காட்சி-3
இடம்: ஹோட்டல்
பாத்திரங்கள்: ஜான்சன்,
நண்பர்கள் கனகராஜ், செல்வம், சேகர்.
(ஜான்சனின் வரவுக்காக
காத்திருக்கின்றனர். ஜான்சன் உள்ளே
வருகிறான்)
செல்வம்:
என்னடா... ஜான்சன் இவ்வளவு நேரமாவா எங்கள காக்க வைக்கிறது...?
ஜான்சன்: சாரிப்பா...
எ பொஷிசன்ல நீங்க இருந்தாத் தெரியும்... சரி... ஒங்களுக்கு என்ன டிரிங்ஸ் வேணுமோ
வாங்கிக்கங்க... நீங்க இன்னக்கி மட்டும் எது வேணுமுனாலும்... எவ்வளவு வேணுமுனாலும்
குடிக்கலாம்...
கனகராஜ்: டே! அப்போ உனக்கு...?
ஜான்சன்:
எனக்கா...? டே...!
இன்னக்கி எனக்கு பஸ்ட் நைட்... தெரியுமுல்ல...
கனகராஜ்:
அதுனாலதான் கேக்கிறேன்... பயமில்லாம போகணுமுல்ல...
ஜான்சன்: வொய்ப்...
கண்டு பிடிச்சிட்டான்னா...?
செல்வம்: வாடையடிக்காம வாய
மாத்திக்கலாம்டா... எதுக்கு பாக்கு... பாத்தாத்துக்கு ஏலக்காய்... சோம்பு...
கொய்யாக்காய் மிட்டாய் இருக்கு... நீ எதுக்கு கவலைப்படுறாய்...?
சேகர்: ஏம்ப்பா....
மச்சியப்போட்டு ரொம்ப கம்பல் பண்றீங்க... வீட்ல... ஏடாகூடமா ஆயிடப் போவுது...
லைட்டா... ’பீர்’ மட்டும் என்னாட்டம் குடிக்கட்டுமே...!
கனகராஜ்: டே!
சேகர்... ஒனக்கு கலரக் குடிச்சாலே போதை வந்திடும்... ஜான்சனைப் பத்தி நீ
தெரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்... அவனுக்கு ‘பீர்’ வாடையே ஆகாது... அவன் எப்பவுமே... ’ஹாட்’ டிரிங்ஸதான்...
செல்வம்: டே! நம்ம பேசிக்கிறத பாத்தா... இன்னைக்குத்தான்
குடிக்க ஆரம்பிக்கிற மாதிரில்ல இருக்கு... இத்தன நாளு குடிச்சிட்டு வீட்டுக்கு
போயிருக்கியே,... என்னைக்காவது தெரிஞ்சிருக்கா...? சொல்லுடா...?
ஜான்சன்: இல்ல...!
சேகர்: என்னைக்கும்
மாதிரியா இன்னக்கி... விளையாடாதிங்கடா...
கனகராஜ்: நீ
இல்லாம குடிக்கிறதா...? நெனச்சா மனசுக்க
ரொம்ப கஷ்டமா இருக்குடா...!
செல்வம்:
லைட்டா... கம்பெனி கீப்பப் பண்ணுடா...
ஜான்சன்: ம்...
ம்...
(யோசித்து) சரி... ஒங்க இஷ்டப்படியே குடிக்கிறேன்...
போதுமா...? எனக்கும் நீங்க குடிக்க... நா பாத்திக்கிட்டு இருக்க... மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு...!
கனகராஜ்: போதும்ப்பா...
சரி... ஒ அளவு எவ்வளவு...?
ஜான்சன்: எ
அளவா...? இன்னைக்கி எனக்கு ‘குவாட்டர்’ போதும்...
சேகர்: என்ன
குவாட்டரா...? அது அதிகம் மாதிரி
தெரியுது...
ஜான்சன்: ‘ஆஃப்’ அடிச்சாத்தான் எனக்கு லேசா போதை இருக்கிற மாதிரி
தெரியும்... தெரியுமா...?
கனகராஜ்:
அதானே... எவ்வளவு குடிச்சாலும்... குடிச்ச மாதிரியே தெரியாது... தெரியுமுல்ல...
அப்புடியே ஸ்டடியா இருப்பான்...
ஜான்சன்: அதானே...
நல்லா எடுத்துச் சொல்லுடா... சரி என்னனென்ன வேணுமோ... ஆர்டர்
பண்ணுங்க... அவுங்க அவுங்க... தனித்தனியா ஆர்டர்
சொல்லிக்கங்க... என்ஜாய்...! சர்வர்...
-தொடரும்...
-மாறாத அன்புடன்,
ஆகா
பதிலளிநீக்குதிருமண மாப்பிள்ளையே பார்ட்டியிலா
தொடர்கிறேன் ஐயா
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குதங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
தொடர்கிறேன் அய்யா!
பதிலளிநீக்குத ம 2
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குதாங்கள் தொடர்வதற்கும் வாக்களித்ததற்கும் மிக்க நன்றி.
எங்கே போய் முடியப் போவுதோ ,இந்த என்ஜாய் :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குஎதுவரை போகுமோ... அதுவரை போகலாம்... புதுவகை ரசனையோடு பார்க்கலாம்...!
ஓ கல்யாண தினத்தன்றே குடி....என்ன ஆகப் போதுகு பார்க்கச் செல்கின்றோம்
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகுடிமகனே...பெருங்குடிமகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு...கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...!
நன்றி.