‘இயேசு’ மண்ணிலே மனிதனான்...!
அன்பையே விதைக்க வந்த
அருந்தவப் புதல்வன் இயேசு
தன்னையே தரவே இன்று
தரணியில் மழலை யாகி
புன்னகை இதழில் பூக்கப்
பூவிழி விடியல் பார்க்க
அன்னையின் மடியில் நெஞ்சம்
ஆளவே பிறந்தான் மண்ணில்!
மண்ணிலே பிறந்த பாலன்
மனிதனாய் வந்தே இங்கு
விண்ணிலே மீன்கள் தோன்ற
வியப்பிலே மூன்று மன்னர்
கண்ணிலே கவலை நீக்கிக்
களிப்பிலே சென்றே பார்க்க
வெண்மையாய்ப் பூத்துக் கண்ட
விழியெலாம் கொண்டான் வென்றான்.
குளிரிலே நடுங்கி மாட்டுக்
குடிலிலே கிடந்த கோமான்
தளிரிலே தாயின் மாதா
தயவிலே தந்தை சூசை
வளியிலே கலந்த மூச்சாய்
வாழ்விலே இன்பம் கூட்டி
ஒளிதர வந்தான் ஞாலம்
உய்யவே மனிதன் ஆனான்!
* மாலை முரசு ‘கிறிஸ்துமஸ் மலரில்
வெளியிடப்பட்ட கவிதை.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்
தொடர்புடைய பதிவுகள்
அருமை இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள் மணவையாரே...
பதிலளிநீக்குகிறிஸ்துமஸ் வாழ்த்துகள் ஜி. முதல் வருகைக்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
நீக்குஎனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவருகைக்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா.
தாமதமான கிறித்துமஸ் வாழ்த்துகள் மற்றும் வரும் புத்தாண்டு வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா.
நீக்குஇனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா.
நீக்குவாழ்த்துகள் அய்யா தொடர்க
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா.
நீக்கு