நீங்க நினைக்காத நெஞ்சம்...! (10)
சசிரேகா கண்டிப்பாக வீட்டிலிருந்து புறப்பட்டு இன்று இரவு யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தமிழினியன் இருந்தான். ரோஸியிடம் தன்னுடைய அம்மாவைப் பார்த்துக் கொள்ளும்படியும், தன்னிடம் அம்மா கொடுத்த ரூபாயில் ஆயிரம் மீதி இருப்பதை எடுத்துக்கொண்டு வெளியூர் சென்று சசியுடன் பதிவுத்திருமணம் செய்து, ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வருவதாகவும்; அம்மா கேட்டால் படிப்புச் சம்மந்தமாக வெளியே சென்றிருப்பதாகவும், நான் வந்து அம்மாவிடம் விபரமாகச் சொல்லிக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தான்.
“சசி... ஒரு வேளை வரவில்லை என்றால்...?” கேட்டாள் ரோஸி.
“நிச்சயம் என் சசி வருவாள்...!” நம்பிக்கை தமிழினியனின் குரலில் தெரிந்தது.
“சப்போஸ் வரலைன்னா...?” ரோஸி மீண்டும் கேட்டாள்.
“அந்தப் பேச்சுக்கே இடமில்லை ... எதையும் பாஸிட்டிவாகவே திங்க் பண்ணுவோம்...!”
“நெகட்டிவ்வா நடந்தா... அதையும் யோசிக்கணுமுல்ல...!”
“நீங்க சொல்றது வாஸ்தவம்தான்... ஆனா... அப்படி நடக்காது... நிச்சயம் சசி வருவாள்...!”
“நல்லதே நடக்கும்... நம்புவோம்...! அம்மா நல்லாத் தூங்குறாங்க...மணி பத்தத் தாண்டுது... நைட்ல ...சூதானம்... ” என்று சொல்லித் தன் ரூமிற்குள் சென்று பத்து நூறு ரூபாய் நோட்டுக்களைச் சேர்த்து ஆயிரம் ரூபாயைத் தமிழினியனிடம் ரோஸி கொடுத்தாள்.
“என்ன இது...?” ஆச்சர்த்துடன் கேட்டான்.
“என்னிடம் இருந்தது இவ்வளவுதான்... இதைச் செலவுக்கு வச்சுக்கங்க...!” ரோஸி சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டான். கைப்பையில் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ரேசன் கார்டையும் எடுத்துக் கொண்டு, அம்மாவிற்கு மாத்திரையைக் கொடுக்க மறக்க வேண்டாம் என்று கூறிவிட்டு ரோஸியிடம் விடைபெற்று, வீட்டைவிட்டு வெளியேறினான்.
சசிரேகா மணியைப் பார்த்தாள்; பதினொன்றைத் தாண்டி ‘டக்...டக்...டக்...’ எனச் சத்தத்துடன் நிமிடமுள் நகந்து கொண்டிருக்க அவளது மனது ‘திக்...திக்...திக்...’ என்று இருந்தது.
கட்டியிருந்த தாவணியுடன் போட்டிருந்த நகைகளுடன் வேறு எதையும் எடுக்காமல் தன் மணிபர்ஸ்ஸைத் திறந்து பார்த்தாள் அதில் அறுநூறு ரூபாய் இருந்தது; அதை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
கட்டியிருந்த தாவணியுடன் போட்டிருந்த நகைகளுடன் வேறு எதையும் எடுக்காமல் தன் மணிபர்ஸ்ஸைத் திறந்து பார்த்தாள் அதில் அறுநூறு ரூபாய் இருந்தது; அதை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
‘நைட் லேம்ப்’ லேசான வெளிச்சத்தைக் காட்டி எரிந்து கொண்டிருந்தது. அப்பாவின் அரவம் தெரியவில்லை; நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும். வேலைக்காரி அலமேலு வெளியே அவள் அறையில் தூங்கிக் கொண்டிருப்பாள். சசிரேகா காலடிச் சப்தம் கேட்டுவிடக்கூடாது என்று மெதுவாகக் காலைத்தூக்கி வைத்து மெயின் கதவருகே வந்தாள்:
கதவின் உள்தாழ்பாளைச் சத்தம் கேட்காமல் திறக்க வேண்டும் என நினைத்து மெதுவாகத் திறக்க முனைந்தாள்; தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்தது. சசிரேகா திடுக்கிட்டு, கதவை மெதுவாகத் திறக்க இழுத்தாள்; கதவை இழுக்க முடியவில்லை. அவளுக்குப் பதட்டம் அதிகரிக்க இதயம் வேகமாகப் படபடவெனத் துடித்தது; கதவை வேகமாக இழுத்தாள், கதவு திறக்கவில்லை. சசிரேகா தன் பலம்கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தாள்; கதவைத் திறக்க முடியவில்லை. லைட்டைப் போட்டால் அப்பா விழித்துக் கொள்வாரே என்று நினைத்து, மெதுவாக அப்பாவின் அறைக்குச் சென்று அவர் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறாரா என்று பார்க்க மெதுவாகச் சென்று பார்த்தாள்; அப்பாவைக் காணவில்லை. பாத்ரூமைப் பார்த்தாள்; பாத்ரூம் திறந்து கிடந்தது. சசிரேகா உடனே பதட்டத்துடன் ‘லைட்’டைப் போட்டாள். வீடு வெளிச்சமானது; வாழ்க்கை இருண்டது போலானது. மீண்டும் கதவைத்

திறந்து பார்த்தாள். கதவு வெளியில் பூட்டப்பட்டு இருந்தது அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது. வேகமாகத் தன் அறைக்குச் சென்று தலையணைக்கு அடியில் மறைத்து வைத்த அந்தக் கடிதத்தைத் எடுக்கத் தலையணையைத் தூக்கினாள்; கடிதத்தைக் காணவில்லை. சசிரேகாவிற்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது; அப்படியே மயங்கிக் கட்டிலில் விழுந்தாள்.
தமிழினியன் பேருந்து நிலையத்தில் நின்று இருந்தான்; மணியைப் பார்த்தான் பன்னிரண்டரையைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. சசிரேகாவின் வரவுக்காகக் காத்திருந்தான்.
தமிழினியன் அருகில் ஒருவன் வந்தான், “சார்... நீங்க தமிழினியன்தானே...? சசிரேகா உங்களுக்காக வெளியில கார்ல காத்திருக்காங்க... சீக்கிரமா உங்களக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க...!”
-என்று கூறிக் கடிதத்தை விரித்துக் காட்டினான். அது அவன் எழுதிய கடிதம் என்பதைப் பார்த்ததும், “தேங்க்யூ சார்... தேங்க்யூ” என்று சொல்லி அவனுடன் புறப்பட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான்.
தமிழினியன் ‘பியட்’ டாக்ஸியின் அருகே வந்தவுடன் கதவு திறந்தது; உள்ளுக்குள் இழுத்து அமர்த்தியவுடன் அழைத்து வந்தவனும் அமர்ந்தவுடனே கார் புறப்பட்டது. தமிழினியனின் வாய்க்குள் துணி வைத்து அடைத்து அவனின் கைகள் பின்புறம் கட்டப்பட்டது. காரின் முன் இருக்கையில் சசிரேகாவின் அப்பா ரெங்கராஜ் அமர்ந்திருந்தார்.

“ஏண்டா... நாயே... என்ன தைரியம் இருந்தால்... எம் பொண்ணக் கூட்டிட்டு ஓடி கல்யாணம் கட்டிக்கணுமுன்னு நெனச்சிருப்ப...அதுவும் ஜாதிவிட்டு ஜாதி... உஞ்சாதி என்ன? எ ஜாதி என்ன...? கீழ் ஜாதிப் பயலே... ஒனக்கு மேல் ஜாதிப் பொண்ணு கேக்குதோ...? இன்னும் நாளு நாள்ல எ பொண்ணுக்குக் கல்யாணம்டா... அதுல மண்ண வாரிப்போடப் பாத்திட்டியோ... படுபாவிப்பயலே... அயோக்கியப் பயலே... நல்லவேளை அதுக்கு முன்னாடியே ஓ குட்டு வெளுத்துப் போச்சு... இல்லேண்ணா என்னோட குடும்ப மானம் சந்தி சிரிச்சிருக்கும்... எல்லாரு முன்னாடியும் தலைகுனிஞ்சு நிக்க வச்சிருப்பியேடா... என்னோட கௌரவம்... மதிப்பு... மரியாதை எல்லாம் செத்த நேரத்தில பாழாப் போயிருக்கும்... டே... ஒன்ன சும்மா விட மாட்டேன்டா... சும்மா விடமாட்டேன்... ” கோபம் கொப்பளிக்க வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டிக் கொண்டே இருக்கக் கார் சென்று கொண்டே இருக்க தமிழினியன் நையப் புடைக்கப்பட்டான்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கார் ஓடி ஒரு பங்க்ளாவிற்குள் நின்றது; இரவு என்பதால் தமிழினியனால் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை யூகிக்க முடியவில்லை; காரிலிருந்து கீழே இறக்கப்பட்ட தமிழினியன ஓர் அறைக்குள் வைத்து இரண்டு பேரும் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தனர்.
“என்ன கத்து கத்தினாலும் இந்த இடத்திற்கு யாரும் வரமாட்டாங்க.... ஒனக்கு அம்புட்டுக் கொழுப்பா...? ம்...ம்... ஏண்டா நிறுத்திட்டீங்க... போடுங்கடா...” என்று ரெங்கராஜ் கோபத்தில் கத்தினார்.
தமிழினியனைச் சகட்டுமேனிக்குத் தாக்கினர்; வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.
“என்ன விட்டிடுங்க... என்ன விட்டிடுங்க...என்னால அடிதாங்க முடியல...” தமிழினியன் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினான்.
கல்யாணம் முடியிற வரைக்கும் இவன் இங்கேயே கிடக்கட்டும்... இந்த ரூம்ல வைச்சு பூட்டுங்க... ரெண்டு பேரும் இங்கேயே இருந்து இவனப் பாத்துக்கங்க... இப்படியே இவன் இருக்கட்டும்... கவனமாக இருக்கனும்... நா கிளம்புறேன்...!” என்று கூறிவிட்டு நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை அவர்களில் ஒருவன் கையில் தூக்கி எறிந்து விட்டு... ரெங்கராஜ் காரில் ஏறினார்.
-வ(ள)ரும்...
படிக்க ‘கிளிக்’ செய்க
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (2)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (3)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (4)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (5)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (7)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (8)
நீங்க நினைக்காத நெஞ்சம்...! (9)
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

எங்கள் மனதிலும் டிக் டிக் டிக் டிக் என சசிரேகாவின் நிலை என்னாகுமோ என்கிற படபடப்புக் கடிகாரம் ஓடுகிறது ஐயா.
பதிலளிநீக்குதொடர்ச்சிக்காய்க் காத்திருக்கிறேன்.
நன்றி.
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் காத்திருப்பிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அடுத்து நடக்கப் போவது என்ன ?ஆவலோடு எதிர்ப் பார்க்க வைத்து விட்டீர்கள் :)
பதிலளிநீக்குஅன்புள்ள ஜீ,
நீக்குதங்களின் கருத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் வாக்கிற்கும் நன்றி கலந்த வந்தனம்.
எதிர் பார்த்ததே அடுத்தது என்ன ? என்ற ஆவலில் நானும்....
பதிலளிநீக்குத.ம.வ.போ.
அன்புள்ள ஜி,
நீக்குதாங்கள் எதிர்பார்த்தபடி நடந்து விட்டது. தங்களின் வாக்கு பலிக்கும் படி செய்தால் சரி...!
நன்றி.
டிக் டிக் டிக்
பதிலளிநீக்குதிக் திக் திக்
தொடர்கிறேன் ஐயா
தம+1
அன்புள்ள கரந்தையாரே!
நீக்குடிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்
தாங்கள் தொடர்வதற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அற்புதமான தொடர் தங்களின் பக்கம் வருவது நான் குறைவு ஐயா.. நிச்சயம் இனி வருகிறேன் ஐயா.
தங்களின் தொடரை படித்த வண்ணம் இருக்கிறேன் .. மிகுதியை தொடருங்கள் காத்திருக்கேன். த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள அய்யா,
நீக்குவணக்கம். தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடரைத் தொடர்வதற்கும் வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அடுத்து...? ஆவலோடு...
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தரே!
நீக்குதங்களின் வருகைக்கும் ஆவலோடு தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
சினிமா போலவே செல்கின்றது...சினிமாவில் இந்த ஹீரோ எப்படியேனும் தப்பி ஹீரோயினை, வில்லன்களுடன் சண்டையிட்டு அடைவான்..அப்படித்தானோ...அடுத்து என்ன காத்திருக்கின்றோம்...
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் கருத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றி.
தொடர்கிறேன்! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதாங்கள் தொடர்வதற்கு மிக்க நன்றி. தங்களது கணினி சீரடைந்தது மகிழ்ச்சி.
வரத் தாமதாகிவிட்டது. பொறுத்துக்கொள்க. தொடர்ந்து வருகிறேன்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்கள் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.
ம்ம்ம்ம்ம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும்....
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமையான தொடர்
பதிலளிநீக்குதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.