செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மரணம் – மார்ச்சுவரி – பாதித்த நாடகம்.



இதயங்கள் சங்கமம் 

                                     
                                      
                                                                                
 ஆசிரிய நண்பர் அவர்களின் மகன் வேலையின் நிமித்தமாக சேலம் சென்றிருந்த பொழுது  தந்தையிடம் சொல்லாமலே நண்பர்களோடு  சேர்ந்து இரு சக்கர வாகனங்களில்  ஏற்காடு சென்றிருக்கிறான்.  தினந்தோறும் தந்தையிடம் அலைபேசியில் பேசுபவன் அன்றிரவு எட்டு மணிக்குப் பேசியிருக்கிறான்.
 ‘‘ அப்பா நானும் நண்பர்களும் ஏற்காட்டிற்கு வந்தோம்.  நாங்கள்  இப்பொழுது புறப்படப் போகிறோம்.   அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டாம்... டவர் சரியாகக்  கிடைக்காது....கே.” எனத் தொடர்பைத் துண்டித்தான்.

ஏற்காட்டில்தான் அவன் பிறந்தான் என்பதால்தானோ என்னவோ அந்த இடத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அலாதிப்பிரியம்.

காலையில் ஆசிரிய நண்பர் பள்ளிக்கு வந்து விட்டார்.  

ஆசிரியரது அலைபேசி ஒலிக்கிறது.  

சார்... ஒங்களுக்குப் பையன் யாரும் இருக்காங்களா...?!

இன்சூரன்ஸ் கம்பனியிலிருந்து பாலிஸி போடுவதற்காகத் தொந்தரவு செய்கிறார்கள் என்று  போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரிய நண்பர்.

சிறிது நேரத்தில் மீண்டும் அலைபேசி ஒலிக்கிறது.

சார்... கொஞ்சம் சொல்றதைக் கேளுங்க... ஒங்க பையன் ஏதும் ஏற்காட்டிற்குச் சென்றிருந்தாரா...?”

ஆமாம்... சார்...ஆமாம்... என்ன சார்...?!”

அவருக்கு  ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு... ஒங்களுக்குத்தான் கடைசியா போன் பண்ணி பேசியிருக்காரு... அதில பேரு அப்பான்னு இருந்திச்சு... அதான்…

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பார்வையில்லாப் பாடகி!


 பார்வையில்லாப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி!

வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு’ என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
   


1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீதரன், விமலா இணையருக்கு ஒரே மகளாய்ப் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இவரது பெற்றோருக்குத் தங்கள் மகள் தீர்க்கவியலாப் பார்வைக் குறைபாடு பெற்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. மிகச்சிறுவயதிலேயே ஒலிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே இராகம் தாளம் பிறழாமல் பாடும் விஜயலட்சுமியின் திறனைக் கண்ட அவர் தந்தை எம். எஸ். அம்மா, ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம்  ஆகியோரின் செவ்வியல் ஒலிநாடாக்களைக் கேட்கும்படிச் செய்தார்.
சிறுவயதில் கிடைத்தவொரு வீணையில் பாட்டு வாசிக்கப் படித்தார் விஜயலட்சுமி. பின்னர் இவரது தந்தை ஒற்றைக் கம்பி வீணை ஒன்றை அமைத்தளித்தார். இதன் காரணமாக இவருக்கு ஒற்றக்கம்பி வீணை காயத்ரி என்ற பெயர் கிட்டியது.  குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே இந்த வீணைக்குக் காயத்ரிவீணை என்னும் பெயரை அளித்தவர்.



விஜயலட்சுமிக்கு பார்வை பறிபோனாலும் 'குயில் ' போன்ற குரலுடன்  எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.