புதிய உடன்படிக்கை
காட்சி-5
இடம்: கனகராஜ் வீடு
பாத்திரங்கள்: ஜான்சன், கனகராஜ், செல்வம், சேகர்.
(எல்லோரும் அமர்ந்திருக்க, ஜான்சன் மட்டும் நின்றுகொண்டு ஏதோ
சிந்தனையில் இருக்கிறான்)
கனகராஜ்: என்னடா ஜான்சன்... ஏன் வீட்டுக்கு வந்த்துல இருநது நானும்
பாக்கிறேன்... ரொம்ப டல்லா இருக்கியே...
செல்வம்: புது
மாப்பிளைன்னா சும்மாவா போச்சு... விடிய விடிய கண்ணு முழிச்சிருப்பாரு...
சேகர்:
அதான்... கண்ணு செவந்திருக்கா...?
ஆமாம்மா... ரொம்ப டயடாத்தான் இருக்கும்...
கனகராஜ்: ஓகோ... அப்படீங்கிறியா...?
சேகர்: ஆமாங்கிறேன்... நேத்தைக்குப் பாத்ததுக்கு
இன்னைக்கு இளச்சு போயிட்டான் பாரு...
ஜான்சன்:
டே...! கடுப்ப தூண்டாதிங்கடா... அவ அவன்... நொந்து
போயி இருக்கான்...
சேகர்: மச்சி... ரொம்ப வொரில்ல இருக்கான் போல
இருக்கு... ஏ மச்சி வீட்ல ஏதும் பிரச்சனையா...?
ஜான்சன்: டே...!
நீ சொன்ன மாதிரியே ... ஏடாகூடமா ஆயிடுச்சு...
கனகராஜ்: என்னடா ஆயிடுச்சு...
ஜான்சன்: அதை எப்புட்டி சொல்றது...?
செல்வம்: வாயிலதான்டா...
ஜான்சன்:இந்த நக்கல்தானே வேணாங்கிறது...
செல்வம்: ‘துன்பம் வரும் வேலையில சிரிங்கன்னு’ சொல்லி வச்சான்...
வள்ளுவனும் சரிங்க...(பாடுகிறான்)
கனகராஜ்: விவஸ்த
கெட்ட ஆளுடா... மச்சி! அவன் கெடக்கிறான்... என்னா நடந்திச்சின்னு நீ சொல்லு...
ஜான்சன்: குடிச்சிட்டு
போனேனா...? போயி பக்கத்துல நெருங்கிறதுக்குள்ள எப்படியோ கண்டு புடுச்சிட்டாள்...
செல்வம்: அதுக்குத்தான்
அப்பவே சொன்னே... கொஞ்சமா குடிடான்னு...
செல்வம்: நீ போதையில
மறந்திருப்பா...
கனகராஜ்: அப்புறம்
என்ன ஆச்சு...?
ஜான்சன்: அப்புறமென்ன
‘டோன்ட் டச்’ன்ட்டா...!
கனகராஜ்: நீ என்னடா
சொன்னாய்...?
ஜான்சன்: நா என்னடா சொல்றது...?
சேகர்: ஆமா... ஒ
வொய்ப் இங்கிலீஸ்லய்யா சொன்னாங்க...
ஜான்சன்: டே...! சீரியஸான மேட்டர்டா... ‘பஸ்ட் நைட்’லயே... இப்படி
ஆகிப் போச்சேன்னு சொல்றேன்... ஒங்க லைப்ல இப்படி நடந்திருந்தா... சிந்திச்சு
பாருங்கடா...
சேகர்: சிந்திச்சு
பாருடா...
செல்வம்: நீ
சிந்திச்சு பாருடா... (யோசிக்கிறான்)
கனகராஜ்: சும்மா
சிந்திச்சா... சிந்தனையே வரமாட்டேங்கிதே...
செலவம்: சிந்திச்சா... ஒரே
துக்கம்தான்... துக்கம் தாளலல்ல... கவலைய மறந்து துக்கத்தைக் கொண்டாடுவோம்... டே...! ஜான்சன்...
பிராந்தியடிப்போம்... பிரச்சனைய மறப்போம்...
சேகர்: டே... செல்வம்...! வீட்ல இதுனாலதான்
பிரச்சனையே...!
கனகராஜ்: சேகர்...
ஒனக்கு ஒரு பழமொழி தெரியுமா...? முள்ள முள்ளாலதான் எடுக்கனும்... தெரியுமா...?
செல்வம்: அட... இதக்குப் போயி கவலைப்பட்டுக்கிட்டு...
அந்தக் காலத்துல... கல்யாணம் ஆனதுக்கு பிறகும்... பத்து மாசமாக்கூட புருசனை
பக்கத்தில விடாதவங்க இருக்காங்க... இது மாதிரி கதைய நெறையா கேள்விப்பட்டு
இருக்கேன்... தெரியுமா...?
சேகர்: எப்பவும்... எதுக்கும் கவலைப்படக்
கூடாதுடா... என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு... தைரியமா... ஆம்பளை மாதிரி
இருடா...
செல்வம்: இப்பவே
பொண்டாட்டி பேச்சக் கேக்க ஆரம்பிச்சா... அவ்வளவுதான்...
கனகராஜ்: ஆம்பிளை
ஆயிரம் தப்பு செஞ்சாலும்... அட்சஸ் பண்ணிப்போற பொம்பளையா இருக்கனும்... இப்ப என்ன
எடுத்துக்கவே... நா என்ன குடிக்காமயா இருக்கேன்... இது நாள் வரை எ பொண்டாட்டி ஒரு
வார்த்தை கேட்டு இருப்பாளா...?
செல்வம்: அதானே... அண்ணி
தங்கமானவங்க... வாய் பேசமாட்டாங்களே...!
சேகர்: எனக்குக்கூட
ரொம்ப நாளா சந்தேகம்... ஊமையோன்னு...!
கனகராஜ்: டே...! சேகர்
இதானே வேணாங்கிறது... அப்படி ஒரு கட்டுப்பாடா வச்சிருக்கேன்...
சேகர்: ஓகோ... இதுதான் குடும்பக் கட்டுப்பாடோ...?
கனகராஜ்: அவளக் கூப்புடுறேன்... நேராக் கேளுங்கப்பா... ஏய்...
செங்கமலம்...
ஜான்சன்: நீ போட்ட சத்தம் எங்களுக்கே கேக்கல... நீ
சொல்றதுல்ல நம்பிக்கை இருக்குடா...
செல்வம்: நீங்க கூப்பிட்ட... உடனையே ஓடியாந்துட்டாங்க பாரு (கிண்டலாகச்
சிரிக்கிறான்)
கனகராஜ்: எ சத்தம் கேட்டிருக்காது... இல்லைன்னா ஓடியாந்திருப்பா தெரியுமுல்ல...
ஜான்சன்: சரி... வாங்க பாருக்கு போயி... பிராந்தி
அடிப்போம்...!
கனகராஜ்: இப்ப சொன்னியே இதுதான் சரி... வாங்க
சீக்கிரம் பாருக்குப் போவோம்... ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு...!’
(அனைவரும் புறப்படுகின்றனர்)
-தொடரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
குடி குடியை கெடுக்கும்
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தொடரைத் தொய்வின்றி எழுதுகின்றீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள முனைவர் அய்யா,
நீக்குதங்களின் ஊக்குவித்தலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மறுபடியும் பாருக்கா... ?
பதிலளிநீக்குத.ம.வ.போ.
அன்புள்ள ஜி,
நீக்குமீண்டும் முதலில் இருந்து... தங்களின் வாக்கிற்கும் வருகைக்கும் நன்றி.
குடிச்சவர் பாடு இப்படித் தான்
பதிலளிநீக்குசிறந்த பதிவு
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.