திங்கள், 6 அக்டோபர், 2014

அரிய நிகழ்வு அறிய...! இது கதையல்ல...நிஜம்.

                      




                                         கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று பேர் புறப்பட்டோம்.

                                         முதலாமவர் முனைவர்.பா.மதிவாணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் அவர்கள்...காட்சிக்கு எளிமை... கருத்துக்கு இனிமை...பேச்சில் தமிழின்  வலிமை... பேசியவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே...

                                          இரண்டாமவர்  நண்பர் திரு.ஜோசப் விஜு,  திருச்சிராப்பள்ளி,  ஆர். சி.மேனிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்
ஊமைக்கனவுகளால் வலைச்சரத்தினரை மனம் கொண்ட புரத்தால் கொள்ளை கொண்டவருடன், கள்ளமில்லா உள்ளம்கவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே ...


                                          மூன்றாமவராகத் திருச்சிராப்பள்ளி, ஆர்.சி. மேனிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியராகிய  நான், மூவரும் புதுகை நகர்மன்றம் அடைந்தோம்.

                                                               ***************

          அரங்கத்தில் அலைமோதிய கூட்டம்...புதுகை வரலாற்றில் ‘ நூல் வெளியீட்டு விழா இதுவரை  இப்படி நடந்திருக்காது’  என்கிற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி...கவிஞரின் மனம் போல அரங்கு நிறைந்திருக்க... இல்லை.. இல்லை....உட்கார இடமின்றி நின்றிருக்க நூல் வெளியிடப்பட்டது .

            ‘நூலை விலை கொடுத்து வாங்கிப் படிப்பவன்தான் வாசகன்...இரவல் வாங்கிப் படிப்பவன் யாசகன்’ -என்று கவிஞர் வாலி சொன்னதை வாலிபர் திரு.தங்கமூர்த்தி...வாலிபக் கவிஞரின் கீர்த்தி சொல்லி... நீங்கள் வாசகரா? யாசகரா? - என்று கேட்டதற்குப் பிறகு வாசகனாகமல் இருக்க முடியுமா?


             வாசகனாக...உடன் பார்த்தால் எதிரே கவிச்சுடர் கவிதைப்பித்தன் இருந்தார்...என்னை அறிமுப்படுத்திக் கொண்டு  ‘புதிய மரபுகள்’ நூலினை நீட்டி மரபுக்விஞரின் கையொப்பம் வாங்கி மகிழ்ந்தேன்.

              விழாநாயகரிடம் ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ விழாவின்  நாயகியாக இருக்கக்கூடிய  நூலினை நீட்டி கையொப்பம் வாங்கி மகிழ்ந்தேன்.

               வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக ‘கம்பன் தமிழும் கணினித் தமிழும்’
நூலில் முனைவர்.பா.மதிவாணன் அய்யாவிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன்...நூலிழையில் தவறிவிட்டது... தவறாமல் அவரிடம் கையொப்பம் வாங்கி மகிழ்வேன்.      

                                                        ****************
                                                             
                                    மூன்று பேரின் அறிமுகம் கிடைத்தது.

                                    ‘ மலர்தரு’ ( திரு.கஸ்தூரி ரெங்கன்) +
                                     ‘மகிழ்நிறை’ (திருமதி.மைதிலி)         =
                                     ‘மனம்நிறை’(இவர்களின் பதிவாக உலா வரும் மழலை மைவிழி).  மழலை மொழியுடன் என்னிடம் கேட்டாள்.

                   “அங்கிள்...நான் ஒரு மேஜிக் செய்யட்டா...?”

                  சரியென்று தலையாட்ட  உங்க கைய நீட்டுங்க என்றாள். சோதிடம் மாதரி ஏதாவது சொல்லப் போகிறாளோ? என்று எண்ணிக் கையைக் கொடுத்தேன்.

                  ‘ H‘- என்ற எழுத்தில் ஆரம்பமாகும் மூன்று சொல்லைச் சொல்லி...மூன்றில் ஏதாவது ஒரு சொல்லை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் என்றாள்.  நான் அவள் சொன்னதில் ‘HOME’ நினைத்துக் கொண்டேன்.  என்ன ஆச்சர்யம்...?அடுத்த நொடியிலேயே நான் நினைத்தது ‘HOME’ என்றாளே...நான் வியந்து நின்று விட்டேன்.

                      குட்டீஸ்ஸிடம் அந்த இரகசியம் கேட்கக்கூடாது.. . ஆனால்...மனம் தெரிந்து கொள்ள எண்ணியது... ‘எனக்கு மட்டும்...எனக்கு மட்டும் அந்த இரகசியத்தைச் சொல் ...’ எனக் கேட்க வேண்டும்... சொல்லிக் கொடுத்தவரிடம்  கேட்கிறேன்.
பிளீஸ்...எனக்கு மட்டும்... சொல்லுங்களேன்....இரகசியமாக வைத்துக் கொள்கிறேன்.

                     ‘ மலர்தரு’  முன்பின் தெரியாது.  அப்பொழுது பார்த்த பொழுதும் தெரியாது...கஸ்தூரி ரெங்கன் என்றே தெரியும்... ‘வலைப்பூ’ கணினியில் உதவி கேட்ட பொழுது...அடுத்த நொடியே...உடனே உதவி செய்ய அழைத்தது...
என்னை மெய்சிலிர்க்க வைத்தது.  இப்படி ஒரு மனிதரை இதுவரை நான் சந்தித்ததே இல்லை... காரணம்...என்னைப் பற்றி அவருக்கு தெரியாது...விழா முடியும் நேரம்... எல்லோரும் பிஸியாக இருக்கும் நேரம்...
                        ‘ காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
                           மீக்கூறும் மன்னன் நிலம்’
                         - என்று இவருக்காகத்தான்   பொய்யாமொழிப் புலவன்  சொன்னானோ?

                         ஆங்கிலத்திலும் தமிழிலும் அருமையான பல்சுவைப்  பதிவுகளைப் பதிப்பித்து எல்லோராலும் பாராட்டும்படிச் செயல்பட்டு  வரும்      ’ மகிழ்நிறை’ (மைதிலி) அவர்களின் அறிமுகமும் அப்பொழுதான் கிடைத்தது...“எங்கள் ஊர்க்காரர்” என்பதில் இருவருக்குமே பெருமை... அன்புடன் பேசினார்.  மிகுந்த மகிழ்ச்சி.

                                                                  ***************

                                           கவிஞர் நா.முத்துநிலவன் (முத்து பாஸ்கரன்) சிறந்த பேச்சாளர்... நல்ல எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்... தன் துணைவியாருக்கு  உதவியாக பணிசெய்து உற்ற இணையாக இருப்பவர் என்பதை அப்பொழுதுதான் அறிந்து...மேலும் அவர் மீது மதிப்பு  இன்னும் ஒரு படி உயர்ந்தது.
(இது வரை நான் என் துணைவியாருக்கு  உதவியாக இருந்ததே இல்லை..  இனிமேலாவது முயற்சித்துப்  பார்க்க வேண்டும்...முடியுமா என்பது தெரியவில்லை...என்ன?
இதெல்லாம்  இரத்திலேயே வரவேண்டும் என்கிறீர்களா...?)

                                          கவிஞர் நந்தலாலா...‘பின்லேந்து,  கியூபா’ நாடுகளில் பள்ளிகளில்  தேர்வு என்ற ஒன்றே கிடையாது...அந்த நாடுகள் தான் உலகில் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது என்று சொன்னபோது....நம்முடைய கல்விமுறையை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.




                                     கவிஞர் பால பாரதி... M.L.A., விழாவில்... பேசுகையில்...

                                   ‘ பிற்போக்கு ஆணாதிக்கம்’ ; ‘முற்போக்கு ஆணாதிக்கம்’   என்று சொல்லி,   ‘பெண்களைப் படிக்க வைக்கமால் இருப்பது’          ’பிற்போக்கு  என்றும்,  
                                     ‘ஆண்கள் எதை விரும்பிகிறார்களோ அதையே       படிக்க வைப்பது...’ முற்போக்கு -என்றும்...
 ஆணாதிக்கத்தைப் பற்றி  நகைச்சுவையாக சுவைபடப் பேசினார்.   பேச்சின் நாயகியாக...  அருமையாகப் பேசி அனைவரின் நன்மதிப்பையும்  பெற்று... அதைச் சுமந்து சென்றார்.
   

                                                                 


                                      விருந்தோம்பலில்  சிறந்தோங்கிய விழாநாயகர்... தங்களின் வாழ்க்கைப் பயணத்தில்  இந்த அரிய நிகழ்வு தங்கத்தின் மேல் வைரம் பதித்ததாகும்.

                                        இனிய பல நிகழ்வுகளைச் சுமந்து கொண்டு,
                                        மீண்டும் கலந்துரையாடலுடன்...
                                        இல்லம் வந்து சேர்ந்த பொழுது
                                        இரவு மணி ஒன்று....
                                        ஒன்றுடன் ஒன்று சேர்வோம்.  
                                                                                               -மாறாத அன்புடன்,

                                                                                                 மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in               

30 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு! விழாவுக்கு வர முடியா குறையை நீக்கியது! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. புத்தகம் பேசுகிறதோ இல்லையோ புத்தகம் வாங்கப் போன கதையைப் பேசிவிட்டீர்கள்.
    நானும் மதிக்கும் திரு மது மற்றும் மகிழ்நிறை அவர்களைக் காண முடிந்ததும் பேச முடிந்ததும் மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள் தான்!
    நீங்களும் மெல்ல மெல்ல அனுவப் பதிவுகளிலின் பக்கம் வரத் தொடங்கி விட்டீர்கள்.
    “குமரனை“க் கொண்டு ஆரம்பித்து விட்டதால் குறையிருக்காது என்று நம்புகிறேன்.
    எனது புதுகைச் செலவு ( செலவு = பயணம் ) என்று நானும் ஏதாவது சொல்லாம் என்று பார்த்தால் எல்லாச் செலவும் உங்களது ஆகிவிட்ட படியால் நான் என்ன சொல்ல!
    தங்களைத் தொடர்கிறேன் மணவையாரே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அன்பு நண்பருக்கு,

    தங்களின் ஊக்கத்தால் தான் தட்டுத் தடுமாறி...
    தடம் மாறாமல்...தடம்பதிக்க முயற்சிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. சுருங்கச் சொன்னாலும் விளங்கச் சொன்னீர்கள். நநதலாலா மற்றும் பாலபாரதி ஆகியோரது உரையை அவர்கள் படத்தோடு வெளியிட்டது சிறப்பம்சம். வலையுலகில் மைதிலி, கஸ்தூரி ரெங்கன் தம்பதியினரது ஆர்வமும் உபசரிப்பும் மறக்க முடியாதது. அவர்கள் குழந்தை செய்த “மாஜிக்கை” அடுத்தமுறை அவர்களைச் சந்திக்கும் போது கேட்க வேண்டும்.

    நானும் விழாவினுக்கு வந்து இருந்தேன். அரங்கத்தினுள் எனக்கு ரொம்பவும் வியர்த்தபடியினால் வெளியேதான் இருந்தேன். நீங்களும் நானும் ஓரிடத்தில் இருந்தும் சந்திக்க இயலாமல் போய்விட்டது. பேராசிரியர் மதிவாணனையும், ஜோசப் விஜூ அவர்களையும் ஏற்கனவே புதுக்கோட்டையில் சந்தித்து இருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
      வணக்கம். பக்கத்தில் இருந்தாலும் இரண்டு ரயில் தண்டவாளங்களைப் போல இருந்திருக்கின்றோம். தங்களைப் பார்த்துப் பேச முடியாமல் போனதற்கு வருத்தமே!
      விரைவில் சந்திப்போம்.
      நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் ..அருமையாக விளக்கியுள்ளீர்கள்...தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி.எம்.கீதா அவர்களுக்கு,
      வணக்கம். தங்களைச்சந்தித்தேன்...ஆனால் நீங்கள்தான் கீதா என்று எனக்குத் தெரியவில்லை...! மன்னிக்கவும். என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருந்தீர்கள்...
      நன்றி.
      -மாறாத அன்புடன்,
      -மாறாத அன்புடன்,


      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  6. அய்யா,
    உண்மையில் வெகு நேரம் ஆகிவிட்டபடியால் உங்களுக்கும், விஜூ அண்ணாவிற்கும் விருந்து உபசரிப்பு செய்யாமலே கிளம்ப நேர்ந்தது குறித்து நானும் கஸ்தூரியும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம். தயவு செய்து அடுத்தமுறை தாங்களும், அண்ணாவும் ஒருமுறை நம் இல்லம் வந்து சிறபிக்கவேண்டும். உங்களையும், விஜூ அண்ணாவையும் அங்கே சந்தித்தது ஆச்சர்யமான மகிழ்ச்சி:) பாப்பா சும்மா தமாசுக்கு செய்வாள், ஆனால் பலமுறை அவளது யூகம் சரியாகவே இருப்பது எனக்கும் அதிசயம் தான். நிறைமதிக்கு உங்களை போன்றோரின் வாழ்த்துகள் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி! மிக்க நன்றி அய்யா! இது குறித்து நானும் ஒரு பதிவிட்டுள்ளேன்.பொழுது வாய்க்கையில் பார்த்து கருத்திடுங்கள்:)

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள திருமதி.மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு,
    வணக்கம். தங்களின் அன்பான பேச்சும்... திரு.கஸ்தூரி அய்யா அவர்களின் பிறருக்கு உதவும் மனமும் பாராட்டுதலும், போற்றுதலுக்கு என்றும் உரியன.

    நிறைமதியின் ‘மேஜிக்’ இரகசியம் சொன்னதற்கு நன்றி.
    மதிநிறைந்த மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்... தொடரட்டும்...
    நான் பத்தம் வகுப்பு மஞ்சம்பட்டி, சிறுவர் நகரில் படிக்கும் பொழுது...ஒன்னுக்குள் பத்து எண்ணை மனதுக்குள் நினைத்துக் கொள்ளச் செய்து, வேறு ஒருவரிடன் அந்த எண்ணைச்சொல்ல வேண்டும்... கேட்டவர் எதுவும் பேசாமல் இருக்க,அவர் முகத்தில் கைவைத்து எதுவும் அவர் கூறாமலே அவர் நினைத்த எண் என்ன? என்பதை மிகவும் சரியாக நான் சொல்லுவேன்...!

    இந்த மேஜிக்கை நிறைமதியைச் சந்திக்கும் பொழுது நான் செய்து காட்டுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. உவப்பத் தலை கூடி உள்ளப்பிரியும் வாய்ப்புகள் புதுகைவாசிகளுக்கு அடிக்கடி கிடைக்கும். அதில் பங்குபெறும் நல்லூழ் உங்களுக்குக் கிட்டியது மகிழ்ச்சிக்குரியது.

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள திரு.செல்லப்பா அவர்களுக்கு,

    அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனு ம்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு.

    தங்களின் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அன்று மதுரையில் முடிக்க வேண்டிய பல வேலைகள் இருந்ததால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை...

    ஒவ்வொரு நிகழ்வும் தங்களின் வரிகளில் ரசிக்க வைத்தது... மதுரையில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,

      இரசித்துப் படித்ததற்கு நன்றி. மதுரையில் வருகிற 26ந்தேதி நடைபெற இருக்கின்ற வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவிற்காக வேண்டி பல வேலைகளைத் தாங்கள் சிரமேற்கொண்டு செய்து வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களைப் பாராட்டுவதில் நான் பெருமை அடைகின்றேன். வாழ்த்துகள்.
      தங்களை மதுரையில் சந்திக்க மிகவும் நான் ஆவலாக உள்ளேன்.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  11. வணக்கம் ஐயா.
    தங்களின் அனுபவம் சுவராசியமாக இருக்கிறது. உங்களுடைய மேஜிக்கை எனக்கு மட்டும் சொல்லுங்கள் ஐயா.

    தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.சொக்கன் சுப்ரமணியன் அய்யா அவர்களுக்கு,

      வணக்கம். தாங்கள் எனது ‘வலைப்பூ’ பக்கம் பாலோயராக வருகை புரிந்ததற்கும். கருத்திட்டதற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். அவசியம் அந்தமேஜிக்கை தங்களைச் சந்திக்கையில் சொல்கிறேன்.

      தொடத் தொட மலர்வேன்...தொடருங்கள்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  12. உங்களது இந்த பதிவினை எனது பதிவினில் சுட்டி காட்டி இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள திரு.தமிழ் இளங்கோ அய்யா அவர்களுக்கு,
    எனது வலைப்பூவிற்கு வருகைபுரிந்தமைக்கும், எனது பதிவினை தங்களது பதிவினில் சுட்டி காட்டியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா!

    கண்ணில் தோன்றியது ஐயா காட்சி!..
    அத்தனை அருமையாக, இனிமையாக உங்கள் அனுபவப் பகிர்வு
    அட.. எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்புக் கிட்டாமற் போயிற்றே என ஏங்க வைக்கின்றது!

    நட்பு வட்டங்களுடன் இப்படி அரியதொரு சந்திப்பு நிகழ்வு
    மிக அருமை!
    பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச்சகோதரி கவிஞர் திருமதி இளமதி அவர்களுக்கு,
      வணக்கம். தங்கள் எனது பகிர்வைப் பாராட்டி மகிழ்ச்சியடைந்ததற்கும்...வாழ்த்தியதற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      ‘என்னடா தமிழ்க்குமரா...என்னை நீ மறந்தாயோ?’ குமரனைப் பற்றி... தனிப்பதிவு ஒன்றினைப் போட்டு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்...!

      திரு.குமரன்....அவனே எழுதிப் பேசிய (19.02.2001) உரையாடலைத் தேடி எடுத்திவிட்டேன். விரைவில் அதைப் பகிர்வேன் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  15. உங்களின் பதிவை படித்ததும், நாமும் அங்கு இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் எழுந்தது ! அந்த ஏக்கத்தை போக்குவதாய் அமைந்தது உங்கள் நிகழ்ச்சி வர்ணனை !

    முத்துநிலவன் அய்யா அவர்களை வாழ்த்தும் வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.

    இனிவரும் நிகழ்வுகள் எதிலாகினும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையும்வரை வலைப்பூவில் தொடருவோம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr


    எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள திருமிகு.சாமானியன் அவர்களுக்கு,

    எனது பதிவிற்கு கருத்திட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  17. வாசித்து மெய் சிலிர்த்து விட்டோம்! ஏன் தெரியுமா? ஒன்று நிகழ்வு குறித்த அருமையான உங்கள் பதிவு!

    இரண்டாவது, நாங்கள் மிகவும் வியந்து ரசிக்கும் திரு விஜு ஐயா அவர்கள் உங்கள் நண்பர் என்றதும்....ஆஹா! அவரை நேரில் பார்க்க வேண்டும்...இந்த புகைப் படத்தில் இருக்கிறாரா?! தயவு செய்து சொல்லவும்! அவரைப் பற்றித் தாங்கள் சொல்லியது அருமை!

    மற்றும் நாங்கள் மிகவும் போற்றும் எங்களின் இனிய நண்பர்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் சகோதரி மைதிலி, சகோதரர் கஸ்தூரி ரங்கன்-மது இவர்களைப் பற்றி எழுதியதும் அவர்கள் புகைப் படத்தை இங்கு கொடுத்தறகும்...(அந்த் மஞ்சள் நிற உடையில் இருப்பவர்தானே சகோதரி மைதிலி அவர் அருகில் இருப்பவர் தானே கஸ்தூரி ரங்கன்-மது???)

    மிக்க நன்றி விழாவுக்கு வந்தது போன்ற ஒரு உணர்வைத் தந்த ஒரு பதிவு தங்கள் அழகிய நடையில்! தமிழ் ம்ளிர்கின்றது!

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள திரு.துளசிதரன் தில்லைஅகத்து அய்யா அவர்களுக்கு,
    வணக்கம்.
    பதிவைப் பாரட்டியதற்கு நன்றி. நண்பர்திரு, விஜு அய்யா இந்தப் புகைப்படத்தில் இல்லை... !
    திருமதி.மைதிலி குடும்பத்தினர் பற்றிய தங்களின் யூகம் மிகச் சரியே! எங்கள் ஊர்க்காரரை அப்பொழுதுதான் பார்த்தேன். மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  20. விழாவை
    நேரில்
    வந்து
    பார்க்கவில்லையே!
    என்கிற
    குறை
    தீர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.Mohamed Nizamudeen அய்யா அவர்களுக்கு,

      நன்றி அய்யா.

      நீக்கு
  21. அய்யா தங்களின் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமிடாத குறையை இன்றுதான் தீர்த்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி வேறென்ன சொ்ல்ல? பின்பற்றாளர் பகுதியைச் சேர்த்திருப்பதைப் பார்த்து மகிழந்து முதல் ஆளாக இணைந்துவிட்டேன். அதுவே மனநிறைவாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி . தங்களின் பட்டிமன்றப் பேச்சை டேப்ரிக்காடரில் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தவன். புதுச்சேரி கே.ஏ.குணசேகரன் அய்யா பாடிய ‘பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே...என்னை பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலி பேசுதே......’பாடிய பாடலை மதுரையில் விழாவில் தாங்கள் தொட்டுக்காட்டிப் பேசிய பேச்சு நன்றாக இருந்தது.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பக்கம் வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு