வியாழன், 14 நவம்பர், 2019

எனது ‘புதிய உடன்படிக்கை’ மேடை நாடகம் காணொலியில் ....!



எனது  ‘புதிய உடன்படிக்கை மேடை நாடகம்காணொலியில்....


12.10.1991 அன்று எனது ‘புதிய உடன்படிக்கை’ நாடகம் திருச்சி இரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது.

 ‘புதிய உடன்படிக்கை’  காணொலியில் காண கிளிக் செய்க.



காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 1




காண ‘கிளிக்’ செய்க...

 பகுதி - 2









காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 3






காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 4






காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...

                                                                             பகுதி - 5







காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 6







காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 7




காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 8





காணொலியைக் காண ‘கிளிக்’ செய்க...
பகுதி - 9








-மாறாத அன்புடன், 

 மணவை ஜேம்ஸ். 







திங்கள், 29 ஏப்ரல், 2019

வெள்ளி, 1 மார்ச், 2019

மணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது!



மணவை பொன் மாணிக்கத்திற்குக் கலைமாமணி விருது!








சென்னை, மார்ச் 1.

நடிகைகள் பிரியாமணி, நளினி, நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மணவை பொண்மாணிக்கம் உள்பட 201 பேருக்குக் கலைமாமணி விருது.

8 ஆண்டுகளுக்கான விருதுகளைத் தமிழக அரசு  இன்று அறிவித்தது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது, தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தின் வாயிலாகக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கலைப்பணி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திற் போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருதுகளை அறிவித்துத் தமிழக அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் மூன்று பவுன் (24 கிராம் எடையுள்ள பொற்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த விருதுகளை அரசு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாங்குவார்.


மணப்பாறைக்கு வராது வந்த கலை மாமணியே!


மணவையின் மாணிக்கமே!
மலைக்கோட்டை மாநகரின் பொன்மணியே!
மணப்பாறைக்கு வராது வந்த கலை மாமணியே!
சோழ மண்டலத்தின்  செல்வக்களஞ்சியமே!
உன் வாழ்க்கைப்பாறையில்-
அனுபவ உளியால்...
அடிவாங்கி அடிவாங்கி...
அல்லல்பட்டு அல்லல்பட்டு
கை கொடுக்கக் கைகள் இல்லாமல்
நீயே கையூன்றி எழுந்து நிற்கும் அதிசயமே...!

ஏழுக்கும் மேலான...
கலைப்பொக்கிச நூல்களை இயற்றியே
எம்.ஜி.ஆரை ‘எட்டாவது வள்ளல்’ ஆக்கி
 ‘புகழ் மணச் செம்மல்’ ஆக்கி செம்மாந்த ஆச்சர்யமே...!

 உன்னை  நீயே செதுக்கிய  சிற்பி!
கலைமாமணி விருது பெற்று
காலம்போற்றும்  கலைச்சிலையானாய்....!

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.






-மாறாத அன்புடன்,




















 மணவை ஜேம்ஸ்.


*‘கலைமாமணி விருது’
 

பெற்ற தங்களை மணவை வாழ்த்தி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.






சனி, 2 பிப்ரவரி, 2019

பிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்



தமிழ் இளங்கோ காலமானார்


My Photo
பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, 
திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ....,  திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.

தொடர்புக்கு:
அரவிந்தன் (ஒரே மகன்)
9486114574







அமல அன்னை கெபி முன்பு தமிழ் இளங்கோ




 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு அவரது மகன் அரவிந்தன்





























+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
‘ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள் , ஜோசப்விஜூ அவர்கள் பணிபுரியும் தனியார் பள்ளியிலேயே தமிழ் ஆசிரியராக இருக்கிறார். இவரை மதுரை வலைப்பதிவர் சந்திப்பிலும், பின்னர் விபத்தில் சிக்கிய இவரை நலன் விசாரிக்க சென்றபோது பள்ளியிலும் சந்தித்து இருக்கிறேன். சிறந்த கவிஞர்; தமிழ் மீதும் கலைஞர் மீதும் மிகுந்த பற்று உள்ளவர். ’ என்று என்னை அறிமுகப் படுத்திய
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL

இனிய நண்பரும் அழகிய புகைப்படங்களை அருமையாக எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவரும், தமிழ்மீது அதீத பற்றுள்ளவரும் வலைப்பதிவர்கள் அனைவருடனும் அன்புடன் பழகும் அன்னார் அவர்கள்  64 வயதிலேயே
இறந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு  நேரில் சென்று எனது ஆழ்ந்த இரங்கலைத் தெவித்துக் கொண்டேன்;  அங்கு திரு.கரந்தை ஜெயகுமாரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.  

அவரது மகன் திரு. அரவிந்தன் அவர்கள் திருச்சி ஆர்.வி.எஸ்.  பள்ளியில் பணியாற்றி வருகிறார்.   

அவரது மகள் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.   தந்தையின் உடலைப் பார்த்து இறுதி அஞ்சலி செலுத்த மகளுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்பது மேலும் வருத்தமளித்தது. 

-மணவை ஜேம்ஸ்.