வியாழன், 24 செப்டம்பர், 2015

இளைய சமூகத்திற்கு நம்பிக்கை


கணினிப் படை வருக!

                             


உச்ச  மலைவிலகி  ஓடு  சிறுபரலாய்
   உள்ள  ஒளியணைந்த  ஓட்டை  இருட்குடமாய்
அச்சப்  புழுவதட்ட  ஆண்மை   இழகளிறாய்
   அட்டை   அறிவுறிஞ்ச ஆனவுன்  கோலமென்ன?
மெச்சு  மினத்திரளே! மிஞ்சு  தமிழ்ப்புலமே!
   மேடை  நடிகரிடை மேன்மை   இழந்தவனே!
எச்ச  இனக்குறியே  ஏடுகள்   பாடியஉன்
   ஏற்ற  சரித்திரத்தோ  எச்சில்  உமிழுகிறாய்?




மானம்  பெரிதெனவே  மாண்ட  பரம்பரையில்
   மாடுக  ளானகதை  மாற்றப்  புறப்படடா!
கூனற்  சிறுமதியின்  கும்பிட்  டடிபணியும்
   கூத்தை  முடித்துவைக்கக்  கொள்கைக்  கதிரெழுக!
வானப்  புகழ்நிறுவி  வாழ்க்கைச்  சரித்திரத்தின்
   வாழும்  ஏட்டினிலுன்  வன்மைத்  திறமெழுது!
ஈனப்  பிறவிகளாய்  ஈன்ற  உடல்மடிவோன்
   இல்லை  தமிழனென  இந்நா  டுணர்ந்திடட்டும்!



சாட்டை   சுழற்றிநமைச்  சாய்க்கப்  பெருகிவரும்
   சாபக்  குடிப்பகையின்  சங்கி  லறைந்திடுக!
கூட்டைக்  கலைப்பவரின்  கொள்ளை  யடிப்பவரின்
   குள்ள  நரித்தனங்கள்  காட்டக்  கையெழுக!
நாட்டைக்  கெடுப்பவரை  நம்மைப்  பிரித்திடுதல்
   நன்மை  பயக்குமென  நம்பிக்  கிடப்பவரைக்
கேட்டின்  கருசுமந்த  கீழ்மதி  யாளர்களைக்
   காட்டும்  தமிழெடுத்துக் கணினிப் படைவருக!   


 உறுதிமொழி:


இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதிகூறுகிறேன்.

மேற்கண்ட படைப்பு வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

26 கருத்துகள்:

  1. இப்படி தோற்கின் எப்படி வெல்லும் என்பதை புதுகையில் நிரூபிப்போம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      பார் சிறுத்தலின் படைபெருத்ததோ
      படை பெருத்தலின் பார் சிறுத்ததோ?
      இந்தக் கணினிப் படை போதுமா...? இன்னும் கொஞ்சம் வேணுமா...?
      புதுகையில் புதிய சரித்திரம் படைப்போம்.

      நன்றி.

      நீக்கு
  2. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கரந்தையாருக்கு,

      தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    கணினிப் படையாற் கலங்கும் பகைதான்!
    மணியை ஒலிப்பீர் மகிழ்ந்து!

    ஆழ்ந்த பொருளோடு அழகிய விருத்தப் பாக்கள்! மிக அருமை!

    வெற்றியின் இலக்கை நோக்கிப் புறப்பட்டுவிட்டதையா உங்கள் படை(ப்பு)!

    உளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!

    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      வீழ்ந்த தமிழினம் வீறுகொண்டு மீண்டதனால்

      வாழ்த்த வருவாய் விரைந்து!

      தங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ** நாட்டைக் கெடுப்பவரை நம்மைப் பிரித்திடுதல்
       நன்மை பயக்குமென நம்பிக் கிடப்பவரைக்
    கேட்டின் கருசுமந்த கீழ்மதி யாளர்களைக்
       காட்டும் தமிழெடுத்துக் கணினிப் படைவருக! **
    இந்தப்படையை ஆவலோடு எதிர்நோக்கிக் களத்தில் காத்திருக்கிறார்கள் நம் புதுகை வீரர்கள்! புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது:) வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி,

      யாரங்கே... புதுகையை நோக்கிப் புறப்படட்டும் நம் படை... வரவேற்கக் காத்திருக்கிறார்கள்... நம் புதுகை வீரர்கள்! ம்...ம்... புறப்படுங்கள்...!

      தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரியாரே!

      நீக்கு
  5. நாட்டைக் கெடுப்பவரை நம்மைப் பிரித்திடுதல்
       நன்மை பயக்குமென நம்பிக் கிடப்பவரைக்
    கேட்டின் கருசுமந்த கீழ்மதி யாளர்களைக்
       காட்டும் தமிழெடுத்துக் கணினிப் படைவருக!

    கணினிப் படையெழுக காலமதை மாற்றப்
    பணிவர் பகைவர் பணிந்து !

    ஆஹா அருமை அருமை சகோ ! எத்தனை அருமையான விடயங்களை அழகு ததும்ப வடித் துள்ளீர்கள். வெற்றி நிச்சயம் உங்களுக்கே. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எண்சீர் விருத்தத்தில் எழிலான கவிதை -- வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. "சாட்டை சுழற்றிநமைச் சாய்க்கப் பெருகிவரும்
       சாபக் குடிப்பகையின் சங்கி லறைந்திடுக!" என்பதையே
    நம்மாளுகளுக்கு நானும் உரைக்கின்றேன்

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆஹா அருமையான ஆக்கம்,
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வீறு கொண்ட கவிதை, சொற்றொடர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அருமை மணவையாரே வெற்றி உமதே உணர்வுள்ள வரிகள் மிகவும் ரசித்தேன் தாமத வருகைக்கு வருந்துகிறேன்
    தமிழ் மணம்8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜி,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஐயா, போர்ப் பரணி போன்ற பாடல்..!

    "சாட்டை சுழற்றிநமைச் சாய்க்கப் பெருகிவரும்
       சாபக் குடிப்பகையின் சங்கி லறைந்திடுக!
    கூட்டைக் கலைப்பவரின் கொள்ளை யடிப்பவரின்
       குள்ள நரித்தனங்கள் காட்டக் கையெழுக!".....அருமையான வரிகள்.
    வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமையான ஆக்கம். போட்டியில் வென்றிட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சகோதரி,

      தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு