புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின்
126-வது பிறந்தநாள்!
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார்மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் போற்றப்படுகிறார்.
தமிழாசிரியராக 1909 - இல் பணியில் சேர்ந்தார். 37 ஆண்டுகள் பணியாற்றினார்.
திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி அதனால் கிடைத்த புகழைக் கொண்டு கவிஞராக ஆனவர் என்று பாரதிதாசனை இன்றைய தலைமுறையினர் தவறாகப் புரிந்த கொள்ளக்கூடாது. இருபதுக்கும் அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுத்தார். ஏற்கனவே தான் கவிதையாக எழுதிய பாடல்களுக்கு இசை வடிவம் தரவும் இசைந்தார்.
தமிழ்
பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
பாடல் இயற்றியவர்: பாரதிதாசன்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
பாடல் இயற்றியவர்: பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
*****************************************
உழைக்கும் தோழர்களுக்காக...!
நீங்களே சொல்லுங்கள்
"நீங்களே சொல்லுங்கள்" என்ற தலைப்பில் பாரதிதாசனால் இயற்றப்பட்ட பாடல், ஊதா வண்ணத்தில் உள்ள வரிகள் திரையிசைப் பாடலில் இடம்பெற்றன......
சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே -- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ! உங்கள் வேரினிலே....
நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்னிலமே! -- உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே -- எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம்வகுத்தார் -- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.
தந்த அக் காலத்திலே -- எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம்வகுத்தார் -- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! -- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? -- நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்ததுமெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் -- எங்கள்
சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பில்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! -- உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
ஆதி அந்தம் சொல்லவோ? -- நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்ததுமெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் -- எங்கள்
சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பில்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! -- உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? -- பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ -- இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை -- சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.
சாட்சியும் நீயன்றோ? -- பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ -- இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை -- சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
*****************************************
இல்லறம் இனிமையாக ...!
பாரதிதாசன் ஏற்கனவே இயற்றியிருந்த ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ’ என்ற இந்தப் பாடலை ‘ஓர் இரவு’ படத்தில் இடம்பெறச் செய்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று அண்ணாத்துரை பரிந்துரைக்க ‘ஓர் இரவு’ படத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று ஆயிரம் ரூபாய் பணத்தைப் பாரதிதாசனிடம் ஊதியமாகக் கொடுத்தார் ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியார்.
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...
புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
******************************************
தமிழனின் வாழ்வு!
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
*****************************************
‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா’
பாரதிதாசனின் புரட்சிப் பாடல் 2006-இல் விஷால் நடிப்பில் வித்யாசாகர் இசையில் ‘சிவப்பதிகாரம்’
படத்தில் இடம்பெற்றது.
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
பாடலைக் கேட்க ‘கிளிக்’ செய்க!
*****************************************
மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள்! வாழ்த்துகள்!! சங்கே முழங்குவோம் !!!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா பாடலின் இசை அமைப்பின் போது கவிஞரும் இருந்தாராம் .மாட்டாயா என்ற வரிகளை அவர் சேர்த்துப் பட வேண்டுமென்று சொன்னாராம் !
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குபாரதிதாசன் தான் எழுதிய பாடல்களில் இசையமைப்பாளர்கள் திருத்தம் செய்ய ஒருபோதும் ஏற்றுக் கொண்டதே இல்லையாம்.
தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஆஹா! எல்லாமே அருமையான தேர்வு. ”சங்கே முழங்கு! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
பதிலளிநீக்குமங்காத தமிழென்று சங்கே முழங்கு” - அன்றைக்கு இருந்த உணர்வு என்றும் மாறாது எனும் வரிகள். நண்பர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
பாவலர் பாரதிதாசன் அவர்களை நினைவூட்ட, அருமையான பதிவைப் பகிர்ந்தீர்கள்.
பதிலளிநீக்குபாராட்டுகள்!
தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. எனது பதிவுகளை மின்நூல் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
நன்றி.
அருமை . நன்றி
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
பாரதிதாசனைப் பற்றிய பல்துறைச் செய்திகளைக் கொண்ட அருமையான பதிவு. மறக்கமுடியாத பாடல்கள். நெஞ்சில் நிற்கும் கருத்துகள். நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள முனைவர் அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
பாரதிதாசனைப் போற்றுவோம்
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா
நன்றி
தம +1
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
பாரதிதாசனைப்பற்றி நிறைய விடயங்கள் அறியத்தந்தீர் நன்றி மணவையாரே
பதிலளிநீக்குத.ம.வ.போ
அன்புள்ள ஜி,
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.