ஆடையை இழந்தது விவசாயிகள் தேகம் அல்ல இந்திய தேசம்!
தேச பக்தர்களே
கண்களை மூடிக் கொள்ளுங்கள்
ஆடையை இழந்தது
விவசாயிகள் தேகம் அல்ல
இந்திய தேசம்!
ஆடை களைந்தான்
விவசாயி
அம்மணமாய் நிற்கிறது
அரசு!
தியாகம் செய்ய மிச்சம் இருப்பது
உயிர் மட்டுமே
அதையும்
எடுத்துக் கொண்டு
ஒளிரட்டும்
புதிய இந்தியா!
ஆடை அணிந்தான்
நாட்டின் தலைவன்
பத்து நிமிடம் பார்க்க
அம்மணமாய் நிற்கிறான்
விவசாயக் குடிமகன்!
வல்லரசு கனவை
கழுவேற்றிக் கொன்றது
உழவனின் நிர்வாணம்!
கேடுகெட்ட நாட்டிலே
மனிதனாய் பிறந்ததற்கு
மாடாய் பிறந்திருந்தால்
மதிப்பு இருந்திருக்கும்
குரல் கொடுக்க
கூட்டம் இருந்திருக்கும்
இனியென்ன-
உழவனின் துயர
சிதையில் எரியட்டும்
ஜனநாயக மானம்!
வானம் பார்த்து
பயிர் செய்தவன்
மானம் இழந்து போராடுவது
அவன் வயிற்றுக்காக மட்டுமல்ல
வேடிக்கை பார்க்கும்
நம் வயிறுக்காகவும்தான்!
(வாட்ஸ் அப்பில் வந்தது)
-நன்றி. முரசொலி. 13-04-2017.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வேதனை...
பதிலளிநீக்குவலைச்சித்தரின் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன் அய்யா.
நீக்குநன்றி.
இவ்வளவு பெரிய நாட்டில், போராடும் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக ,மற்ற மாநில விவசாயிகள் கொந்தளித்து வராதது ஏமாற்றம் அளிக்கிறது :(
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஜீ.
நீக்கு"ஆடை களைந்தான்
பதிலளிநீக்குவிவசாயி
அம்மணமாய் நிற்கிறது
அரசு!" என்பதை
உலகம் பார்த்தாலும்
பிரதமர் காணவில்லையே!
உயிரில்லாக் கல்லைக் கடவுளாகக் காண்கிறார்... உயிருள்ள மனிதனைக் கல்லாகக் காண்கிறார்... மோடி மஸ்தான் வேலை இதுதானே அய்யா...!
பதிலளிநீக்கு