வெள்ளி, 20 நவம்பர், 2015

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)

நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)



   சிரேகாவின் அறையின் கதவைத் தட்டினாள் வேலைக்காரி அலமேலு.  கதவு திறக்கப்படவில்லை.  மீண்டும் வேகமாகத் தட்டினாள்.  சிறிது நேரத்தில் சசிரேகா கதவைத் திறந்துவிட்டு,  உடனே கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.

   “அம்மா... டீ...ம்மா...” என்று சொல்லி அருகில் வைத்துவிட்டுச் சென்றாள்.
 சசிரேகாவிற்கு நினைவு தெரிந்ததிலிருந்தே வேலைககாரியாக 
 அலமேலு வேலைக்குச் சேர்ந்தவள்; தனிமரமான  இவள், இன்று அம்பது வயதைத் தாண்டியும் குடும்பத்தில் ஒருத்தி போலவே வீட்டிலேயே இருந்து, வேலைகளைச்  செய்து காலத்தைக் கழிக்கிறாள்.

   ரெங்கராஜ் மருத்துவ விடுப்பு   போட்டுவிட்டு  வீட்டிலேயே இருந்தார்.  சசிரேகாவைக் கல்லூரி செல்ல அனுமதிக்காமல் வீட்டுக்காவலில் வைத்து, வேலைக்காரி அலமேலு அம்மாளிடம்  மகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.


   சமையல் செய்து முடித்துச்  சசிரேகாவைச் சாப்பிட அழைக்க அவளின் அறைக்குச் சென்ற அலமேலு,  வைத்த டீ வைத்தபடியே இருந்ததைப் பார்த்தாள்.

   “என்னம்மா... டீ...குடிக்கலையா?  டிபன் ரெடியாயிடுச்சும்மா... எழுந்திரிங்கம்மா...” என்று சசியைக்  கையைப் பிடித்துத் தூக்கினாள்; அடுத்த நொடியே திடுக்கிட்டவள், “ என்னம்மா... உடம்பு நெருப்பாக் கொதிக்கிது...அய்யா... அய்யா... சின்னம்மா உடம்பு நெருப்பா சுடுதுயா...” எனறு சத்தமாகக் கத்தினாள்.  அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு வேகமாக அறைக்குள் வந்தார் ரெங்கராஜ்.  சசியைத் தொட்டுப் பார்த்தார்;  காய்ச்சல் அதிகமாகத்தான் அடித்தது.  சசியின் தலையைப்  பிடித்துத்  தூக்க முனைந்தவரின்  கை தலையணையில் பட்டது.  தலையணை முழுதும் ஈரமாக நனைந்திருந்ததை அவரின் கை உணர்த்தியது;   விடியவிடிய அழுதுகொண்டே இருந்திருக்கிறாள் என்பதை அவரின் உள்ளம் உணர்ந்தது.

   தனது காரில் சசியை அமரவைத்துத்   தனது கம்பெனியின் மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம் காண்பித்தார்.  பரிசோதித்த டாக்டர்,  “பீவர்...ஒன் நாட் பைவ்  இருக்கு... ஊசி போடுறேன்... மாத்திரை தாரேன்... ” என்று ஊசி போட்டார்.

   “டாக்டர்... இவ... நைட்டெல்லாம் தூங்கல டாக்டர்... நல்லாத்  தூங்கிற மாதிரி மாத்திரை கொடுங்க...டாக்டர்...”

   “எவ்வளவு நாளாத்  தூங்கல...?”

   “பேமிலில கொஞ்சம்  பெர்சனல் பிராபளம்... அந்த மன அழுத்தத்தில இருக்கிறாள்... மனசப் போட்டு அலட்டிக்காம நிம்மதியாத்  தூங்குறதுக்கு மாத்திரை கொடுங்க டாக்டர்”

   “சரி... டேபுலட்  தாரேன்... அப்படியும் தூக்கம் சரியா வரலைன்னா...     சைக்காரிஸ்ட்ட பார்க்கலாம்.. .இப்போதைக்கு நீங்க  வீட்டுக்குப் போனதும் பொண்ணு  தலையில ஈரத்துணிய வைங்க... பீவர் குறையும்”  என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

   சசிரேகாவைக்  காரின் பின் சீட்டில் படுக்க வைத்து வீட்டிற்கு வந்ததும் அவளை வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்து மாத்திரையைக் கொடுத்து, அலமேலுவைத்  தலையில் ஈரத்துணியை வைத்துப்  பிடித்துக் கொள்ளச்  சொன்னார்.  சில மணி நேரத்தில் சசிரேகா நன்றாக உறங்கிப்போனாள்.


   இந்தக் காதல் பறவை வீட்டுச் சிறைக்குள் சிக்கித் தவித்தது.  சர்வகாலமும் அப்பா வீட்டிலேயே இருந்தார்.  அடிக்கடி தொலைபேசியில் அமெரிக்காவுக்கு டிரங்கால் புக் பண்ணி பேசிக் கொண்டே இருந்தார்.  சசி என்னென்ன கேட்கிறாளோ அதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும்படி அலமேலு பணிக்கப் பட்டிருந்தாள்.

   ரெங்கராஜ் வீட்டில்   எல்லா நேரமும்‘சாலிடர்’  கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப்  பெட்டிமுன் அமர்ந்து தூர்தர்ஷனில் ஏதாவது பார்த்துக் கொண்டு இருந்தார்.

   சசிரேகாவிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது.


   வீட்டிற்கு வெளியே வாடகை  டாக்சி வந்து நின்றது.  காரிலிருந்து அமெரிக்க மாப்பிள்ளை  கல்யாணராமன் இறங்க,  டிக்கியைதைத் திறந்து லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.



   “வாங்க மாப்பிள்ளை... வாங்க...வாங்க... பிரயாணமெல்லாம் சௌகரியமா அமைஞ்சதா...?” என்று வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டே கேட்டார்.

   “ஓ... நன்றாக  அமைஞ்சிச்சு... என்ன மாமா இளைச்சுப் போயிட்டிங்க...”

   “வயசாகுதுள்ள... சுகர் வேற சேர்ந்துக்கிடுச்சு...வா... உள்ளே போயி சாவுகாசமா பேசலாம்” என்று  பெரிய பெட்டிய எடுத்துக் கொண்டு தூக்கமுடியாமல்  தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் செல்ல இரண்டு சூட்கேஸ்களையும் கல்யானராமன் எடுத்துக் கொண்டு விட்டிற்குள் நுழைந்தான்.

   “என்ன மாப்ளே இவ்வளவு பெரிசா இருக்கு...?”

   “சோனி  இருவத்தஞ்சு இஞ்ச் கலர் டி.வி. மாமா... உங்களுக்காகத்தான்... கலர்ல்ல பாத்து ஜாலி என்ஜாய் பண்ணுங்க...”  சொல்லிக் கொண்டே கல்யாணராமன் சிரித்தான்.

   “போங்க மாப்ளே நா இப்பத்தான் சின்னப்  புள்ளயாக்கும்...?”

   “ஆமா... ஒங்க புள்ளய... அதான்  எ சசிய எங்க காணாம்... வெளியில போயிருக்கா...?”

   “இல்ல... மாப்பிள... உள்ளதான் இருக்கு... உடம்பு கொஞ்சம் சரியில்ல...”

   “என்ன மாமா... என்னா செய்யுது...?”

   “இல்லயில்ல...  பெரிசா ஒன்னும் இல்ல... ரெஸ்ட் எடுத்தாச்  சரியாயிடும்...”

   “ஓ...சரி...சரி... நா கூடப்  பயந்தே போயிட்டேன்...”   என்று சொல்லிக் கொண்டே சசியின் அறைக்குள் நுழைந்தான்.  உள்ளே இருந்த அலமேலு அம்மா தூங்கிக்கொண்டிருந்த சசிரேகாவை  எழுப்பிக் கொண்டே,  “வாங்க அய்யா...வாங்க... நல்லா இருக்கீங்களா...?  அம்மா யாரு வந்திருக்காங்கன்னு பாருங்கங்கம்மா...” உசுப்பிவிட்டதும்  சசிரேகா கண்ணைத் திறந்து  பார்த்தாள்.

   கல்யாணராமனைப்  பார்த்ததும்  சசிரேகா திடுக்கிட்டு எழுந்தாள்.
“வாங்க மாமா... எப்போ வந்திங்க...?

   “ஜஸ்ட் நௌ... வந்தவுடனே உன்னப் பார்க்க உள்ள வந்து நிக்கிறேன்... என்ன... உடம்பு  சரியில்லைன்னு மாமா சொன்னா..?”

   “உடம்பு சரியில்லைன்னு மாமா சொன்னார்?

   “ஒன்னுமில்ல மாமா...” சொல்லிக் கொண்டே எழுந்து நின்று கலைந்து கிடந்த கூந்தலை  அள்ளி முடிந்தாள்.  கல்யாணராமன் தன்  பேண்ட் பாக்கட்டில் வைத்திருந்த அந்தத் தங்கச் செயினைச் சசியின் கழுத்தில் போட்டு விட்டான்:  அவள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

   “என்ன மாமா இது...?”  சசிரேகா  தங்கச் செயினைக் கழட்ட முற்பட்டாள்.

   “சசி... கழட்டாதே... ஒனக்காக மாமா ஆசையா...  பாரின்ல இருந்து வாங்கிட்டு வந்தது... நல்லாயிருக்கா... கண்ணாடியப் பாத்துச்சொல்லு...”  என்று அவளின் கைபிடித்து இழுத்துக் கொண்டுபோய்க்  கண்ணாடிமுன் நிறுத்தினான்;   அப்படியே பொம்மைபோல் நின்றாள்.

   “சின்ன வயசில எனக்கு ஜவ் மிட்டாயில வாட்சு வாங்கி  என்னோட கையில  கட்டிவிடுவியே...சசி ஒனக்கு ஞாபகம் இருக்கா...  அந்தக்  கடன்
 இப்ப தீர்ந்து போச்சு சரியா...?   கண்ணக் கட்டிக்கிட்டுக் கண்ணாமூச்சி  விளையாட்டு விளையாடுறப்ப... ஒருத்தர ஒருத்தர் கட்டிப்பிடிச்சு விளையாடுவமுல்ல... மறக்காம அதெல்லாம்  எனக்கு ஞாபகம் இருக்கு...!  என்ன சசி நா  பேசிக்கிட்டே இருக்கேன்...  நீ  ஒன்னும் பேசாமலே இருக்கா...?  -என்று  சசியைத் திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான்.

   சசியின் கண்கள் கலங்கிக்  கண்கள் குளமாகி இருந்தது.

   “சசி... என்னாச்சு... ஏ கண்ணு...  கலங்கி இருக்கு...?”

   “மாமா...ஒங்க வீட்டுக்குப்  போகமா நேர இங்க வந்திங்களா...?”

   “ஆமா... பேச்ச மாத்தாமா... நா கேட்டதுக்குப்  பதில சொல்லு...?”

   “மொதல்ல வீட்டுக்குப்  போயிட்டு வாங்க...”

   “வீட்டுக்குப் போறதெல்லாம் இருக்கட்டும்... மொதல்ல சொல்லு...”

   “அப்பா சொல்லியிருப்பாருல்ல...!”

   “ஆமாம்... அவருக்கு அடிக்கடி ஒடம்பு சரியில்லாமப்  போயிடுது... சீக்கிரமே ஒங்க அம்மா ஆசைப்பட்ட மாதரி...நானும் ஆசைப்பட்ட மாதரி...உடனே கல்யாணத்த வச்சிடமுன்னு சொல்லிட்டாரு சசி... அப்பா சொன்னதுக்காக... அம்மா சொன்னதுக்காகன்னு இல்ல... சின்ன வயசில இருந்தே  நா ஒன்ன உயிருக்குரியா நேசிக்கிறேன்ல்ல...”

   “நானும் உயிருக்குயிரா நேசிக்கிறேன்...”

   “ரொம்ம சந்தோசம்... நா வீட்டுக்குப் போயிட்டு வாரேன் சசி...”

   “கொஞ்ச இருங்க மாமா... நான் உயிருக்குயிரா நேசிக்கிறேன் சொன்னது...’ சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே உள்ளே நுழைந்த ரெங்கராஜ்,

   “மாப்ளே... ஒங்க அம்மாட்ட இருந்து போன்... வீட்டுக்கு வரச் சொல்றாங்க... அப்பறம் பேசுக்குவீங்க... கிணத்துத் தண்ணிய ஆத்துத் தண்ணியா கொண்டிட்டுப் போகப் போகுது... லைன்ல இருக்காங்க...”  ரெங்கராஜ்  அழைக்க கல்யாணராமன்  வெளியில் சென்றான்.

                                                                                                                         -வ(ள)ரும்...

படிக்க  ‘கிளிக்’ செய்க


நீங்க நினைக்காத நெஞ்சம்...! (1)
-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

























18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் ஐயா.

    முக்கோணக் காதல் கதையாகச் செல்லும் போலுள்ளதே.....!


    தொடர்ச்சியை அறிய ஆவலாக உள்ளேன்.

    தமிழ் மணப் பட்டையைக் காணோமே?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      வணக்கம். தங்களின் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி. தமிழ் மணப் பட்டை தற்பொழுது தெரிகிறது; ஆனால் தமிழ் மணம் பட்டை காணாமலும் ஓட்டுப் போடும் போது மிகுந்த காலம் ஆகிறது என்பதும் ஏன் என்று தெரியவில்லை.

      நன்றி.

      நீக்கு
    2. ஆம் எல்லோருக்கும் இதே பிரச்சனைதான் நண்பரே. admin@thamzihmanam.com ற்கு மின் அஞ்சல் அனுப்பச் சொல்லி டிடி சொல்லியிருக்கிறார்....

      நீக்கு
    3. அன்புள்ள அய்யா,

      உடனடியாக மேற்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பி விட்டேன்.

      வணக்கம். எனது தளத்தில தமிழ்மணம் ஓட்டுப் பட்டை தெரிவதற்கும் ஓட்டுப்போடுவதற்கும் சில நேரங்களில் தெரியாமல் இருக்கிறது; இல்லையெனில் நீண்ட நேரம் ஆகிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்குத் தெரியப்படுத்துகிறேன்.

      தயவுசெய்து உடனடியாக இதை சரிசெய்ய ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றி.

      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit@gmail.com

      நீக்கு
  3. தொடர்கிறேன் மணவையாரே..
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் தொடர் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஒருவேளை அந்த முறைப்பையன் சசிக்கு உதவுவானோ....ம்ம்ம் காத்திருக்கின்றோம்...சஸ்பென்சை அறிய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் மேலான கருத்திற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல தொடரோட்டமாக போகிறது. தொடர்கிறேன் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தொடர்கிறேன் அய்யா...

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வலைச்சித்தரே!

      அய்யா, நான் நேற்றைக்கே தமிழ்மணத்திற்கு மின் அஞ்சல் செய்துவிட்டேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

      தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சஸ்பென்ஸ் தொடருகிறது
    நானும் தொடர்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள கரந்தையாரே!

    தாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் அய்யா ,காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      காத்திருந்து... காத்திருந்து காலம் போக விடாமல் இதோ உங்களுக்காக!

      நீக்கு