திங்கள், 25 டிசம்பர், 2017
சனி, 9 டிசம்பர், 2017
மயானத்தில் கேட்ட பாடல்
நண்பனின் மரணம்
அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்பன் கிருஷ்ணன் இறந்த செய்தி இன்று ( 8.12.2017) மாலை எனக்கு நண்பன் ஜான் கென்னடியின் அலைபேசியின் மூலம் தெரியவந்தது.
இறந்த நண்பன் கிருஷ்ணனைக் கடந்த சனிக்கிழமை அவனது மளிகைக்கடையில் அமர்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்; தற்பொழுது மிகவும் நன்றாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அவனின் இறப்புச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் வருத்தப்பட்டேன்.
திருச்சியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் எனது நண்பன் அருள் ஜேம்ஸ் பால்ராஜைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அவனுக்குத் தகவல் தெரியவில்லை.
பிறகு உடல்தகனம் நாளைக்குத்தானே இருக்கும் என்று விசாரித்தபோது, ‘இல்லை... இன்றே உடல்தகனம் செய்யப்படுகிறது’ என்பதை அறிந்து இருவரும் மாலை வாங்கிக்கொண்டு இறுதி மரியாதை செலுத்த செல்லலாம் என்று புறப்பட்டுச் செல்கின்றபொழுது... எதிரே அமரர்வண்டியில் அவனது உடல் எடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.