ஞாயிறு, 4 மார்ச், 2018

கலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை!



'பிடர் கொண்ட சிங்கமே பேசு



கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடி வீடியோ வெளியானது அடுத்து தொண்டர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் எப்போதும் உடன்பிறப்புகளே என்று அழைப்பார் என்று தொண்டர்கள் காத்துகிடக்கின்றனர். இதனிடையே, கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு உருக்கமான கவிதையை எழுதி அதை அவரிடம் படித்து காட்டியுள்ளார்.


பிடர் கொண்ட சிங்கமே பேசு

 கவிப்பேரரசு வைரமுத்து

இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து

சனி, 3 மார்ச், 2018

‘சிரியா’-வின் அழுகை!



சிரியா போர்






சிரியாபடத்தின் காப்புரிமைREUTERS

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.
ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு படைகள், இப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.





மேப்

இந்நிலையில், போர்நிறுத்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போராடி வருகிறது.
கிழக்கு கூட்டாவின் நிலை என்ன?
சனிக்கிழமையன்று முக்கிய நகரமான டூமாவில் 17 பேர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டதாக சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த வாரம் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.





குழந்தைகள்படத்தின் காப்புரிமைEPA
Image captionசமீபத்திய தாக்குதல்களில் 20 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தாக்குதலுக்கான நேரடி ஈடுபாட்டை ரஷியா மறுத்து வந்தாலும், சிரியா மற்றும் ரஷிய நாட்டு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இக்குழு கூறியுள்ளது.
மேலும், 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
பொதுமக்களை தாக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் சிரியா அரசு, பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு கூட்டாவை விடுவிக்க முயற்சிப்பதாக கூறுகிறது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நிலை, உலகத் தலைவர்களை எச்சரித்துள்ளது. கிழக்கு கூட்டாவை "பூமியின் நரகம்" என ஐ.நா செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் விவரித்துள்ளார்.