திங்கள், 6 ஏப்ரல், 2020

‘இதயங்கள் சங்கமம்‘ நாடகம் காணொலியில்...






திருச்சி, ஆர்.சி. மேனிலைப்பள்ளியில்  31.01.2009 அன்று 64-ஆவது ஆண்டு விழாவின் பொழுது இதயங்கள் சங்கமம்‘  என்ற உடல் உறுப்புகள் தானம் செய்வதின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த 20 நிமிட விழிப்புணர்வு  நாடகம்.  அதில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞராக நான் நடித்து இயக்கியுள்ளேன். 


கதை



மருத்துவரின் மகன் சென்ற பைக் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு ஏற்படுகிறது.  அவனின் உடல் உறுப்புகள் தானமாகத் தரப்படுகின்றன.
பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் புகுந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் பல மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
உடல் உறுப்புதானம் செய்ததை அறிந்து தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றோருக்கு அழைப்பு வரவே அவர்கள் செல்கின்றனர்;  தமிழக முதலமைச்சரால் கௌரவிக்கப்படுகின்றனர். 

அங்கு அவர்களது  மகனின் இதயத்தைத் தானமாகப் பெற்றவர் அயல்நாட்டுக்காரர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றனர்.   ஆனால் அந்த அயல்நாட்டுக்காரரின் மகன்தான் சமீபத்தில் நடந்த தீவரவாதிகளின் தாக்குதலில் ஈடுபட்டவன் என்று சொல்லி அவர் அழுது புலம்புகிறார். அவரின் மகள் ‘அகிம்சைவாதியா இருந்து காந்தி சாதித்ததைவிட… தீவிரவாதியா இருந்து எதைச் சாதிக்கப் போறீங்க?’ என்று கனத்த இதயத்தோடு கேட்கிறாள்.








































     நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க.,, 


‘இதயங்கள் சங்கமம்’ பகுதி 1.





  நாடகத்தைக் காணொலியில் காண கீழே ‘கிளிக்’ செய்க...

‘இதயங்கள் சங்கமம்’ பகுதி 2.








   




-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக