ளர்களில்                                              

சமத்துவம் சங்கமமாகி...

வெளியில்

சாதிச்சண்டைகளில்

எச்சில் காறி

உமிழப்படுகிறது...

                                                                                           -மாறாத அன்புடன்,

                                                                                             மணவை ஜேம்ஸ்



வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கல்விக்காவிரி...!


                                                      கல்விக்காவிரி...!




கல்விக்காவிரி-

இங்கே வணிகமாகி...

வறண்டு விட்ட பிறகு...

அந்த ஜீவநதிக்கே...

தண்ணீர் தாகம்!.


அந்நியக் கடலிடமா...

அநியாயமாய்க்  கடன் கேட்பது...?

முலைப்பால் அருந்தாத மழலை

முனைப்பாக வளர்வது எப்படி?



முளையிலேயே ...

 தாய்மொழிக் கல்வியை கிள்ளியெறிந்து-

மூளையை மழுங்கடித்தால்...

மூளியாகிவிடாதா  தலைமுறை...?


இனியாவது-

சுரணை வரட்டும்...!

ஆமாம்...

சுத்தம் எப்பொழுது வரும்?

                                                                                        -மாறாத அன்புடன்,
                                     
                                                                                          மணவை ஜேம்ஸ்.

                                                                                          






செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

விடிந்தது(ம்) விடுதலை!


                                         விடிந்தது(ம்) விடுதலை!




இராக்காலத்தில்-

பனியரசன்...

கொடுங்கோலாட்சியெனும்

குளிராட்சியைக் கண்டு

மலர்மக்கள்
                                                                       
மௌனப் போராட்டம்

 நடத்தினர்.



தன்னுடல் உறுதியுடன்-

உயிரைப் பணையம்

வைத்தெழுந்த...

கதிரவனெனும் விடுதலைப்புலியால்

விடிந்தது(ம்) விடுதலை.

                                                                                      -மாறாத அன்புடன்,

                                                                                        மணவை ஜேம்ஸ்.     

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

உயிர் மெய்...! -சிறுகதை.

                                     உயிர் மெய்          

                                                       (மணவை ஜேம்ஸ்)




     அதிகாலை வேளை விடியும் பொழுதில் கோழி கூவியது.  கோழி கூவித்தான் பொழுது விடியாது என்றாலும், உறங்கிக் கொண்டிருந்த இராதகிருட்டிணனின் உறக்கத்தை அது கலைத்தது.

     சின்னச்சின்ன வட்டங்களாகக்  கோரைப்பாய் கிழிந்திருக்க, அதில் படுத்திருந்த இராதகிருட்டிணனின் உடம்பு தரையில்பட்டு இருந்ததால் சில்லென்ற சிலிர்ப்பை உண்டாக்கியது.   அருகில் மனைவி ஜெயந்தி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.

சனி, 16 ஆகஸ்ட், 2014

தாசியை யோசி!



                        தாசியை யோசி!



பசியிங்கே...


பரிணாமம் பெற்று


பண்டமாற்று முறையில்


பகிர்ந்து கொள்ளப்படுகிறது!


                                                                                 -மாறாத அன்புடன்,
                                                                                   மணவை ஜேம்ஸ்.                                  


பாமரர்கள் !


                                       பாமரர்கள்!





பாமரர்கள்...!
இந்திய தேசத்தின்
பூமத்திய ரேகை.

பாட்டாளிகள்...
பாதிக்கு மேல்
வறுமைக்கோட்டிற்கு கீழ்...

 பட்டமரமாய்
வாழ்க்கைப் பட்டமரமாய்...
வறுமையில் வாழ்வதற்கெனவே
வார்க்கப்பட்டவர்களா?


’தனியொருவனுக்கு
உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்’
என்றானே பாரதி...
இவர்களெல்லாம்
ஜகத்தினில்தானே
ஜீவிக்கிறார்கள்.

ஓ...
தனியாக இல்லை
என்பதுதான் தவறோ?!


                                                                                                                                                               
                                                                                     -மாறாத அன்புடன்,
                                                                                       மணவை ஜேம்ஸ்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

மரணத்தின் ஒத்திகை...!


                              மரணத்தின் ஒத்திகை...!



குடிமகனே-

எங்கள் தேசத்தின்

குடிமகனே....!

இருட்டுவெளியில்

குருட்டு வாழ்க்கைக்கல்லவா

அடிமைசாசனம்

எழுதிக்கொண்டிருக்கிறாய்..!.


இமைவிலங்கை...

கழட்டி...

உன் குலக்கொழுந்தின்

இதயத்தின் சப்தத்திற்கு


செவிமடு.


பட்டினியால்..
.
பத்தினியின் விழிக்கு

தண்ணீர் மோகம்...

அவள்

கண்ணீர் ஊற்றால்

உப்புப்பால் சுவைக்கும்


குழந்தையின் உதிரம்

அதைவிட சுவையானது.

குடி...!


குடிமகனே குடி...

மதுவின் மகுடியில்

மானிடமே

மண்டியிட்டு

 மயங்கிக் கிடக்கிறதே!.


மதுவே!

உனது போதை ராகத்திற்கு

இந்த-

காதுள்ள மனிதப்பாம்புகள்

ஆடிக்கொண்டுதான்

 இருக்கின்றன...!


மரணத்தின் ஒத்திகைக்கு

நீயெடுத்த

மொத்த குத்தகை

மனிதர்கள்தானோ?


உண்மையைச் சொன்னால்...

மனிதன் மனிதனாக

வாழ்வதும் இல்லை...!

சாவதும் இல்லை...!
                                                                                                                                                                                         
                                                                                                       -மாறாத அன்புடன்,
                                                                                                        மணவை ஜேம்ஸ்.

                                                           
 
                                                                                      

புதன், 13 ஆகஸ்ட், 2014

தாயைப் போல பிள்ளை...!



                 தாயைப் போல பிள்ளை...!






இந்த-

மணிமேகலை நிற்பது


தெய்வமாக அல்ல...

தெருவில்!.


ஏன் இத்தனை


ஆண்களின் தரிசனம்...?

இவர்களின் கண் அம்புகள்

இதயத்தையல்லவா

குத்தி ரணப்படுத்துகின்றன...!


இவள்-

கையில் இருப்பது

அமுதசுரபியெனும்

அட்சய பாத்திரமல்ல...!

பிச்சைப் பாத்திரமெனும்                

அலுமினியப் பாத்திரம்...!


இவளின்-

வயிற்றைப் போலவே
                                                                     
இதுவும்

காலியாகக் கிடக்கிறது...

இந்தப்பிள்ளை-

தாயைப் போல ஆக...

தயாராக இருக்கிறாள்.

                                                                               -மாறாத அன்புடன்,

                                                                                  மணவை ஜேம்ஸ்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

கேளுங்கள் கொடுக்கப்டும்!


                               கேளுங்கள் கொடுக்கப்படும்!



கண்ணகி நான்..!

கையில் ஏதுமில்லாததால்

கல்யாணமாகமலே

காத்திருக்கும்

கண்ணியமான கன்னி நான்..!



வரதட்சணை கேட்கும்

வாலிபர்களே!

என்ன வேண்டுமோ?

கேளுங்கள்...

கேளுங்கள் கொடுக்கப்படும்...

எப்படித் தெரியுமா?

மாதவியாக மாறிய பிறகு...

என்ன சம்மதமா?

                                                                                    -மாறாத அன்புடன்,

                                                                                      மணவை ஜேம்ஸ்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

உடற்சிற்பி







                              உடற்சிற்பி


ஈருடல்  ஒன்றாகி


ஓருடல் ஒன்றாக்கி


பாருடல் பார்க்கவைத்த
                                                             

பேருடல் பெருந்தகை...


உடற்சிற்பி பிரம்மாக்கள்!


                                                                                   -மாறாத அன்புடன்,

                                                                                     மணவை ஜேம்ஸ்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

சமாதானப்புறா!


                              சமாதானப்புறா!


விரிசலடைந்த இந்தியத்தில்
விதைத்துவைத்த சமாதானம்
கந்தகத்தின் மேல்
சந்தனத்தை பூசியல்லவா
வாழ்கிறது.

சுதந்திரத்தைப் பெற்ற பிறகும்
உனது-
பிள்ளைகள்
சும்மா இருக்கவில்லை...
சுகமாயும் இருக்கவில்லை...

வாழ்க்கை-
இருக்க வேண்டிய நிலைமைக்கும்...
இருக்கும் நிலைமைக்கும்...
இடையே நடக்கும்
இழுபரியே என்றாய்...
இன்றோ இழுத்துப்பறிப்பதே
வழக்கமாகிவிட்டது.

சாகாத சாதிகள்...
வேகாத நெருப்பாக
வெறும் மாநாடுகள் போட்டு
தனித்தனியே தங்களின்
பலத்தை பரிட்சித்துப் பார்க்கிறது.

உனது-
அணி சேராக்கொள்கையை
அனைவரும் கடைபிடிக்கின்றனர்...
ஆமாம்...
இந்தியரனைவரும்
ஓர்
அணியாக சேராமலே..!.

நீ-
பறக்கவிட்ட
சமாதானப் புறாவை...
சவப்பெட்டியில் வைத்து
பாதுகாத்து வருகின்றனர்...
பாவமன்று-
காத்து வருகின்றனர்.

உன்
நிழலில்தான் எத்தனை
இந்திய ஜுவன்கள்
வாழயெண்ணி
திருவோ(ட்)டையேந்தி...
தருமர்களின் வரவுக்காக
தவமிருக்கிறார்கள்.

வறுமையில்-
வாடுகின்ற ஏழையெல்லாம்
ஏன் உன்னடியை
அடையவே ஆசைப்படுகிறார்கள்?

அனாதையாக
அலைந்து திரியும் மானுடத்தை
மகிழ்விக்க...
அவனியில் அங்கிகரித்து
வாழ வழிவகுக்க வேண்டாமா?

இவையெல்லாம்...
நாளைய தீர்ப்புக்காக
காத்திருக்கின்ற வழக்குகள்..!
.
உண்மைக்காக
வழக்குரைஞர்களை
தேடி அலைகின்ற
ஊமைக் குற்றவாளிகள்.

                                                                             -மாறாத அன்புடன்,
                                                                               மணவை ஜேம்ஸ்.


சனி, 9 ஆகஸ்ட், 2014

மலர் மாலை!

                                  மலர் மாலை                   

                                                       

பூவே...!

உன் தலையை

கொய்த பிறகும்...
                                               
சாகாதனால்தானோ

நாரோடு 

சுருக்குமாட்டி                                           

தொங்கவிடுகிறார்கள்.

                                             
                                                                      -மாறாத அன்புடன்,
       
                                                                        மணவை ஜேம்ஸ்.



                                                                     


விழி




உன் விழியெனக்கு
தொலைக்காட்சி
ஆனதால்தான்...
உன்னில் தொலைந்த
நான்
உன்னையே
 பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன்-
ஒலி-ஒளிபரப்பில்                                  
இதைமட்டும்
இணைத்துக்கொள்...
இணைக்காமல் கொல்லாதே..

நான் உன்னை
காதலிக்கிறேனென்று.


|
                                                                                                       மாறாத அன்புடன்,
                                                                                                        மணவை ஜேம்ஸ்.      




வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சுதந்திரம்

                                                 சுதந்திரம்


இருட்டில் இருந்துகொண்டு

வெளிச்சத்திற்காக

விரதம் இருந்தவேளை...

வந்த வெளிச்சம்

மின்னலாகதாக்கி

தந்திரமாக

பார்வையை பரித்துவிட்டது.



இப்பொழுது-

நாங்கள் வெளிச்சத்தில்தான்

வாழ்கிறோமென்று

சொல்லக்கேட்கிறோம்.

                                                                               -மாறாத அன்புடன்,

                                                                                 மணவை ஜேம்ஸ்.

நெருப்பு எரிவது எப்போது?

                       நெருப்பு எரிவது எப்போது?

                              
                                                         (மணவை ஜேம்ஸ்)

எங்கள் விவசாயிகள்
இந்த தேசநிலத்தில்
இரத்த வியர்வையை
நித்தம் சிந்தியே
தேகமிழைக்கும் இயேசுபிரான்கள்...

இவர்கள்-
வாழ்க்கைக் கல்வாரியில்
வறுமை ஆணியால்
ஏழ்மைச் சிலுவையில் அறையப்பட்டே
ஒவ்வொரு விடியலிலும்
உயிர்த்தெழுந்து
உலகை வாழவைக்கிறார்கள்...


பாட்டாளியான பாமரர்கள்...
குடிசைபோடக்கூட
சொந்தத்தில் நிலமில்லாமல்
தெருவோர மரத்தடியில் வாழும்
இக்காலத்து ஆதிவாசிகள்...

வானமே கூரையாகிவிட்ட பிறகு
மழைவேண்டாம் ...
மன்றாடுகிறார்கள்...
ஒண்டிக்கொள்ள ஒன்றுமில்லை.

பசியால்
வயிறு  எரியும்போது
அடுப்பில்
நெருப்பு எரிவது எப்போது?

ஓட்டுப்போட காசுகொடுப்பதால்
எங்கள்
ஜனநாயத்திற்கே காசநோய்...
ஆமாம்... காசே நோய்...

மனிதனாக வாழாமல்
மனித உரிமையைப்பற்றி
எப்படி பேச முடியும்?
அதுவரை கொஞ்சம் பொறு...


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மனிதன் சுத்தமாவது எப்படி?


எங்கள் சுதந்திரத்திற்கு
பொன்விழா கொண்டாடிவிட்டோம்...
ஆனால்
நாங்கள் குடிதண்ணீருக்கே
திண்டாடிக்கொண்டு
இருக்கிறோம்.

கங்கையில் -
சாக்கடை சங்கமம்...
காவிரியும் காய்ந்த பிறகு
நாக்கு வறண்டாலும்
எங்கள் சுதந்திரத்திற்கு
பொன்விழா கொண்டாடிவிட்டோம்...

இந்த தேசம்-                                                        
மகாத்மாவையே
அப்புறப்படுத்திய பிறகு
மதுவிலக்கை மட்டும்
எப்படி அமல்படுத்தப்போகிறது?
ஓ... அண்ணலே...
அரசு அவமானப்பட்டாலும்
வரும் வருமானத்தை இழக்குமா?
இந்த இழப்பை யார் ஈடு செய்வது?
கேட்பது அரசங்கம்...
பதில் சொல்ல நீதான் வரவேண்டும்.

போதையில் இருப்பது...
வீதியில் விழுவது...
புகை பிடிப்பது...
எனது சுதந்திரம்
என உரிமை கொண்டாடும் பொழுது...
சுற்றுப்புறத்தாரின் சுதந்திரம்
பற்றி எரிகிறது.

காறை களங்கப்படுத்தும்
கயவர்களே...
உங்களுக்கு புற்று  பற்றும்
ஆனால்...
எங்களுக்கும் புற்று பற்ற வைப்பது
என்ன கொடுமை?

காற்றுகூட
அசுத்தமாவிட்ட பிறகு
அதை சுவாசிக்கும்
மனிதன் சுத்தமாவது எப்படி?          
                                                                                -மாறாத அன்புடன்,
                                                                                  மணவை ஜேம்ஸ்.