புகையும் மதுவும் விலக்கு... விலக்கு...!
சுற்றுச்சூழல்:
சுற்றுச்சூழல் என்றால் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு
ஆகிய ஐம்பூதங்களான புவி மண்டலம் சீராக இயங்குவதற்கும்
இவற்றிற்குப் பாதிப்பு நிகழாமல் பாதுகாப்பதுதான்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மனிதனை மற்றும் மனித வளங்களைப் பாதுகாப்பதும் சுற்றுச்சூழல்
பாதுகாப்புதான் என்பதை நாம் ஏனோ இன்னும் அறியாமல்
இருக்கின்றோம்!
மனிதர்கள் அனைவரும்
உடல்நலத்தோடும் வளத்தோடும் வாழவே விரும்புகிறார்கள். ஆனால் சுற்றுப்புறச் சூழல் அவர்களை அவ்வாறு வாழ
அனுமதிக்கின்றதா என்ற வினாவிற்கு ‘இல்லை’ என்பதுதான் பதிலாக வருகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்
புகைபிடித்தல் மற்றும் மது அரக்கனின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகி
உருக்குலைந்து வருகின்றது மனித சமூகம்.
புகைபிடித்தல்:
புகையிலையின் பயன்பாடு
மற்றும் புகைத்தலின் பாதிப்புகள் இந்தியாவில்,சிகரெட், சுருட்டு, பீடி, சிம்லி எனப் பல வகைகளில் புகையிலை
புகைக்கப்படுகிறது. ஒரு சிகரெட் புகைக்கும்போது, வாழ்வில் தோராயமாக 11 நிமிடங்களை இழக்கின்றனர். ஒவ்வொரு
ஆறு நொடிக்கும் ஒருவர், புகையிலை தொடர்பான பிரச்னை காரணமாக
உயிரிழக்கிறார். புகைப் பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், புகைப்பவர்களின் இறப்பு விகிதம் 60- 80 சதவிகிதம் அதிகம். புகைபிடிப்பதால் அடுத்தவர் விடும் புகையைச்
சுவாசிப்பதால் உலகில் ஆண்டுக்குச் சுமார் 60 இலட்சம் பேர் அகால மரணம் அடைகின்றனர். புகைபிடித்தல்: மூளை
சுருங்கவும் "அல்சமைர்ஸ்' வியாதி வருவதற்கும் புகைபிடித்தல் காரணமாகிறது. புகைபிடிப்பது ஆஸ்துமா நோயை அதிகரிக்கச் செய்கிறது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் பேர் உரிய
வயதாகும் முன்பே புகைபிடிப்பதால் இறந்து போகிறார்கள்.
பொது இடங்களில் புகைபிடித்தல்:
பொது இடங்களில்
புகைபிடிப்பது புகைபிடிக்காத அப்பாவி மக்கள் பெண்களும் குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கிறார்கள். புகைபிடிப்பவர் வெளிவிடும் புகையில் 85% புகை
கண்ணுக்கும் தெரியாது. பொது இடங்களில் புகைத்தவர் போன பிறகும்
புகைஇருக்கும்.
எரிமுனையிலிருந்து
வரும் புகையைச் சுவாசிப்பது அதிகத் தீமையானது. சிகரெட்டின்
எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது
நீரின் கொதிநிலையைவிட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில இரசாயன மாற்றங்கள்
ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன. இதனால் காற்று மாசுபடுவதோடு, அருகில்
உள்ள அப்பாவி மக்களும் புகைபிடிப்பவர் வெளிவிடும் புகையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பொது இடங்களில் பிகைபிடிக்கத் தடை:
மாசு இல்லாக் காற்றைக்
சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால்
புகைபிடிக்கும் சிறுபான்மையினரால் ஒட்டு மொத்த மனித சமூதாயமே பாதிக்கப்படுவது
மிகவும் வருந்தத்தக்கது.
புகைப்போருக்கு இணையாக
அவர்கள் விடும் புகையைச் சுவாசிப்பவர்களுக்கும் அதிகப் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொது
இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்யும் சட்டம் 2006 ஆண்டு முதல்
அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும்; தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்; மீறுவோர்களுக்கு மிகப் பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த ஆவன
செய்ய வேண்டும். நமக்கும் நம்மைச் சுற்றியும் உள்ளவர்களுக்குக்
கேடு ஏற்படாமல் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.
‘மது’ என்னும் அரக்கன்:
மது தனி மனிதனைத்தானே பாதிக்கிறது என்ற எண்ணம்
வரலாம். ‘தனிமரம் தோப்பாகாது என்றாலும்... தோப்பில்
இருப்பதெல்லாம் தனிமரம்’ என்பதைப்போல தனிமனிதனை மட்டுமல்லாது...
சமுதாயத்தையே சீரழிக்கும் பிரச்சனை என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குடும்பத் தலைவன் மது
குடிப்பதால் மனைவி மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். குடும்ப அமைதிக்குக் குந்தகம் விளைகிறது. பிள்ளைகளின் படிப்புப் பாழாகிறது. குடும்பத்தில் அமைதி குலைந்து வீட்டில் சண்டை சச்சரவுகளே மிஞ்சுகின்றன. குடிப்பவர்கள் நோயாளியாக ஆகி வீட்டுக்கும்
நாட்டுக்கும் பெரும் சுமையாகிப் போகிறார்கள். குடித்துவிட்டு
வாகனம் ஓட்டுவதால் விலைமதிப்பில்லா பல உயிர்கள் விபத்துக்குள்ளாகி எந்த தவறும்
செய்யாமலே இறந்துபோகின்ற கொடுமை நடப்பது நம் நாட்டில்தான் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இந்தச்
சீர்கேடான சுற்றுப்புறச்சூழலை அரசே ஏற்படுத்தலாமா?
சுற்றுச்சூழல் அறியாமை தரும்
ஆபத்து:
தமிழகத்தில்
உள்ள உயர்நிலைப் பள்ளிகள் 2739 மேல்நிலைப்பள்ளிகள் 2851 ஆனால் டாஸ்மாக் சாராயக்கடைகளின் எண்ணிக்கை 6823 ஆகும். பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட டாஸ்மாக் கடைகள்
எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இன்றைய தினம் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம்
பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கிறது என்றால் தமிழகத்தில் 10000 பேருக்கு ஒரு
டாஸ்மாக் கடை என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டது. டாஸ்மாக் மதுக்கடையின் ஆண்டு
வருமானம் 26000 கோடியாகும்.
தமிழகத்தில்
நடுத்தர வயதுடைய பலர் மதுவுக்கு அடிமையாகித் தவித்து வருகிறார்கள் என்றால், அவர்களைக் காட்டிலும், இளைஞர்களும், சிறுவர்களும் மது போதைக்கு அடிமையாகி, தங்களது பெற்றோர்களையும், இந்தச் சமுதாயத்தையும் அதிர்ச்சி
அடையவைத்துள்ளனர்.
கோவையில் தனியார் பள்ளி
மாணவி மது அருந்தி, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டார். சென்னை-
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேனிலைப்பள்ளியில் பிளஸ் டூ படிக்கும்
மூன்று மாணவர்கள் மதியவேளையில் மது அருந்தி வகுப்பறைக்குள் வாந்தி எடுத்ததோடு
ஆசிரியையிடம் ரகளை செய்தனர்.
'மாணவ, மாணவியர் மது அருந்த, பெற்றோரே
முக்கியக் காரணம். பெற்றோரே. உயர்தட்டு மற்றும் அடித்தட்டு வகைப் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கண்முன்னே மது அருந்துவது, அவர்களை மது பாட்டில் மற்றும் மது அருந்துவதற்கான, இதர நொறுக்குத் தீனி எடுத்து வரச் சொல்வது போன்றவற்றால், அந்தப் பிள்ளைகளும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.
தமிழ்நாட்டில்
குடிப்பவர்களின் சராசரி வயது 19இல் இருந்து 13-14 ஆகக் குறைந்து விட்டது எனவும், குடிப்பவர்களில்
80% பேர் தீவரக் குடிகாரர்களாகவும் இருப்பதாகவும்
தெரிய வருகின்றது. தமிழகத்தில் 40% ஆண்களுக்குக்
குடிப்பழக்கம் இருக்கிறது. அண்மைக் காலங்களில் பெருகி
வருகின்ற
திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல்
வன்முறை, கொலை, சாலை விபத்துக்கள் எனப் பல சம்பவங்களின்
பின்னணியில் மதுவிற்கு முக்கியப் பங்கு இருப்பதை நிச்சயம் யாராலும் மறுக்கவே
முடியாது. தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்து மரணங்கள் 70 % மதுவருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகின்றன; இவர்களால் மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத கொடுமை
நிலவுகிறது.
மதுவிலக்கு வேண்டிப் போராட்டம்:
எப்போதும் இல்லாத வகையில்
மதுவுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். ஊர்கள் தோறும் வீதிக்கு
வந்து மாணவர்கள் பேராடுகிறார்கள். தாய்மார்கள்
திரண்டுவந்து மதுக்கடைகளுக்குப் பூட்டுப்போடுகிறார்கள். தமிழகம் மதுவுக்கு எதிராகக் கனன்று கொண்டிருக்கிறது. மக்களனைவரும் ‘மதுவிலக்கு’ வேண்டி போராட வீதிக்கு வந்து விட்டனர்.
மதுவிலக்கை உடனடியாக
அமல்படுத்த வேண்டி, மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராட்டக் களத்தில் காந்தியவாதி சசிபெருமாள் தனது
உயிரைத்தியாகம் செய்திருக்கின்றார். அரசு இதற்குச் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தாமல் தமிழகத்தில்
மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அரசு அறிவித்து விட்டது. செருப்பு சிறிதென்று காலை வெட்டுவதற்குச்
சமமானது இந்த அறிவிப்பு.
இளைஞர்கள், மாணவர்கள், மக்களின் எதிர்கால நலன் கருதி, ஆக்கபூர்வமான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு மதுவிலக்கை உடனடியாகத் தமிழனத்தில் அமல்படுத்த
வேண்டும்.
தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள்
நீடிக்க ஒரே காரணமாகப் பலரும் சுட்டிக்காட்டுவது, அது
தரும் வருவாய். அதுதான் இன்றைக்கு மது நீடிப்பதற்கான ஒரே சவால் என்றால், அது
ஒரு பொருட்டே அல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
‘புகைபிடித்தலை’ முற்றிலுமாகத் தடுத்துத்
தடைசெய்யப்படுவதுடன்,
‘மதுவிலக்கை’ அமுல்படுத்திச் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து; மனித ஆற்றலை வளர்ச்சிப்பணிக்கு இட்டுச் செல்ல அரசு
ஆவன செய்து எதிர்காலச் சமுதாயம் வளமுடன் வாழ வழி செய்ய வேண்டும்.
*********************
உறுதிமொழி:
இது எனது சொந்தப் படைப்பு என்று
உறுதிகூறுகிறேன்.
மேற்கண்ட படைப்பு “வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குசுற்றுச்சூழலுக்கான கட்டுரைப்போட்டியில் பங்கேற்றுத் தங்களின் இந்தப் பதிவு பரிசுகளைப் பெற வாழத்துகள்.
நன்றி
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அன்புள்ள வலைச்சித்தருக்கு,
பதிலளிநீக்குகட்டுரையை வெளியிட்ட அடுத்த வினாடியே... இமைப்பொழுதில் இணைத்து அதை உடனே எங்களுக்கு அறிவிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்த தங்களுக்கு மேலும் நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு, வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
மக்கள் நலம் காக்க அனைவரும் உணர வேண்டிய பதிவு! வெற்றி பெற வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅன்புள்ள பெரும்புலவர் அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அற்புதமான கருத்துக்களுடன்
பதிலளிநீக்குஆழமாகச் சிந்தித்துப் படைக்கப்பட்ட கட்டுரை அருமை
வாழ்த்துக்கள்
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் முதல் வருகைக்கும் உயர்வான கருத்திற்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.
வணக்கம் மணவையாரே நல்ல விடயங்களை அழகாக தொகுத்த விதம் அருமை வெற்றி பெற எமது உளமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 555 சிகரெட் அல்ல
அன்புள்ள ஜி,
நீக்குவணக்கம். தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
தம +1
அன்புள்ள கரந்தையாருக்கு,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
சூழல் மாசு படாமல் இருக்க எண்ணி அனைத்தையும் தொகுத்து அருமையாக எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குவாழத்துக்கள் வெற்றிபெற !
அன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
சுற்றிலுமுள்ள சமூகக் கட்டமைப்பு குலைந்து மக்கள் நலனைச் சீரளிக்கும் பாங்கில் கட்டுரை வந்துள்ளது..இந்தச் சூழல் மாறவேண்டும். வென்றிட வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
நல்ல,தேவையான விழிப்புணர்வு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
சிறப்பான சிந்திக்க வைக்கும் கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆசிரியரே.
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
சிறப்பான கட்டுரை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத ம 8
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வெளியில் புகைப் பிடிப்போர்கள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும் நானும் அடிக்கடி நினைப்பதுண்டு!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ,வெற்றி பெற )
அன்புள்ள ஜி,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
வணக்கம் நண்பரே! புகையும் மதுவும் வுலக்கு!என அருமையான கருத்துக்கள்!நாம் ஒவ்வொரும் சிந்தித்தால் மதுவும் புகையும் விலக்கு சாத்தியம்தான்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
நேரமிருப்பின் எம் கட்டூரையும் காண வாருங்கள் நன்றி!
அன்புள்ள அய்யா,
நீக்குதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.