வெள்ளி, 13 மார்ச், 2020
சனி, 7 மார்ச், 2020
பேராசிரியர் அன்பழகன் மறைந்தார்...!
பேராசிரியர் அன்பழகன் மறைந்தார்...!
பேராசிரியர் க.அன்பழகன் வாழ்க்கை வரலாறு
காண ‘கிளிக்’ செய்க... https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/07035102/1151248/DMK-K-ANbazhagan-Life-History.vpf
திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது.
சங்கப் பலகை சரிந்துவிட்டது!
எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்!
என்ன சொல்லித் தேற்றுவது?
எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?
பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!
முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்!
எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்!
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?
தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார்!
பேராசிரியப் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்!
எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்.
எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்.
இந்த நான்கும் தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.
'எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர் தான் என் அண்ணன்' என்றார் தலைவர் கலைஞர்!
எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்.
அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்லபெயர் வாங்குவதுதான் சிரமம்.
ஆனால் நானோ, பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன்.
அவரே என்னை முதலில்,
"கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்'' என்று அறிவித்தவர்.
எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது!
அப்பா மறைந்தபோது,
பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.
இன்று பெரியப்பாவும் மறையும் போது
என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்?
இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன்?
என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!
பேராசிரியப் பெருந்தகையே!
நீங்கள் ஊட்டிய
இனப்பால் - மொழிப்பால் - கழகப்பால் -
இம் முப்பால் இருக்கிறது.
அப்பால் வேறு என்ன வேண்டும்?!
உங்களது அறிவொளியில்
எங்கள் பயணம் தொடரும்
பேராசிரியப் பெருந்தகையே!
கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்
இளமைப் பருவம்
அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு திசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் (எம்.ஏ) பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.
குடும்பம்
இவர் வெற்றிச்செல்வி என்பவரை 21-2-1945ஆம் நாள் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன்
(பிறப்பு: 17-2-1952[ ) என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ்,
ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் பிறந்தனர்.
சாந்தகுமாரி 23-12-2012ஆம் நாள் மறைந்தார்.
க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரததாசன் தலைமையில் திருமணம் நடந்தது.[ மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் குத்தாலம் ஒன்றியம் எலந்தங்குடியில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 11-9-1957ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.
பொது வாழ்க்கை
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும், ஈ.வெ.ரா அடியொற்றி நடப்பவரும் ஆவார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.
இதழாளர்
க. அன்பழகன் சென்னை புரசைவாக்கம்,
வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து "புதுவாழ்வு" என்னும் மாத இதழை 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்) முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
எழுத்துப் பணி
எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் அழகுராணி [7]
1.
இன-மொழி வாழ்வுரிமைப் போர்
2.
உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
4.
தமிழினக்காவலர் கலைஞர்
5.
தமிழ்க்கடல்
6.
தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
7.
தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
8.
தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க. பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறாதா தமிழக்கத்திற்கு தொண்டுபுரிகிறதா என விளக்கும் நூல்)
9.
நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
11.
வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை. (டாக்டர் நாயர் காலத்திலிருந்து
1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
12.
வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்), 1947, திராவிடன் பதிப்பகம், வேலூர். விடுதலைக் கவிஞர்.
13.
விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
14.
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்
என் செய்வோம்
நாங்கள் இனி?
பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு... திருச்சி சிவா எம்.பி. அவர்களின் இரங்கல் கவிதை!
திராவிடப் பேரியக்க
வேர்
அறிவுக் களஞ்சியம்
தமிழ்க் கடல்
இலக்கிய ஊற்று
இலட்சிய வேங்கை
வெண்கலக் குரல்
கம்பீரப் பார்வை
செவ்வாய் சிரிப்பு!
இனமானச் சுடர்
தன்மானச் சூரியன்
தலைவணங்கா தகைமை
உறுதி குலையாத
கொள்கை குன்று!
உணர்வுக் கிடங்கு!
கொட்டும் அருவியென
பொதிகைத் தென்றலென!
தமிழினத்தைப்
பகை சூழும்
சிலநேரம்
புயலின் சீற்றமென
அடங்காத
கடலின் அலையென
அடுக்கடுக்காய்
சரம் சரமாய்
சொல் பிரவாகம்
இடைவெளியில்லா
கணைகளாய்
எதிரிகளின்
மார் துளைக்க!
எந்நாளுமிவர்
துவண்டதுமில்லை!
தோற்றதுமில்லை!
மாநாடுகளில்
உன் போர்ப்பறை
ஒலிக்கும்!
எங்களை உலுக்கும்!
கலைஞருக்கு
சிலிர்க்கும்!
பகைவருக்கோ
குலை நடுங்கும்!
அய்யா! உனக்கு
அறிவு பெரிது!
தமிழ்ப் புலமை
பெரிதினும் பெரிது!
நினைவாற்றல்
பெரிது!
உள்ளம் விவரிக்க
இயலா அளவு பெரிது!
எத்தனை
நீண்ட சரித்திரம்!
நீதிக்கட்சியின்
மிச்சமே!
கழகத்தின்
அறிவுக்கருவூலமே!
சுயமரியாதைச் சுடரே!
எளிமையின் இருப்பிடமே!
அடக்கத்தின் அமர்விடமே!
எங்கள் இனமானப்
பேராசிரியரே!
கொள்கை வீரர்கள்
கொடிதாங்கும்
மறவர்கள்
புடம்போட்ட
தங்கங்கள்!
பகைநுழையா
வண்ணமிங்கே
தமிழ்மண்ணின்
எல்லை காக்கும்
தீரர்கள்!
என் செய்வோம்
நாங்கள் இனி!
வலுவிழந்ததில்லை
ஒருபோதும்
எதன் பொருட்டும்!
இன்று
கலங்கித்
துடிக்கிறோம்!
கதியற்று
நிற்கிறோம்!
தெம்பிழந்து
தேம்புகிறோம்!
தேற்றுவார்
யாருண்டு எங்களுக்கு?
அய்யா! அய்யா!
பேராசிரியரே!
எம்நிலை
யாரிடம் சொல்வோம்?
என் செய்வோம்
நாங்கள் அய்யா?
மயங்கி நின்றோமய்யா!
உன் தேனருவித்
தமிழ்கேட்டு!
இன்று
கலங்கித் தவித்து
துடித்து துவண்டு
போனோம் அய்யா!
கலைஞர் போனார்!
தாயை இழந்தோம்!
இன்று
தந்தையையும் இழந்த
நிலையில்
தளபதியும்
நாங்களும்!
-
திருச்சி சிவா.
மறைந்த தி.மு.க.
கலைவர் கருணாநிதியின் உற்றதோழனாகத் திகழ்ந்தவர் அன்பழகன் உடலநலக் குறைவின் காரணமாக சென்னை மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் 7.3.2020 இன்று
சனிக்கிழமை நள்ளிரவு 1.10 மணியளவில் மரணம் அடைந்தார்.
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.